சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா ஆஜர்

பெங்களூரு: சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா ஆஜர் ஆகியுள்ளார். சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சசிகலா இருந்தபோது சொகுசு வசதிக்காக ரூ.2 கோடி லஞ்சம் தந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் செஷல்ஸ் கடற்படையினர் சிறைபிடிப்பில் இந்திய மீனவர்கள்; தொடரும் எல்லை பிரச்னை

குமரி மாவட்டம் தூத்தூர் மற்றும் பூத்துறை பகுதியை சேர்ந்த சூசை நாயகம், அந்தோணி என்பவர்களது படகுகளையும் அதில் இருந்த 25 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நேற்று செஷல்ஸ் நாட்டு கடற்படையினர் சிறைபிடித்து உள்ளனர். இதோடு சேர்த்து 5 படகுகளை சீஷெல்ஸ் நாட்டு கடற்படையினர் கைது செய்து 58 மீனவர்களை சிறைபிடித்து வைத்துள்ளனர். ஏற்கெனவே கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து கடந்த 22 ம் தேதி ஆள்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற சின்னத்துறை பூத்துறை தூத்தூர் … Read more

தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்று சக்தியாக உருவெடுப்போம்: ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் நம்பிக்கை

புதுடெல்லி: பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் போட்டியிட்ட சங்ரூர் தொகுதியில் தொண்டர்களிடம் பேசிய கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராகவ் சத்தா கூறிய தாவது: பாஜகவுக்கு எதிராக மக்களின் நம்பிக்கையை பெற்ற கட்சி யாக ஆம் ஆத்மி உள்ளது. பஞ்சாப் தேர்தலில் காங்கிரசை ஒதுக்கிவிட்டு ஆம் ஆத்மியை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர். வரும் காலங்களில் தேசிய அளவில் இயல்பான முறையில் மாற்று சக்தியாக ஆம் … Read more

இந்தியாவில் புதிதாக 4,194 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: கொரோனா புதிய பாதிப்பை விட அதன் பிடியில் இருந்து நாள் தோறும் மீள்பவர்கள் எண்க்கை அதிகமாக உள்ளது. இதனால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்தவகையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரம், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 6,208 பேர் நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். தினசரி பாதிப்பு … Read more

2 மாநிலத்தில் மட்டுமே காங். ஆட்சி

ராஜஸ்தான், சட்டீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கிறது. இந்நிலையில், 5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில், பஞ்சாப்பில் காங்கிரசை காலி செய்து ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்து உள்ளது. இதனால், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் மட்டும் தற்போது காங்கிரஸ் ஆட்சி நீடிக்கிறது. தொடர்ந்து, சரிந்து வரும் காங்கிரசின் சாம்ராஜ்ஜியத்தால், தொண்டர்கள் முதல் மூத்த தலைவர்கள் … Read more

5 மாநில தேர்தல் முடிவு: இந்தியாவின் அரசியல் வரைபடம் எப்படி மாறியுள்ளது?

5 மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து இந்தியாவின் அரசியல் வரைபடம் சில முக்கிய மாறுதல்களை கண்டிருக்கிறது. சட்டப்பேரவை தேர்தல் நடந்த 5 மாநிலங்களில் உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா ஆகிய 4 மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இதனால் அக்கட்சி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆகவே நீடிக்கிறது. அந்தவகையில் இந்திய அரசியல் வரைபடத்தில், கட்சிகள் ஒவ்வொன்றும் எந்தெந்த மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது என்ற விவரம் இங்கே:   பாஜக – உத்தரப்பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, உத்தராகண்ட், இமாசல பிரதேசம், கோவா, அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், … Read more

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் அகிலேஷின் கூட்டணி முயற்சி 3-வது முறையும் தோல்வி

லக்னோ: உத்தர பிரதேச தேர்தல்களில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் சிங் யாதவின் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி முயற்சிகள் 3-வது முறையும் தோல்வி அடைந்துள்ளது. உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தோல்வியடைந்தது. அந்தத் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் கூட்டணி அமைத்து … Read more

25 ஆண்டுகளில் இந்தியா முன்னணி நாடாக உயரும்- நிர்மலா சீதாராமன்

கவுகாத்தி: அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில், தொழிலதிபர்களுடன் பட்ஜெட்டுக்கு பிந்தைய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- கடந்த ஆண்டு பட்ஜெட்டை போலவே இந்த ஆண்டு பட்ஜெட்டும் மூலதன செலவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. உள்கட்டமைப்பு திட்டமிடல், முதலீடு ஆகியவற்றுக்கு பிரதமரின் கதிசக்தி திட்டம் வழிகாட்டும். உள்கட்டமைப்பு துறையில் பெரிய அளவில் முதலீடு செய்வது, பொருளாதாரம் மீண்டு வருவதற்கு எப்போதும் அவசியம். அதே சமயத்தில், தொழில்நுட்பத்தை … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 4,194 பேருக்கு கொரோனா; 255 பேர் உயிரிழப்பு: தொற்றில் இருந்து 6,208 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 4,194 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,29,84,261ஆக உயர்ந்தது.* புதிதாக 255 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

'ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்க காரணம் இதுதான்" – பிரதமர் மோடி விளக்கம்

”இந்தியாவின் பல தேவைகள் ரஷ்யா, உக்ரைன் நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.   ரஷ்யா- உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிப்பதன் காரணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், ”ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் போரில் இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது மற்றும் அனைத்து பிரச்சனைகளும் விவாதத்தின் மூலம் தீர்க்கப்படும் என்று நம்புகிறது. பொருளாதாரம், பாதுகாப்பு, கல்வி மற்றும் அரசியல் ரீதியாக போரில் ஈடுபட்ட நாடுகளுடன் … Read more