காந்திகளின் தலைமையில் இனி காங்கிரஸ் வெற்றி பெறாது: அஸ்வனி குமார் கருத்து

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வனி குமார், தனியார் ஊடகத்துக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி 5 மாநில தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து நான் மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பானது எதிர்காலத்தில் குறைவாக இருக்கும். மேலும் நாட்டில் நிலவும் அரசியல் சூழ் நிலைகளை கருத்தில் கொண்டால் காங்கிரஸ் ஒரு பிராந்திய கட்சியாக சுருங்கி விடும். தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியின் இறுதிக் காலத்தை குறிக்கிறது. … Read more

காலில் விழுந்த பகவந்த் மான்.. பிடித்து நிறுத்திய சிசோடியா.. தடுக்கத் தவறிய கெஜ்ரிவால்!

பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் அபாரமாக வெற்றி பெற்று, முதல்வராகப் பதவியேற்கவுள்ள பகவந்த் மான் சிங் இன்று டெல்லியில் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்தபோது நடந்த நிகழ்வு வைரலாகி வருகிறது. பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி பல வரலாறுகளைப் படைத்து தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. முதல் முறையாக காங்கிரஸ், அகாலிதளம் அல்லாத கட்சி ஒன்று பஞ்சாபில் ஆட்சியமைக்கவுள்ளது. 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக தொகுதிகளை வென்ற கட்சியாக ஆம் … Read more

புதுச்சேரியில் பெட்ரோல் பங்க்கில் காவலரைத் தாக்கிய போதை ஆசாமிகள்.!

புதுச்சேரி எல்லைப் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மது போதையில் தமிழகக் காவலரை ரௌடிகள் சிலர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் என்பவர் காவலராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 9ஆம் தேதி கனகசெட்டிக்குளத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் அவர் தனது இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மது போதையில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், தங்களது பைக்குக்கு பெட்ரோல் நிரப்ப பணம் … Read more

தொழில்நுட்ப கோளாறு: தவறுதலாக பாகிஸ்தானில் தரையிறங்கியது இந்தியாவின் ஏவுகணை

டெல்லி: தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியாவின் ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கியது. ஏவுகணை தரையிறங்கியதற்கு இந்தியா வருத்தம் தெரிவிக்கிறது என இந்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ஷேன் வார்ன் மரணத்துக்கு எடைக் குறைப்பு காரணமா?

பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் மரணத்துக்கு, Liquid diet எனப்படும் நீர்ஆகார உணவுமுறையே காரணம் எனக் கூறப்படும் நிலையில், அதன் பலன் மற்றும் பாதகங்கள் குறித்து பார்ப்போம். தாய்லாந்தில் மரணமடைந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் 14 நாட்கள் தொடர்ந்து Liquid diet எனப்படும் நீர் ஆகார முறையை கடைப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி சொகுசு விடுதியில் உயிரிழந்து கிடந்தார். நீர்ஆகார முறை என்பது, குறிப்பிட்ட நாட்களுக்கு நீர்ம … Read more

சைக்கிளை நொறுக்கியது யோகி புல்டோசர்: பாஜக வெற்றி பற்றி ஹேமமாலினி கருத்து

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்தது. அப்போது யோகி ஆதித்யநாத் முதல்வராக நியமிக்கப்பட்டார். அதன்பின், மாபியாக்கள், ஊழல் புகாரில் சிக்கியவர்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் ஆதித்யநாத் புல்டோசர் மூலம் இடித்து தள்ளினார். அதனால், ‘புல்டோசர் ஆதித்யநாத்’ என்று அவரை அழைக்கத் தொடங்கினர். இந்நிலையில், உ.பி. தேர்தலில் மீ்ண்டும் தனிப்பெரும்பான்மை கட்சியாக பாஜக உருவெடுத்து தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைக்கிது. இதுகுறித்து பாஜக மக்களவை எம்.பி.யும் … Read more

பஞ்சாப் முதல்வராக வரும் 16ல் பதவியேற்கிறார் பகவந்த் மன்!

பஞ்சாப் மாநில முதலமைச்சராக வரும் 16 ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மன் பதவி ஏற்க உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதன்படி, சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்துள்ளது. வெறும் 18 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி … Read more

உ.பி. தேர்தல் – அசாதுதீன் ஓவைசி கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.!

உத்தரபிரதேச தேர்தலில், அசாதுதீன் ஓவைசியின் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் மோசமான தோல்வியை சந்தித்ததோடு, ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 100 தொகுதிகளை தேர்ந்தெடுத்து அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அந்த கட்சிக்கு சற்று அதிக வாக்குகள் கிடைத்திருந்தாலும், பெரும்பாலான இடங்களில் ஐந்தாயிரத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்து தோல்வியை சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 403 … Read more

சொகுசு வசதிகள் பெற்றதாக பதிவான வழக்கில் சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமின்

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு சசிகலாவுக்கு பெண்கள் சிறையில் தனி அறை ஒதுக்கப்பட்டது. அவருக்கு கைதி எண் கொடுக்கப்பட்டு கைதிகளுக்கான ஆடைகளும் வழங்கப்பட்டன. ஆனால் சிறையில் இருந்தபோது சசிகலாவுக்கு பல்வேறு சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சசிகலா சிறையில் இருந்து அடிக்கடி சாதாரண உடையில் வெளியில் சென்று வந்ததாகவும் தகவல் பரவியது. … Read more

புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க Paytm Payment வங்கிக்கு தடை: ரிசர்வ் வங்கி உத்தரவு

டெல்லி: புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க Paytm Payment வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. Paytm Payment வங்கியின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகளை ஆய்வு செய்ய நிபுணரை நியமிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவத்தனை செயலியில் முன்னணி வகிக்கு நிறுவனம் பேடிஎம்.  சிறிய பெட்டிக்கடை முதல் வணிக வளாகங்கள் வரை தற்போது யுபிஐ மூலம் பணபரிவர்த்தனை செய்யும் வசதி உள்ளது. இந்தியாவில் கோடிக்கணக்கானோர் இதுபோன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஆப்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஆப்களை நிர்வகிக்க … Read more