'தோத்தாலும் நாங்க கெத்து தான்!' – அகிலேஷ் யாதவ் பெருமிதம்!

கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று தந்த மக்களுக்கு சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நன்றி தெரிவித்து உள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில், 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் கடந்த 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக – அகிலேஷ் யாதவுக்கு இடையே நேரடி போட்டி நிலவியது. இந்நிலையில் நேற்று, உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் … Read more

பா.ஜ.க.வின் வெற்றி எண்ணிக்கையை குறைத்துள்ளோம் – சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வின் வெற்றி எண்ணிக்கையை குறைத்திருப்பதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 111 இடங்களை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதியின் வாக்கு வங்கி ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது எனவும், வாக்களித்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். இந்த தேர்தலில் பா.ஜ.கவின் வெற்றி எண்ணிக்கையை குறைத்திருப்பதாகவும் அகிலேஷ் யாதவ் கூறினார். கடந்த தேர்தலில் … Read more

பெங்களூருவில் சிறுமியை 4 நாட்கள் அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் – 6 பேர் கைது

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள பந்தீபால்யா அருகே வசித்து வந்தவர் ராஜேஸ்வரி, கலாவதி. இவர்கள் இருவரும் அப்பகுதியில் தையல் பயிற்சி பள்ளி வைத்து நடத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில் இருவரும் அந்த பகுதி மக்களுக்கு முககவசம், கையுறைகள் தைத்து வழங்கினர். இதனால் இவர்கள் மீது அப்பகுதி மக்களிடையே நம்பிக்கை ஏற்பட்டது. இதையடுத்து அவர்களது தையல் பயிற்சி பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை படிக்க அனுப்பி வைத்தனர். அதே பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி தனது 16 … Read more

வெற்றி பெற முயற்சி செய்வதற்கு உ.பி. தேர்தல் முடிவு ஒரு பாடமாக அமைந்துள்ளது! பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேச்சு ..!!

லக்னோ: உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம். வெற்றி பெற முயற்சி செய்வதற்கு உ.பி. தேர்தல் முடிவு ஒரு பாடமாக அமைந்துள்ளது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், பகுஜன் சமாஜ் கட்சியின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமையவில்லை. உ.பி.யில் 2017க்கு முன் பாஜக எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. தேர்தல் முடிவால் மனம் தளர்ந்து … Read more

பஞ்சாப், உத்தராகண்ட் மாநிலங்களில் முதல்வர்கள் உட்பட முக்கிய தலைவர்கள் தோல்வி

புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தலில் முதல்வர்கள் உட்பட முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவி உள்ளனர். அமரீந்தர் சிங்: பஞ்சாப் முன்னாள் முதல்வரும் காங்கிரசில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டவருமான அமரீந்தர் சிங் பாட்டியாலா தொகுதியில் தோல்வி அடைந்தார். ஆம் ஆத்மியின் அஜித் பால் சிங் கோலியிடம் இவர் தோல்வியடைந்தார். சரண்ஜித் சிங் சிங் சன்னி: பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தனது சொந்த தொகுதியான சம்கார் சாஹிப், மற்றும் … Read more

"பயங்கர புத்திசாலியா பேசறீங்களே".. மோடியை வாரி விட்ட பிரஷாந்த் கிஷோர்!

2024ம் ஆண்டு வரப் போகும் முடிவைத்தான் 2022 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதை பிரஷாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார். அந்தத் தேர்தலை அப்போது பார்த்துக் கொள்வோம். இப்போது நடந்த தேர்தல் மாநில அளவிலானது என்றும் கிஷோர் கூறியுள்ளார். பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோர், 5 மாநில சட்டசபைத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் முடிவு குறித்து தெரிவித்திருந்த கருத்துக்கும் அவர் பதில் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக … Read more

குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி “ரோடு ஷோ”

குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி “ரோடு ஷோ” தேர்தல் வெற்றிக்காக பிரதமருக்கு வாழ்த்து மழை.! சொந்த மாநிலத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு.! சொந்த மாநில குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம் டெல்லியில் இருந்து குஜராத்திற்கு தனி விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி வருகை குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து பிரதமர் ரோடு ஷோ 5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பின் குஜராத் மாநிலத்திற்கு பிரதமர் மோடி வருகை உ.பி. உள்ளிட்ட 4 … Read more

பா.ஜனதா வெற்றிக்கு உதவிய மாயாவதி, ஓவைசிக்கு பத்ம விபூஷன், பாரத ரத்னா வழங்க வேண்டும்: சஞ்சய் ராவத்

ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. 403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் ஆளும் பா.ஜனதா தொடக்கத்தில் இருந்தே முன்னிலை பெற்றது. அந்த கட்சி தனியாக 255 இடங்களை பெற்றது. ஆட்சியமைக்க 202 இடங்கள் தேவை என்ற நிலையில், கூட்டணி கட்சிகள் உதவியின்றி தனிப்பெரும்பான்மையாக ஆட்சியமைக்க இருக்கிறது. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 273 இடங்களை பிடித்துள்ளது. பா.ஜனதாவுக்கு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி மட்டுமே ஈடுகொடுத்தது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 125 இடங்களை பிடித்தது. … Read more

சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர லஞ்சம் தந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமின்

பெங்களூரு: சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர லஞ்சம் தந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமின் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சசிகலா இருந்தபோது சொகுசு வசதிக்காக ரூ.2 கோடி லஞ்சம் தந்ததாக புகார் அளிக்கப்பட்டது.

'இச்சமூகம் வெட்கி தலைகுனிய வேண்டும்': 10 வயது சிறுமியின் கர்ப்ப வழக்கில் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை

திருவனந்தபுரம்: “10 வயது சிறுமியின் கர்ப்பத்தைக் கலைக்க ஒரு தாய் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அந்தச் சிறுமியின் கர்ப்பத்துக்கு அவரின் தந்தையே காரணம். இதை நினைத்து இந்தச் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டும்” என்று கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி.குன்னிகிருஷ்ணன் கூறியுள்ளார். கேரளாவில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட 10 வயது குழந்தையின் 30 வார கர்ப்பத்தைக் கலைக்க அவரது தாய் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய, இந்த வழக்கில் ஒரு வாரத்திற்குள் முடிவை அறிவிக்குமாறு மாநில … Read more