நொய்டாவும்… பதவி இழப்பும்…

உபி.யில் கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் உள்ள  நொய்டாவுக்குச் சென்ற உத்தரப் பிரதேசத்தின் எந்த முதலமைச்சரும் ஆட்சியை  இழக்க நேரிடும் என்று கடந்த 30 ஆண்டுகளாக கூறப்பட்டு வந்தது. 2007ல் நொய்டாவுக்கு சென்ற மாயாவதி, 2012ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தார். சமாஜ்வாடி கட்சியின் முலாயம்  சிங் யாதவ், பாஜ.வின் ராஜ்நாத் சிங் மற்றும் கல்யாண் சிங் ஆகியோர் தாங்கள்  முதலமைச்சராக இருந்தபோது நொய்டாவுக்குச் செல்வதைத் தவிர்த்தனர். 2012ம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற முலாயம் சிங் … Read more

ஸ்டாண்ட் அப் காமெடியன் டு பஞ்சாப் முதல்வர்… – பக்வந்த் மானின் வாழ்க்கைப் பயணம்

ஒரு முன்னாள் முதல்வரால் முதல் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த ஒருவர், 11 ஆண்டுகள் கழித்து முதல்வர் பதவியை கைப்பற்றினால் எப்படி இருக்கும்… பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பக்வந்த் மான் விஷயத்தில் இந்தச் சம்பவம் உண்மையாக நடந்துள்ளது. ஆம் ஆத்மியின் இரண்டாவது முதல்வர் என்ற பெருமையை பெறவுள்ளார் பக்வந்த் சிங் மான் என்கிற பகவந்த் மான். யார் இந்த பக்வந்த் மான்? – பக்வந்த் மான் பஞ்சாப்பின் சங்ரூர் மாவட்டத்தின் சடோஜ் கிராமத்தில் பிறந்தவர். … Read more

கடற்கரை மாநிலத்தில் மீண்டும் மலரும் தாமரை – முதல்வர் ஹேப்பி!

கோவா மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உறுதிப்படத் தெரிவித்து உள்ளார். கோவா மாநிலத்தில், மொத்தம் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்க 21 தொகுதிகள் தேவை. இந்நிலையில் ஆளும் பாஜக மொத்தம் உள்ள 40 … Read more

உ.பி.யில் கடந்த தேர்தலை விட தற்போது 50 இடங்களுக்கு மேல் குறைவாக பெற்ற பாஜக

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்தபோதும் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் தற்போது 50 இடங்களுக்கு மேல் குறைவாக பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் 2ஆம் இடம் பிடித்துள்ள சமாஜ்வாதி கடந்த முறையை விட 75 இடங்களுக்கு மேல் அதிகம் பெற்றுள்ளது. பஞ்சாபில் முதன்முறையாக ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சி கடந்த தேர்தலை விட 70 இடங்களுக்கு மேல் அதிகம் பெற்று மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 90 இடங்களுக்கு மேல் கைப்பற்றியுள்ளது. அங்கு ஆட்சியை இழந்த காங்கிரஸ் கடந்த … Read more

உ.பி. சட்டசபை தேர்தல் – யோகி ஆதித்யநாத் 1.03 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

லக்னோ: உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. தொடக்கம் முதலே ஆளும் பா.ஜ.க. மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இந்நிலையில், முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், கோரக்பூர் நகர தொகுதியில் 1,65,499 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் சுபாவதி சுக்லா 62,109 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார். இதன்மூலம் சமாஜ்வாடி வேட்பாளரை விட … Read more

ஒரே நாடு; ஒரே தேர்தல் தேர்தல் ஆணையம் தயார்

ஒரே நாடு; ஒரே தேர்தல் என்ற கோஷத்தை பிரதமர் மோடி அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக மக்கள், கல்வியாளர்கள், வல்லுனர்கள், அறிவுஜீவிகள் விவாதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதேநேரம் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பது நல்ல பரிந்துரை; ஆனால் இதற்கு அரசியலமைப்பில் மாற்றம் … Read more

உத்தராகண்ட் மக்களால் 'பாஜக ஜிந்தாபாத்' என எப்படி சொல்ல முடிகிறது? – ஹரிஷ் ராவத் வியப்பு

டேராடூன்: “மக்கள் மாற்றத்திற்காக வாக்களிப்பார்கள் என நம்பினோம். எங்களின் முயற்சியில் இடைவெளி இருந்திருக்கலாம். அதனை ஏற்றுக்கொண்டு தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்” என உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார். உத்தராகண்ட மாநிலத்தில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக முன்னிலை வகித்து பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் … Read more

பாஜகவுக்கு பெண்கள் சமாஜ்வாதிக்கு ஆண்கள்: பாஜக தலைவர்!

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியை பிடிக்க பாஜக , சமாஜ்வாடி, காங்கிரஸ் , பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. தேர்தலுக்கு முந்தைய, … Read more

உத்தரகண்ட் வரலாற்றில் முதன்முறையாக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்த பா.ஜ.க..!

உத்தரகண்ட் மாநில வரலாற்றில் முதன்முறையாக தொடர்ந்து இரண்டாவது முறையாக பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்துள்ளது.  70 தொகுதிகளை கொண்ட உத்தரகண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்தலில், ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில், உத்தரகண்டில் ஆட்சியை பிடிக்க, 36 இடங்கள் தேவை என்ற நிலையில்,பா.ஜ.க. பெரும்பான்மைக்கு தேவையானதை விட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், உத்தரகண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. … Read more

தனியாக போராடி தோற்ற அகிலேஷ்

உபி தேர்தலில் பாஜ.வுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, கட்சி தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய உள்துறை அமைச்சர்  அமித்ஷா உள்பட அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தனர். ஆனால் சமாஜ்வாடி  கட்சிக்கு அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மட்டுமே  பிரசாரத்தில் முக்கியமாக வலம் வந்தார். மேற்கு முதல்வர் மம்தா பானர்ஜி ஓரிரு நாள் அகிலேஷை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவரை தவிர வேறு பெரிய தலைவர்கள் யாரும் களத்துக்கு வரவில்லை.தேர்தலுக்கு  முன்பே விஜய் ரத யாத்திரை … Read more