உபி.யில் பாஜக வெற்றி – வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாய சங்கம் என்ன சொல்கிறது?

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தியவர்களில் முக்கியமானவரான பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் டிக்கைட், உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜகவின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது பாஜக. இந்த வெற்றியைத் தொடர்ந்து பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகிறார். இந்த நிலையில் மத்திய அரசின் மூன்று வேளாண் … Read more

வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு: டெல்லியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வெளியில் தொண்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உ.பி., உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அதற்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதுதான் காரணம் என்று காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் நேற்று குற்றம் சாட்டினார். மேலும், கட்சி தலைமை அலுவலகத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது, ‘மின்னணு வாக்குப் பதிவு … Read more

நாடு முழுவதும் பஞ்சாப் புரட்சி: கெஜ்ரிவால் கருத்து

பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று  ஆட்சியை பிடித்துள்ளது. இதை, டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து ஆடிப்பாடி கொண்டாடினர். இந்நிலையில், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்  டிவிட்டரில் நேற்று வௌியிட்டுள்ள பதிவில், ‘இந்த புரட்சிகரமான தீர்ப்பு அளித்ததற்கு பஞ்சாப் மக்களுக்கு நன்றி,’ என குறிப்பிட்டுள்ளார். முதல்வர் வேட்பாளர் பக்வந்த் சிங் மானுடன் நின்று கொண்டு வெற்றி சின்னத்தை காண்பிக்கும் புகைப்படத்தையும் … Read more

பிரதமர் நரேந்திர மோடி அலை தொடர்கிறதா? – உ.பி.யில் 1985-க்கு பிறகு 2-வது முறையாக ஆட்சி அமைத்து பாஜக சாதனை

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான அரை இறுதி போட்டியாக உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் கருதப்படுகிறது. இங்கு ஆளும் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டால், அது அக்கட்சியின் பல்வேறு எதிர்கால திட்டங்களை தகர்க்கும் நிலை இருந்தது. ஆனால் நேற்று வெளியான உ.பி. தேர்தல் முடிவுகளால் பாஜகவின் எதிர்காலம் கூடுதல் பிரகாசமடைந்துள்ளது. முடிவுக்கு வந்து விட்டதாக கருதப்பட்ட ‘பிரதமர் மோடி அலை’ இன்னும் ஓயவில்லை என்றே தெரிகிறது. இவரது அலையின் தாக்கம், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா தேர்தல்களிலும் ஏற்பட்டுள்ளது. ‘குஜராத் … Read more

5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் அக்கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே பாஜக வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்தனர். அறுதிப் பெரும்பான்மைக்கு 202 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 255 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 273 தொகுதிகள் கிடைத்துள்ளன. அகிலேஷ் யாதவ் தலைமையிலான … Read more

தமிழக ஐஏஎஸ் அதிகாரி தோல்வி

தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமை ஆணையராக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி ஜக்மோகன் சிங் ராஜூ. இவர் பஞ்சாப் தேர்தலில் போட்டியிட விருப்ப ஓய்வு பெற்று பாஜ சார்பில் அமிர்தரசஸ் கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சித்துவை எதிர்த்து போட்டியிட்டார். இந்த தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. ஐஏஎஸ் அதிகாரி ஜக்மோகன் சிங் ராஜூ வெறும் 7,255 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூரில் வெற்றி; 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி: பஞ்சாபில் ஆட்சியை பிடித்து ஆம் ஆத்மி அபாரம்

லக்னோ: உத்தர பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பஞ்சாபில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. உத்தர பிரதேசத்தில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அங்கு மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 255 தொகுதிகளிலும் … Read more

உ.பி.யில் 255 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது பா.ஜ.க. – தேர்தல் முடிவின் முழு விவரம்

லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தில் 7 கட்டங்களாக நடந்த சட்டசபை தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் உ.பி.யில் பா.ஜ.க. ஆட்சியைத் தக்கவைக்கும் என்றே கூறியது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. ஆரம்பம் முதலே பா.ஜ.க. வேட்பாளர்கள் முன்னிலை பெற்றனர். உ.பி.யில் மொத்தம் உள்ள 403 இடங்களில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. … Read more

1.45 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஒன்றிய அமைச்சர் மகன் வெற்றி

உத்தர பிரதேசம் மாநில, நொய்டா தொகுதியில் பாஜ வேட்பாளராக ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் போட்டியிட்டார். இத்தொகுதியில் மொத்த உள்ள 2,74,473 வாக்குகளில் பங்கஜ் சிங் 1,93,185 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்சாடி வேட்பாளர் சுனில் சவுத்ரி 47,962 வாக்குகளும், பகுஜன் சமாஜ் வேட்பாளர் கிருபா ராம் சர்மா 13,251 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் பன்குரி பதக் 11,167, ஆம் ஆத்மி வேப்டாளர் பங்கஜ் அவனா 5,147 … Read more

‘‘எங்களை கேலி பேசியவர்களுக்கு மக்கள் பாடம் கற்பித்து விட்டார்கள்’’- பஞ்சாபில் பெரும் வெற்றி பெற்ற பகவந்த் மான் பெருமிதம்

சண்டிகர்: ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் 58,206 வாக்குகள் பெற்று சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளார். பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் சூழல் உள்ளது. ஆளும் காங்கிரஸ் 2-ம் … Read more