முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக கூறி வாக்கு எண்ணிக்கை மையத்தை பைனாகுலர் மூலம் கண்காணித்து வந்த சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் தோல்வி

உத்தரபிரதேசத்தில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக கூறி, வாக்கு எண்ணிக்கை மையத்தை பைனாகுலர் மூலம் கண்காணித்து வந்த சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் தோல்வியை தழுவினார். வாக்குப்பதிவு மையங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணிக்கு சமாஜ்வாடி கட்சி ஆட்களை நியமித்திருந்தது. இந்த நிலையில், மேற்கு உத்தர பிரதேசத்தின் ஹஸ்தினாபூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட யோகேஷ் வர்மா, திறந்தவெளி வாகனத்தில் அமர்ந்து, பைனாகுலர் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை பார்வையிட்டு வந்தார். இது தொடர்பான வீடியோ … Read more

உயிருடன் நாடு திரும்பியது அதிசயம்; சுமியில் சிக்கிய மாணவர்கள் கண்ணீர்

புதுடெல்லி: கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 17 நாட்களான நிலையில், அங்கு சிக்கி இருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், இந்தியர்களை அழைத்து வருவதற்காக, ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தது. இதன்படி, 80க்கும் மேற்பட்ட முறை விமானப்படை சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு, இவர்கள் பாதுகாப்பாக இந்திய அழைத்து வரப்பட்டனர். கடைசியாக, சுமி நகரத்தில் சிக்கிய 700 மாணவர்கள், இந்தியர்களை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்த நகரத்தை ரஷ்ய … Read more

பாஜகவில் இருந்து சமாஜ்வாதி கட்சிக்கு தாவிய சுவாமி பிரசாத் மவுரியா தோல்வி முகம்

லக்னோ: சமாஜ்வாதி கட்சியின் சுவாமி பிரசாத் மவுரியா பாசில்நகரில் பின்தங்கியுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த சுவாமி பிரசாத் மவுரியா, இதற்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சியில் முக்கியத் தலைவராக இருந்தார். பலமுறை எம்எல்ஏவாக இருந்த அவரை கட்சி விரோத நடவடிக்கைக்காக 2016-ல் மாயாவதி வெளியேற்றினார். இதையடுத்து, 2017 சட்டப்பேரவை தேர்தலுக்கு சற்று முன்பாக மவுரியா, பாஜகவில் இணைந்தார். அவருக்கும் அவரது மகள் சங்கமித்திரைக்கும் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்தது. இருவரும் எம்எல்ஏவாக … Read more

”குறைகளை தயக்கமின்றி கூற பெண்களுக்கு அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்”-தமிழிசை செளந்தரராஜன்

பெண்கள் தங்கள் குறைகளை தயக்கமின்றி கூறும் வகையிலான அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில், மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நாள் ஊடக பயிற்சி முகாமை தமிழிசை செளந்தரராஜன் தொடக்கி வைத்தார். Source link

மாணவர்கள் படிப்பை கைவிடாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்- பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார். அகமதாபாத்தில்,  பஞ்சாயத்து அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற பொது கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்   குஜராத் மாநிலம் மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் படேலின் பூமி என பிரதமர் குறிப்பிட்டார். தற்போது நாம் சுதந்திரப் பெருவிழாவை கொண்டாடி வரும் வேளையில், கிராமப்புற வளர்ச்சி என்ற காந்தியின் கனவை நனவாக்க வேண்டும்  என்று அவர் கேட்டுக் … Read more

கோவா, மணிப்பூர், உத்தரகாண்டில் முதல்வர் பதவிக்கு பாஜவில் கடும் போட்டி: உத்தரப்பிரதேசத்தில் யோகி மீண்டும் முதல்வர் ஆகிறார்

புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் வெற்றி பெற்ற பாஜ.வில் உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் முதல்வர் பதவியை பிடிப்பதற்கு இக்கட்சியில்  கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.சட்டப்பேரவை தேர்தல் நடந்த 5 மாநிலங்களில், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் பாஜ மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவி, ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, புதிய ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகள், இந்த மாநிலங்களில் தொடங்கி உள்ளன.நான்கு மாநிலங்களில் பாஜ … Read more

தடைகளை தகர்த்தெறிந்து சாதனை – ஆம் ஆத்மி பஞ்சாபை வசப்படுத்திய கதை!

உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. வழக்கமாக இதுபோன்ற சமயங்களில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் பற்றிதான் நாடே பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும். ஆனால், இந்த முறை தேர்தல் கதாநாயகனாக மாறியிருப்பது பஞ்சாப் மாநிலம் தான். உத்தரபிரதேசத்தில் பெரும்பாலானோர் கணித்தது போலவே ஆட்சியை தக்க வைத்திருக்கிறது பாஜக. எதிர்பார்த்தது நடந்துவிட்டால் என்ன சுவாரசியம் இருந்துவிடப் போகிறது என்பதாலோ என்னவோ, உத்தரபிரதேச தேர்தலையும் தாண்டி நாடு முழுவதும் பெரும் பேசுப்பொருளாகவும், … Read more

‘‘இன்குலாப்; மக்களுக்கு வாழ்த்துகள்’’-  கேஜ்ரிவால் நெகிழ்ச்சி: ஆம் ஆத்மிக்கு சித்து வாழ்த்து

சண்டிகர்: பஞ்சாப் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில காங்கிரஸ் தலைவர் சித்து, ‘மக்களின் குரல் கடவுளின் குரல்’ என ஆம் ஆத்மிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் சூழல் … Read more

"தல" ஜெயிச்சிருச்சு.. "கை" தோத்துப் போச்சே.. கவலையில் யோகி!

உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது, நல்ல வெற்றியைப் பெற்றது முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அவரது வலதுகரமான துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளர்யா தோல்வியுற்றது அவரது சற்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாம். யோகி ஆதித்யநாத் உ.பியில் புதிய வரலாறு படைத்துள்ளார். 2வது முறையாக அவர் முதல்வராகிறார். பாஜகவுக்கு எதிராக, ஆட்சிக்கு எதிராக பல விஷயங்கள் எழுப்பப்பட்டாலும் கூட அதையெல்லாம் தாண்டி பாஜகவை ஜெயிக்க வைத்திருக்கிறார் யோகி ஆதித்யநாத். ஆனால் அவரது … Read more

இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ரூ.30,600 கோடி முதலீடு – கெயிர்ன் இந்தியா நிறுவனம்

இந்தியாவின் மொத்த பெட்ரோலிய தேவையில் கிட்டத்தட்ட 85 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வரும் நிலையில், உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 30 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக கேர்ன் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 25 சதவீத பங்கை கேர்ன் இந்தியா வகித்து வருகிறது. அதனை 50 சதவீமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக கேர்ன் இந்தியா தெரிவித்துள்ளது. … Read more