‘கிராமப்புற வளர்ச்சி‘ என்ற பாபுஜியின் கனவை நனவாக்க வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்

அகமதாபாத்: ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து விவாதிப்பதைவிட வேறு எதுவும் இந்திய ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்ற முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாதில் இன்று (மார்ச் 11) பஞ்சாயத்து பிரதிநிகளுக்கான மகாசம்மேளனம் நடைபெற்றது அதில் நாடுமுழுவதிலிருந்தும் வந்திருந்த பஞ்சாயத்து பிரதிநிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “குஜராத் மாநிலம் பாபுஜி (மகாத்மா காந்தி) மற்றும் சர்தார் வல்லபாய் படேலின் பூமி. பாபுஜி … Read more

60 வருஷமா இருந்த சாதனையை.. சுக்குநூறாக உடைத்து.. "விளக்குமாறால்" அள்ளிட்டீங்களேய்யா!

பஞ்சாப் மாநிலத்தை ஆம் ஆத்மி கைப்பற்றியிருப்பதை ஒரு தொடர் கதையே எழுதலாம் போல. அத்தனை சாதனைகளை அது படைத்துள்ளது. டெல்லியில் 2013ம் ஆண்டு எழுச்சி பெற்ற ஆம் ஆத்மியை பலரும் புதிய சக்தியாக கணித்தனர். ஆனால் ஆம் ஆத்மி தனக்கு கிடைத்த பெரிய வெற்றியை தலைக்கு மேல் ஏற்றிக் கொள்ளாமல் திட்டமிட்டு காய் நகர்த்த ஆரம்பித்தது. குட்டி குட்டி மாநிலமாக பிடிக்க அது முடிவெடுத்து அதற்கேற்ப நகர்வுகளை மேற்கொண்டது. அக்கம் பக்கத்தில் முதலில் தன்னைப் பலப்படுத்திக் கொள்ள … Read more

பேடிஎம் நிறுவனத்தின் பேமன்ட்ஸ் வங்கி, புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை

பேடிஎம் நிறுவனத்தின் பேமன்ட்ஸ் வங்கி, புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியில் கண்காணிப்பு பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பண பரிவர்த்தனை தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி முறையாக பின்பற்றவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தணிக்கையாளர்களை நியமித்து ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட ஆர்பிஐ, அவர்கள் அளிக்கும் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே … Read more

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலிலும் பாஜக சாதனை படைக்கும்- உமா பாரதி நம்பிக்கை

போபால்: உத்தர பிரசேதம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதேபோன்று அடுத்த ஆண்டு மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ள தேர்தலிலும் பாஜக சாதனை படைக்கும் என பாஜக மத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான உமா பாரதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த 2003ம் ஆண்டு 230 உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேச சட்டசபையில் 173 இடங்களை பாஜக கைப்பற்றி, திக்விஜய … Read more

தொழில்நுட்ப கோளாறு: தவறுதலாக பாகிஸ்தானில் தரையிறங்கியது இந்தியாவின் ஏவுகணை: வருத்தம் தெரிவித்த இந்திய பாதுகாப்பு அமைச்சகம்

டெல்லி: தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியாவின் ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கியது. ஏவுகணை தரையிறங்கியதற்கு இந்தியா வருத்தம் தெரிவிக்கிறது என இந்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. உக்ரைன்- ரஷியா போர் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவின் ஏவுகணை ஒன்று திடீரென பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்திதது. இந்தியா சார்பில் கடந்த புதன்கிழமை மாலை 6.50 மணியளவில், ஏவப்பட்ட சோனிக் வகை ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததாக தெரிகிறது. இந்தச் சம்பவம் இந்தியா … Read more

மீண்டும் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – விமானி உயிரிழப்பு, துணை விமானிக்கு சிகிச்சை

ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார். 29 வயதான மற்றொரு விமானி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். காஷ்மீரில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரரை மீட்பதற்காக, இந்தியா ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் சென்றது. வடக்கு காஷ்மீரில் பந்திப்போரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே, குரேஷ் செக்டார் பகுதியில் தரையிறங்கும் நேரத்தில், மோசமான வானிலை காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக … Read more

பிரதமர் மோடி மீதான நம்பிக்கையே உ.பி.யில் பாஜக வெற்றிக்கு காரணம்: அமித் ஷா பெருமிதம்

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் மகத்தான வெற்றி, பிரதமர் மோடி மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்று கட்சியின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் உட்பட 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது: உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் பாஜகவுக்கு வெற்றியை தந்துள்ள மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். குறிப்பாக உத்தரப்பிரதேச … Read more

பகுஜன் சமாஜ் கட்சி வாஷ் அவுட் ஆக என்ன காரணம்? – மாயாவதி சொல்றதை கேளுங்க!

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி( பிஎஸ்பி) படுதோல்வி அடைந்துள்ளது. நான்கு முறை மாநிலத்தில் ஆட்சி புரிந்துள்ள அக்கட்சி, இந்தத் தேர்தலில் ஒரேயொரு இடத்தில் மட்டும் வென்றுள்ளதுடன் அதன் வாக்கு சதவீதமும் கணிசமாக சரிந்துள்ளது பிஎஸ்பி நிர்வாகிகள், தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் , பிஎஸ்பியின் தோல்விக்கான காரணங்களை அக்கட்சியின் தலைவர் மாயாவதி பட்டியலிட்டு விளக்கி உள்ளார். ‘பிஎஸ்பி பாஜகவின் ‘பி டீம்’ என தேர்தலில் மக்களை தவறாக வழிநடத்திவிட்டனர். எங்களை … Read more

பாலக்காட்டில் கோவில் திருவிழா ஊர்வலத்தில் பங்கேற்றிருந்த யானை மிரண்டு ஓட்டம்.!

கேரள மாநில பாலக்காட்டில் திருவிழா ஊர்வலத்தில் பங்கேற்றிருந்த யானை, மேலே ஆள் அமர்ந்திருக்கும் போதே திடீரென மிரண்டு ஓடியதோடு, லாரியை முன்னோக்கியே துரத்திச் செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. சண்டை மேளம் முழங்க ஊர்வலம் நடந்து கொண்டிருந்த நிலையில், ஊர்வலத்தில் பங்கேற்றிருந்த யானை திடீரென அலறியடித்து ஓடியது. யானையின் மீது அமர்ந்திருந்த இரண்டு பேர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த நிலையில், தனது தும்பிக்கையாலும், தந்தத்தை வைத்தும் லாரியை முன்னோக்கியே துரத்திச் சென்றது. லாரி … Read more

ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார் யோகி ஆதித்யநாத்

லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்க உள்ளார். ஆட்சியமைக்க 202 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக 255 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.கூட்டணி கட்சிகளான அப்னா தளம் (எஸ்) 12 தொகுதிகளிலும், நிஷாத் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்நிலையில், பாஜக தலைமையிலான புதிய அரசு அமைப்பதற்கு ஏதுவாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது பதவியை ராஜினாமா செய்தார். … Read more