பனாஜியில் பாரிக்கர் மகன் தோல்வி; வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் மான்சரெட்டா ‘அதிருப்தி’

பனாஜி: கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பனாஜி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அடனாஸியோ மான்செரட்டா மிகச் சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவர் அதிருப்தியில் உள்ளார். பாஜக ஆதரவாளர்களே தனக்கு வாக்களிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “எனது வெற்றி வித்தியாசம் மிகவும் குறைவு. எனக்கு எனது கட்சிக்காரர்களே வாக்களிக்காதது தான் … Read more

பஞ்சாப் தேர்தல் ஆம் ஆத்மி அமோகம்..! ஆட்சியை பிடித்தது

பஞ்சாப் மாநிலத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தனிப்பெருங்கட்சியாக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.  பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளை கொண்ட சட்டமன்றத்திற்கு கடந்த மாதம் 20-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில், முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோண்மனி அகாலிதளம் என நான்கு முனை போட்டி நிலவியது. அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அமிரிந்தர் சிங், காங்கிரஸில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய நிலையில், பா.ஜ.க.வுடன் … Read more

கடுமையாக உழைத்தும் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை – அசாதுதீன் ஓவைசி ஆதங்கம்

புதுடெல்லி: உ.பி.யில் மொத்தம் உள்ள 403 இடங்களில் 273 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல் மந்திரி ஆகிறார். சமாஜ்வாடி கட்சி கூட்டணி 111 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் முதன்முதலாக தேர்தல் களத்தில் குதித்த ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தோல்வியை சந்தித்தது. அக்கட்சி ஒரு சதவீத வாக்குகளைக்கூட பெற முடியவில்லை. இந்நிலையில், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கூறியதாவது:- உத்தர பிரதேச … Read more

மாயமான மாயாவதி

உத்தர பிரதேச அரசியலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி கோலோச்சியது. ஆனால், இந்த தேர்தலில் அக்கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.  மொத்தம் உள்ள 403 இடங்களில் 1 இடத்தை மட்டுமே அக்கட்சி வென்றுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 21 சதவீத வாக்குகளை பெற்ற இக்கட்சி, 19 இடங்களில் வென்றது. இந்த தேர்தலில் 12  சதவீத வாக்குகளை பெற்றுள்ள அக்கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2007ம் ஆண்டு … Read more

'கிங் மேக்கர்' ஆக நினைத்த பாஜவுக்கு பஞ்சாபில் பெரும் தோல்வி

புதுடெல்லி: பஞ்சாபில் தொங்குசபை ஏற்பட்டால் ‘கிங் மேக்கர்’ என எண்ணிய பாஜக இரண்டு தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. இங்கு எதிர்க்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி, முதன்முறையாக பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இதில், பஞ்சாப் மாநில பாஜக தலைவரான அஸ்வின் சர்மா, பத்தான்கோட் தொகுதியில் முன்னணி வகிக்கிறார். இக்கட்சியின் மற்றொரு முக்கியத் தலைவரான ஜங்கிலால் மஹாஜன், முக்கேரியன் தொகுதியில் முன்னணியில் உள்ளார். இதன் முடிவுகள் வெளியாவதற்கு நான்கு நாட்கள் முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் … Read more

பாலியல் வன்கொடுமைக்கு யார் காரணம்? – அமைச்சர் பதிலால் ஷாக் ஆன முதல்வர்!

பாலியல் வன்கொடுமை தொடர்பாக சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மாநில அமைச்சர் அளித்துள்ள பதில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், 2022 – 2023 ஆம் நிதி ஆண்டுக்கான மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து மாநில நாடாளுமன்ற விவகார அமைச்சர் சாந்தி தாரிவால் பேசும் போது, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நாம் முதலிடத்தில் … Read more

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வெற்றி 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.! உ.பி சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வெற்றி பாஜக வேட்பாளரை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார் Source link

ஜனாதிபதி தேர்தல் பாஜ.வுக்கு சாதகம்

நேற்று முடிந்த 5 மாநில தேர்தலை தொடர்ந்து, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களும், காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல்களும் அடுத்தடுத்து நடக்க உள்ளன. அதனால், இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜ.வுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது. அதேபோல், எதிர்க்கட்சிகளுக்கும் வெற்றி கிடைத்திருந்தால் பாஜ.வின் ஆதிக்கத்தை  தகர்ப்பதற்கான பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கும். குறிப்பாக, ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தும் எதிர்க்கட்சிகளின் திட்டம் வெற்றி பெற்றிருக்கும்.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் … Read more

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – அன்று துடிப்பான சீடன்… இன்று உ.பி-யின் பாஜக முகம்!

லக்னோ: உத்தரப் பிரேதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராவது உறுதியாகியிருக்கிறது. 5 முறை எம்.பி, இரண்டாவது முறை உ.பி முதல்வர் என அரசியல் களமாடும் யோகி ஆதித்யநாத்தின் அரசியல் பாதை அத்தனை எளிதாக அமைந்துவிடவில்லை. கடந்த 2017-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஆரம்பத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நட்சத்திர பேச்சாளராகக் கூட அறிவிக்கப்படாத யோகி ஆதித்யநாத், பின்னர் அம்மாநிலத்தின் பாஜக முதல்வராக கட்சியால் அறிவிக்கப்பட்டார். 1991-ம் ஆண்டு தேர்தலுக்கு பின்பு, 26 … Read more

பாஜக போடும் அடுத்த மாஸ்டர் பிளான்; பிரதமர் மோடி சாதிப்பாரா?

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ஒரே நாடு, ஒரே கொள்கை என்ற நிலைப்பாடு பல்வேறு விஷயங்களில் முன்னெடுப்பதை பார்க்க முடிகிறது. ரேஷன் கார்டு, பத்திரப்பதிவு உள்ளிட்டவற்றில் தொடங்கி தேர்தல் வரை விஷயம் நீண்டு கொண்டே செல்கிறது. இதில் ’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை செயல்படுத்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பான மசோதா பாஜகவின் பெரும்பான்மையால் மக்களவையில் எளிதில் நிறைவேற்றப்பட்டு விடும். ஆனால் மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லாததால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் … Read more