காங். தலைமையில் ஒன்றிணைய தயார்

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் ஏற்கனவே ஆட்சி செய்த 4 மாநிலங்களில் பாஜ மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இதுவே, 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜ தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், இத்தனை நாட்களாக காங்கிரஸ் தலைமை வேண்டாம் என்று முரண்டு பிடித்து வந்த மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஒருபடி கீழே இறங்கியுள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘காங்கிரஸ் விரும்பினால் அனைத்து … Read more

மணிப்பூரில் முந்தும் பாஜக: முதல்வர் வேட்பாளர் பைரன் சிங் தொடர்ந்து முன்னிலை

இம்பால்: கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை பெற்று பாஜக ஆட்சி அமைந்தது. இம்முறையும் பாஜகவே ஆட்சியமைக்கும் என்ற கருத்துக்கணிப்புகளை உறுதி செய்யும் வகையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 60 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக 23 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 12, என்பிபி 10, ஐக்கிய ஜனதா தளம் 6, பிற கட்சிகள் 9 என்ற நிலையில் முன்னிலை நிலவரம் இருக்கிறது. 31 … Read more

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: கிராம பஞ்சாயத்து தலைவர் உயிரிழப்பு

அடோரா: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அடோரா பகுதியை சேர்ந்த கிராம பஞ்சாயத்து தலைவர் ஷபீர் அகமது மிர். இவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதிய போலீசார் அவரை ஸ்ரீநகரில் உள்ள பாதுகாப்பு விடுதியில் தங்க வைத்திருந்தனர். ஆனால் போலீசாருக்கு தெரிவிக்காமல் அவர் அங்கிருந்து வெளியேறி தனது வீட்டிற்கு வந்த நிலையில், அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். படுகாயம் அடைந்த  ஷபீர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக … Read more

பாஜ.வின் பாதி பொய் அழிக்கப்பட்டு விட்டது

உபி தேர்தல் குறித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கடந்த தேர்தலை விட பாஜ தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. சமாஜ்வாடி கட்சி கடந்த முறை பெற்ற தொகுதிகளை விட இரண்டரை மடங்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளது. வாக்கு வங்கியும் ஒன்றரை மடங்கு அதிகமாகி இருக்கிறது. இதற்காக மக்களுக்கு நன்றி. பாஜ.வின் இந்த சரிவு தொடரும், பாஜ.வின் பாதிக்கும் மேற்பட்ட பொய்கள் அழிக்கப்பட்டுள்ளன,’ என்று கூறியுள்ளார்.

‘‘தேசிய அளவில் காங்கிரஸுக்கு இனி மாற்று நாங்கள் தான்; கேஜ்ரிவால் பிரதமர் பதவி ஏற்பார்’’- ஆம் ஆத்மி நம்பிக்கை

புதுடெல்லி: பாஜகவுக்கு மாற்றாக இனி தேசிய அளவில் காங்கிரஸ் இடத்தை ஆம் ஆத்மி பெறும், கேஜ்ரிவால் ஒரு நாள் பிரதமராக பதவி ஏற்பார் என அக்கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை … Read more

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் விவசாயிகள் வன்முறையில் ஈடுபடலாம்- மேகாலயா ஆளுநர் எச்சரிக்கை

ஷிலோங்: மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியதாவது: மத்திய அரசுக்கு எனது அறிவுரை என்னவென்றால், விவசாயிகளுடன் மோதாதீர்கள், அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். தங்களுக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துக்கொள்வார்கள். அவர்களுக்கு தேவையானது பேச்சுவார்த்தை மூலம் கொடுக்கப்படவில்லை என்றால் அவர்கள் அதை போராட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்வார்கள்.  போராட்டம் மூலம் பெற முடியவில்லை என்றால் அவர்கள் வன்முறை மூலம் பெற்றுக்கொள்வார்கள். விவசாயிகளை தடுக்க முடியாது. கோரிக்கைகளை எப்படி நிறைவேற்றிக்கொள்வது … Read more

மோடி கட்டுக்கதை

நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்றிருப்பது குறித்து நேற்று முன்தினம் பிரதமர் மோடி பேசும்போது, ‘4 மாநில தேர்தல், குறிப்பாக உபி தேர்தல் முடிவுகள் 2024 மக்களவை தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும்,’ என்று தெரிவித்தார். இது குறித்து தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவிக்கையில், “இந்தியாவுக்கான தேர்தல் போர் 2024ல் நடத்தப்பட்டு வெல்வது யார் என்பது அப்போதுதான் முடிவு செய்யப்படும். மாநிலத் தேர்தல் வெற்றிகளை வைத்து பாஜ உருவாக்கும் கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்.

பகவந்த் மான் அபார முன்னிலை; சித்து, அம்ரீந்தர் சிங் தோல்வி முகம் 

சண்டிகர்: பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் 21906 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் சூழல் உள்ளது. சன்னி, சித்து, அம்ரீந்தர் சிங் தோல்வி … Read more

மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் பலம் 8ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்.!

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்று ஆம் ஆத்மி  ஆட்சியமைக்க உள்ள நிலையில், மாநிலங்களவையில் அக்கட்சியின் பலம் 8ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 13 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 31ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், பஞ்சாப் மாநிலத்தில் காலியாகும் 5 மாநிலங்களவை இடங்களும் அடங்கும். டெல்லியில் இருந்து ஏற்கனவே ஆம் ஆத்மியைச் சேர்ந்த 3 பேர் மாநிலங்களவை எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பஞ்சாப் மாநிலங்களவை தேர்தலில் வெற்றிப்பெற்றால், அக்கட்சியின் மாநிலங்களவை எம்பிக்கள் பலம் … Read more

அமைச்சர் பதவிக்கு ஏங்க கூடாது – பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுக்கு, பகவந்த் மான் வலியுறுத்தல்

சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி முதன்முறையாக அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து வரும் 16ம் தேதி பஞ்சாப் முதலமைச்சராக, அக்கட்சியின் பகவந்த் மான் பதவியேற்க உள்ளார். முன்னதாக சண்டிகரில் நேற்று நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டசபைக் கட்சித் தலைவராக  பகவந்த் மான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் பேசியதாவது: அனைத்து எம்எல்ஏக்களும் சண்டிகரில் தங்காமல், உங்கள் தொகுதிகளில் அதிகபட்ச நேரத்தை செலவிடுங்கள். அமைச்சர் பதவிக்கு … Read more