இரண்டாவது முறையாக உ.பி. முதல்வர்: யோகிக்கு திலகமிட்டு வாழ்த்திய முலாயம் சிங் பேத்தி .

லக்னோ: உத்தரப்பிரதேச தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அம்மாநில முதல்வராகி இருக்கும் யோகி ஆதித்யநாத்திற்கு சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவின் பேத்தி திலகமிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. இதில், பஞ்சாப் தவிர உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில், மோடி – யோகி அலையின் காரணமாக பாஜக அறுதிப்பெரும்பான்மை … Read more

சோனியாவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய மம்தா… மோடிக்கு குட்டு!

உத்தரப் பிரதேதம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டும் சும்மா பேருக்கு வெற்றி பெற்றுள்ளது அக்கட்சித் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சொல்லிக் கொள்ளும்படியாக இருந்த பஞ்சாப் மாநில ஆட்சியையும் ஆம் ஆத்மி கட்சியிடம் காங்கிரஸ் பறிகொடுத்துவிட்டது. இதனால் அக்கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் மிகவும் சோர்வடைந்துள்ளனர். அவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் … Read more

காங். விரும்பினால் 2024 பொதுத் தேர்தலின் போது இணைந்து போட்டியிடத் தயார் – முதலமைச்சர் மம்தா பானர்ஜி

காங்கிரஸ் கட்சி விரும்பினால் 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது இணைந்து போட்டியிடத் தயார் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய மம்தா, சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்  2024ஆம் ஆண்டு தேர்தலில் எதிரொலிக்கும் என்பதற்கு சாத்தியமில்லை என குறிப்பிட்டார். மேலும், சட்டமன்ற தேர்தல் முடிவுகளைக் கண்டு ஆக்ரோஷமடைய வேண்டாம் என்றும் நேர்மறையாக சிந்தியுங்கள் என்றும் மம்தா பானர்ஜி கட்சிகளுக்கு அறிவுறுத்தினார்.  Source link

காங்கிரஸ் விரும்பினால் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைவரும் இணையலாம்- மம்தா அழைப்பு

கொல்கத்தா: ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியதாவது:- கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட மூன்று மாதங்களில் 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது போதும். உத்தர பிரதேச தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருட்டு மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளன. சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சோர்ந்துவிடாமல், அந்த இயந்திரங்களை தடயவியல் சோதனை நடத்தும்படி வலியுறுத்த வேண்டும். அகிலேஷ் … Read more

கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கச்சத்தீவு: கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. அந்தோணியார் உருவம் பதித்த கொடியேற்றப்பட்டு சிலுவை பாதை திருப்பலி, அந்தோணியார் தேர்பவனி நடைபெறுகிறது. இந்தியாவை சேர்ந்த 76 பக்தர்கள், இலங்கையை சேர்ந்த 88 பக்தர்கள் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.

"பாஜக வெற்றிப்பெற்றதற்கு சிலருக்கு பத்ம விருதுகள் கொடுக்கலாம்"-நக்கலடித்த சஞ்சய் ராவத்

உத்தரபிரதேசத்தில் பாஜகவின் வெற்றிக்கு உதவிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கும், அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கும் பத்ம விபூஷன் விருதுகளை வழங்க வேண்டும் என்று சிவசேனா மூத்த தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தெரிவித்தார். இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உத்தரபிரதேசத்தில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில், உத்தரபிரதேசம் அவர்களின் மாநிலம். உத்தரபிரதேச தேர்தலில் கவனிக்கப்பட … Read more

"தந்திரம் செய்யாதீர்கள்… மாநில வெற்றியின் தாக்கம் 2024 மக்களவைத் தேர்தலில் இருக்காது" – பிரதமருக்கு பிரசாந்த் கிஷோர் பதில்

புதுடெல்லி: ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தைத் தவிர்த்து 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதால், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக வெற்றி ஆகிவிட்டதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். இது தொடர்பாக தேர்தல் உத்தி வகுப்பாளரும், மோடி அலை என்ற வார்த்தையை பாஜகவுக்காக உருவாக்கிக் கொடுத்தவருமான பிரசாந்த் கிஷோர், பிரதமருக்கு ட்வீட் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர், ”இந்தியாவுக்கான போட்டி 2024-ல் நடத்தப்பட்டு முடிவுகள் எட்டப்படும். அதை மாநிலத் தேர்தல்கள் நிர்ணயிக்காது. இதைத் … Read more

ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு மோடி சொன்ன மெசேஜ்: நான் ஓய்வு பெற மாட்டேன்!

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு புது தெம்பூட்டியுள்ளது. ஐந்தில் நான்கு பாஜக வசம் வந்துள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற காங்கிரஸ் கட்சிக்கு எந்த மாநிலத்திலும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பாஜகவில் மேல் மட்டம் முதல் கீழ் கட்டம் வரை உற்சாகம் கரை புரண்டோடுகிறது. தேர்வு முடிவுகள் வெளியான சிறிது நேரத்திலேயே கொண்டாட்டத்துக்கான கட்டுப்பாட்டை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள பாஜக அலுவலகம் சென்று … Read more

பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராக மார்ச் 16ல் பதவியேற்பு

பஞ்சாப் முதலமைச்சராக, பகவந்த் மான் வருகிற 16ஆம் தேதி பதவியேற்கிறார் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரில் அழைப்பு டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பகவந்த் மான், பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு சண்டிகரில் இன்று மாலை பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் ஒருமனதாக தேர்வாகிறார் சுதந்திரபோராட்ட வீரர் பகத்சிங் பிறந்த … Read more

பஞ்சாப் முதல்வராக 16-ம் தேதி பதவியேற்கிறார் பகவந்த் மான்

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியை ஆம் ஆத்மி தோற்கடித்து பஞ்சாபில் முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் தனது ராஜினாமா கடிதத்தை ராஜ் பவனுக்குச் சென்று இன்று ஆளுநரிடம் வழங்கினார். சட்டசபையை கலைத்து ஆம் ஆத்மியின் புதிய சட்டசபைக்கு வழி வகுக்குமாறும் பரிந்துரைத்தார். தொடர்ந்து, ஆட்சி அமைக்க அழைக்குமாறு பகவந்த் மான் நாளை ஆளுநரை … Read more