இது சும்மா டிரையல் தானாம்… .2024 இல் தான் மெயின் பிக்சராம்… மோடி உற்சாக பேச்சு!

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களில் பஞ்சாப் தவிர பிற மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கிறது. பாஜகவின் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி. இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: இந்த தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள் மகிழ்ச்சியுடன் பாஜகவுக்கு வாக்களித்துள்ளார்கள், இந்த … Read more

பஞ்சாப் வெற்றி எதிரொலி.. அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மன் போன்று உடையணிந்து வந்த சிறுவன்

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த மன் போன்று உடையணிந்து வந்த சிறுவனின் புகைப்படம், வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிக இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனை, அக்கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அக்கட்சியின் … Read more

தென்கொரிய அதிபராக யூன் சுக் தேர்வு – பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: தென் கொரியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சிக்கும், மக்கள் சக்தி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணும் நடைபெற்றது. இதில் மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த யூன் சுக் 48.59 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஜனநாயக கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங் 47.80 சதவீதம் வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.  இந்நிலையில், தென் கொரிய அதிபர் தேர்தலில் … Read more

கோவா சட்டமன்ற தேர்தல்: 40 தொகுதிகளை கொண்ட கோவாவில் பாஜக 19 தொகுதிகளில் வெற்றி

கோவா சட்டமன்ற தேர்தல்: 40 தொகுதிகளை கொண்ட கோவாவில் பாஜக 19 தொகுதிகளில் வெற்றி பெற்று ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 7 தொகுதிகளில் வெற்றிபெற்று 4 தொகுதிகளில்  முன்னிலையில் உள்ளது.

"சாதி – மத அரசியலுக்கு சமாதி கட்டியிருக்கிறார்கள் உ.பி மக்கள்” – முதல்வர் யோகி வெற்றி உரை

லக்னோ: “உத்தரப் பிரதேசத்தில் கிடைத்திருக்கும் வெற்றி, சாதி – மத அரசியலுக்கு சமாதி கட்டியிருப்பதுடன், மக்கள் வளர்ச்சியின் பக்கம் இருப்பதை தெளிவாக உணர்த்தியுள்ளது” என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்நாத் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது பாஜக. இந்த வெற்றியைத் தொடர்ந்து பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகிறார். லக்னோவில் கட்சித் தொண்டர்களிடம் வெற்றி உரையாற்றிய முதல்வர் யோகி … Read more

தேர்தலில் பாடம் கற்றுக்கொண்டோம்.. ராகுல் காந்தி உருக்கம்!

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பஞ்சாபில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. மீதம் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடந்தது. இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே உத்தரப் பிரதேசத்தில் பாஜக பலமாக முன்னிலையில் இருந்தது. உ.பியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்து யோகி ஆதித்யநாத் முதல்வராக நீடிக்கவுள்ளார். உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களையும் பாஜக … Read more

கோவா தேர்தலில் வெற்றி பெற்று ஜோடியாக சட்டமன்றம் செல்லும் 3 தம்பதிகள்..

கோவா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மூன்று தம்பதியினர், ஜோடியாக சட்டமன்றத்திற்கு செல்கின்றனர். 40 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படிருக்கும் நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஷ்வஜித் ரானே மற்றும் அவரது மனைவி திவ்யா ஆகிய இருவரும் வால்போய் மற்றும் போரியம் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். விஷ்வஜித் 8085 வாக்குகள் வித்தியாசத்திலும், திவ்யா 13,943 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக வேட்பாளர் மான்செரேட் பனாஜி தொகுதியிலும், அவரது மனைவி ஜெனிபர், தலெய்காவ் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர். … Read more

4 மாநில தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றி ஒரு வரலாற்று சாதனை – பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜ.க. முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. 4 மாநில தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ஹோலி மார்ச் 10-லிருந்து தொடங்கும் என தொண்டர்கள் உறுதி அளித்தனர். ஆனால், ஹோலி பண்டிகை இப்போதே தொடங்கி … Read more

3 சுயேட்சைகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் கோவாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்ப்பு

கோவா: கோவா தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கிறது. 40 தொகுதிகளை கொண்ட கோவாவில் பாஜக 20 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 3 சுயேட்சைகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பாஜக ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் – 11, மற்றவை – 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

'ஒரு ஹீரோ ஹோண்டா பைக், இரு அறை வீடு' – முதல்வர் சரண்ஜித்தை தோற்கடித்த மொபைல் கடை ஓனர்

சண்டிகர்: பஞ்சாப்பில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை மொபைல் கடை நடத்திவரும் ஒருவர் தோற்கடித்துளளார். அதுவும், 37,558 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் சரண்ஜித் சிங்கை தோற்கடித்துள்ளார். பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்தன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆளும் … Read more