நொய்டா கட்டுக்கதையை உடைத்தார் யோகி

லக்னோ: உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று யோகி ஆதித்ய நாத், 2-வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். கடந்த 70 ஆண்டு கால உத்தர பிரதேச அரசியல் வரலாற்றில் 5 ஆண்டுகள் பதவியை நிறைவு செய்த எந்தவொரு முதல்வரும் மீண்டும் ஆட்சியை பிடித்தது கிடையாது. முதல்முறையாக அந்த சாதனையை யோகி ஆதித்ய நாத் படைத்துள்ளார். உத்தர பிரதேச முதல்வராக … Read more

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஏன் தோல்வி அடையவில்லை?

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பஞ்சாப் தவிர ஏனைய நான்கு மாநிலங்களில் – உத்தரப் பிரதேசம், கோவா, உத்தராகண்ட், மணிப்பூர் – பாஜக பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக பெற்ற வெற்றி மிக முக்கியமானது. 2024 பாராளுமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதற்கு இந்த வெற்றி ஒரு அறிகுறி என்று பாஜக எதிர்ப்பாளர்களே கவலைப்படுகிறார்கள். இந்தத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கடந்த இரு வருடங்களாக பல பிரச்சினைகள் … Read more

கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்திய பொருளாதாரத்தைப் பாதிக்கும் – ஐஎம்எப்

இந்தியாவில் நிதி நிர்வாகம் சிறப்பாக உள்ளதாகவும், கச்சா எண்ணெய் விலை உயர்வு அதைப் பாதிக்கும் என்றும் பன்னாட்டுப் பண நிதியத்தின் மேலாண் இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார். உக்ரைன் போர்ச் சூழலில் உலக அளவிலான பொருளாதாரத்தின் தாக்கம் குறித்துப் பன்னாட்டுப் பண நிதியத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய நிதியத்தின் துணை மேலாண் இயக்குநர் கீதா கோபிநாத், இந்தியா எரியாற்றல் தேவைக்குப் பெரிதும் இறக்குமதியைச் சார்ந்துள்ளதாகவும், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் … Read more

குஜராத்தில் மோடி ‘ரோடுஷோ’- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

அகமதாபாத்: 5 மாநில சட்டசபைத் தேர்தலில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகியவற்றில் பா.ஜனதா வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. பஞ்சாப்பில் காங்கிரசை வீழ்த்தி ஆம்ஆத்மி முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார். 4 மாநில தேர்தலில் பா.ஜனதாவின் அபாரமான வெற்றிக்கு பிறகு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடி ரோடுஷோ நடத்தி பா.ஜனதாவின் வெற்றியை கொண்டாடினார். மலர்களால் … Read more

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

சித்தூர்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உடல்நல பாதிப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். சந்திரசேகர் ராவுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'தெற்கத்திய மாடல்' முதல் '80-20 ஃபார்முலா' வரை – உ.பி. தேர்தலில் ஒவைசி கோட்டைவிட்டதன் பின்னணி என்ன?

ஹைதராபாத்: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை ஒரு மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவாக, விறுவிறுப்பாகவும் பரப்பாகவும் கொண்டாடி பாஜகவை அரியணையில் ஏற்றியுள்ளனர் உ.பி மக்கள். இந்தத் தேர்தலில் உற்சாகத்துடன் களமிறங்கிய அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 97 இடங்களில் போட்டியிட்டு ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. இதன் பின்னணி என்ன? உத்தரப் பிரதேசத்தில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அங்கு மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 255 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான அப்னா … Read more

மமதாவுக்கு.. இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்.. மின்னல் வேகத்தில் தாவி ஓடிய எம்ஜிபி!

கோவா மாநிலத்தில் திரினமூல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, வாக்கு எண்ணிக்கை முழுசாகக் கூட முடியாத நிலையில் அப்படியே யு டர்ன் போட்டு பாஜகவுக்கு ஓடி விட்டது. அரசியல் என்றாலே சுயநலம்தான். அதிலும் தேர்தல் அரசியல் என்று வந்து விட்டால், நமக்கு என்ன லாபம் என்று மட்டும்தான் கட்சிகள் பார்க்கும் என்பதை கோவா தேர்தல் நிரூபித்துள்ளது. கோவா மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் அணிகள் தவிர திரினமூல் காங்கிரஸ் ஒரு … Read more

உக்ரைனின் சுமி நகரில் சிக்கியிருந்த இந்தியர்கள் 242 பேருடன் டெல்லி வந்த சிறப்பு விமானம்

உக்ரைனின் சுமி நகரில் இருந்து ஆப்பரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட 242 இந்தியர்களுடன் போலந்து நாட்டில் இருந்து புறப்பட்ட விமானம், டெல்லி வந்தடைந்தது. உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சுமி நகரில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பயந்து இரண்டு வாரங்களாக பதுங்கு குழிக்குள் பதுங்கியிருந்த சுமார் 600 இந்தியர்கள் கடந்த புதன்கிழமை, ரயில் மூலம் போலந்து நாட்டின் போல்டோவா நகருக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில், அவர்களில் 242 பேரை ஏற்றிக் கொண்டு நேற்றிரவு போலந்தின் … Read more

லிட்டருக்கு ரூ.6 வரை அதிகரிக்க முடிவு: பெட்ரோல்-டீசல் விலை இன்று உயர வாய்ப்பு

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல்- டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அதிகாரத்தை கடந்த 2017-ம் அண்டு மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியது. அதன் பிறகு தினமும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் அடிக்கடி விலை அதிகரிக்கப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து ரூ.110 வரை விற்கப்பட்டது. அதே நேரத்தில் டீசல் விலை ரூ.100-ஐ நெருங்கியது. அதன் பிறகு … Read more

உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ட்வீட்

லக்னோ: உத்திரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்திரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக கூட்டணி 273 இடங்களில் வெற்றிபெற்றது. இது கடந்த 2017 தேர்தலில் பாஜக வென்றதை விட 49 இடங்கள் குறைவாகும். இந்நிலையில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, 111 இடங்களிலும், அதன் கூட்டணி 125 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இது 2017 சட்டப்பேரவை … Read more