பாலியல் பலாத்காரம் குறித்து கருத்துக்கு மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்-ராஜஸ்தான் மந்திரி தகவல்

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் அம்மாநில சட்டசபையில் பேசிய  மந்திரி சான்டி தரிவால், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் மாநிலங்களில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் இருப்பதாகவும்,அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். ஏனெனில் இது ஆண்களின் மாநிலம் என்றும் அவர் கூறியிருந்தார். இது குறித்த வீடியோவை பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பகிர்ந்துள்ளார். மந்திரியின் இந்த பேச்சிற்கு ராஜஸ்தான் பாஜக மாநில தலைவர் சதீஷ் புனியா … Read more

4 மாநில தேர்தல் வெற்றி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளோம்; மக்கள் மனதில் நாம் இடம் பிடித்திருக்கிறோம் : பிரதமர் மோடி

டெல்லி: பாஜக மீது ஏழை மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை 4 மாநிலங்களின் தீர்ப்பு காட்டுகிறது என பிரதமர் மோடி உரையாற்றினார். 4 மாநில தேர்தல் பாஜகவின் வெற்றி, ஒரு வரலாற்று சாதனை என கூறினார். பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். உ.பி.யில் 37 ஆண்டுகளுக்கு பின் ஆளுங்கட்சியே மீண்டும் வென்றுள்ளது. உ.பி.-யில் முதல்முறையாக பாஜக 2வது தொடர் வெற்றி என கூறினார். ஹோலி மார்ச் 10-லிருந்து தொடங்கும் என தொண்டர்கள் உறுதி … Read more

"சாதியை ஓரம்கட்டி வளர்ச்சி அரசியலைத் தேர்ந்தெடுத்த உ.பி. மக்கள்" – பிரதமர் மோடி வெற்றி உரை

புதுடெல்லி: “உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆட்சியில் இருந்தாலும் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. கருத்துக் கணிப்புகள் தவறானவை என கோவா தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன” என்று வெற்றி உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசதம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள அமோக வெற்றிக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் உரையாற்றி வருகிறார். அதில் அவர் பேசியது, “இந்த ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்று, பாஜகவை … Read more

மூன்று தம்பதிகள் வெற்றி… சட்டமன்ற தேர்தலில் சுவாரஸ்யம்!

40 தொகுதிகளை கொண்ட கோவா மாநில சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக அங்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிகிறது.. இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மூன்று தம்பதிகல் வெற்றி பெற்றுள்ள சுவாரஸ்யமான சம்பவம் கோவாவில் நிகழ்ந்துள்ளது. பாஜக அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் விஷ்வஜித் ரானே லால்போய் தொகுதியிலும், அவரது மனைவி திவ்யா போரியம் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களை போலவே, … Read more

உத்தர பிரதேசத்தில் 2 இடங்களை கூட தாண்ட முடியாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் – தொண்டர்கள் வருத்தம்

லக்னோ: மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டசபை தொகுதிகளில் பாஜக 265 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதை அடுத்து மீண்டும் அந்த மாநிலத்தில பாஜக  ஆட்சி அமைக்கிறது.  அதற்கு அடுத்தப்படியாக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி 133 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆனால் அம்மாநிலத்தின் மற்றொரு முக்கிய எதிர்க்கட்சியான மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஒரே ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்றும் நிலை உள்ளது. தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கோ … Read more

பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி பஞ்சாபில் ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி

டெல்லி: 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாபில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி – 92, காங்கிரஸ் – 18, பாஜக – 2, மற்றவை – 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ரயில் பயணிகளுக்கு மீண்டும் போர்வை, தலையணை – தடை நீக்கியது ரயில்வே நிர்வாகம்

கொரோனா பரவலை தடுப்பதற்காக ரயில் பயணிகளுக்கு போர்வை, தலையணை வழங்குவதற்கு தடைசெய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது தடை நீக்கப்பட்டுள்ளது.  ரயில் பயணிகள் சிரமத்தை தவிர்ப்பதற்காக தலையணை மற்றும் போர்வை பெறும் வசதி ரயில்வே நிர்வாகத்தால் அமல்படுத்தப்பட்டிருந்தது. அதன்படி ஆன்லைனில் முன்பதிவு செய்து போர்வை மற்றும் தலையணையை பயணிகள் பெற்றுவந்தனர். இடையே கொரோனா தொற்று காரணமாக இந்த வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று கணிசமாக குறைந்துவிட்டதால் ரயிலில் குளிர்சாதன வசதியுள்ள பெட்டியில் (AC வகுப்பு) பயணிகளுக்கு மீண்டும் பழைய … Read more

அபார வெற்றி பெற்ற ஆம் ஆத்மி: பஞ்சாபில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு?

சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தற்போதைய நிலையில் 42.13% வாக்குகள் பெற்று அபரிமிதமான வெற்றியை பதிவு செய்து வருகிறது. பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் சூழல் உள்ளது. ஆளும் … Read more

5 மாநிலங்களில் படுதோல்வி.. கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி!

உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தராகண்ட், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக, சமாஜ்வாதி இடையே பிரதான போட்டி நிலவியது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ஆட்சியை தொடரவிருக்கிறார். கோவா, மணிப்பூர், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களிலும் பாஜக தனது ஆட்சியை தொடரவிருக்கிறது. பஞ்சாபை பொறுத்தவரை நல்ல … Read more

உத்தர பிரதேசத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் அமோக வெற்றி.!

உத்தர பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகனுமான பங்கஜ் சிங், சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளார். அம்மாநிலத்தின் நொய்டா தொகுதியில் போட்டியிட்ட பங்கஜ் சிங், தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 2 லட்சத்து 44 ஆயிரம் வாக்குகளை பெற்று மாநிலத்திலேயே அதிகபட்சமாக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். சுமார் 70 சதவீத வாக்குகளை பெற்ற அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த … Read more