"ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்தத் தயார்" – தலைமை தேர்தல் ஆணையர்

ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்காக அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐக்கு பேட்டியளித்த அவர், தேர்தல் ஆணையம் எப்போதும் வெளிப்படை தன்மையுடன் செயல்படுவதாக தெரிவித்தார். வாராணாசியில் வெளியே எடுத்துச் செல்லப்பட்ட இயந்திரங்கள் பயிற்சிக்காக கொண்டுவரப்பட்டவை என்றும் வாக்குப்பதிவின்போது இயந்திரங்கள் பழுதாகும் பட்சத்தில் மாற்று இயந்திரங்களாக அவை பயன்படுத்த வைக்கப்பட்டவை என்றும் தெரிவித்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு … Read more

வாரணாசி மாவட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி முகம்: முனைப்புடன் முகாமிட்ட மோடியைக் கைவிடாத காசிவாசிகள்

புதுடெல்லி: உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வாரணாசி மாவட்ட அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி முகம் கண்டுள்ளது. இதன்மூலம், அதன் மக்களவை தொகுதி எம்.பி.யான பிரதமர் நரேந்திர மோடியின் கவுரவத்தை காசிவாசிகள் காத்துள்ளனர் எனக் கருதப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது வாரணாசி. இதன் எட்டு தொகுதிகளுக்கு கடைசிகட்டத் வாக்குப்பதிவில் நடைபெற்ற தேர்தல், பிரதமர் மோடிக்கு சவாலானது. இதற்கு அங்கு அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் முகாமிட்டு தீவிரப் பிரச்சாரம் செய்திருந்தனர். சமாஜ்வாதிக்கு ஆதரவாக மேற்கு வங்க … Read more

சிங்கிள் டிஜிட்டை தாண்டல… தேசிய கட்சிகளின் தொண்டர்கள் ஷாக்!

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் அண்மையில் நடைபெற்றது. மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் மலை 6 மணி நிலவரப்படி, பாஜக 249 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 115 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. இந்த இரு கட்சிகளுக்கு நேர்மாறாக தேசிய கட்சியாக கூறப்படும் காங்கிரஸ் வெறும் 2 இடங்களிலும், மாநிலத்தில் மற்றொரு பெரிய கட்சியாக சொ்ல்லப்படும் பகுஜன் சமாஜ் கட்சி ஒரேயொரு இடத்தில் மட்டும் … Read more

விவசாயிகள் போராட்டம் நடந்த லக்கிம்பூர் மாவட்டத்தில் பா.ஜ.க. வெற்றி.!

விவசாயிகளின் போராட்டம் நடைபெற்ற உத்தரபிரதேசம் மாநிலத்தின் லக்கீம்பூர் கேரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில், காரை விட்டு மோதிய சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், அதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் சில பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகன் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக அந்த மாவட்டத்திலுள்ள … Read more

பிரதமரின் நலத்திட்டங்களில் மக்கள் வைத்த நம்பிக்கைதான் பாஜகவின் வெற்றிக்கு காரணம்- அமித் ஷா

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவில் பாஜக பஞ்சாபை தவிர 4 மாநிலங்களையும் கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. பாஜகவின் வெற்றியை தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் கிராமங்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கான நலத் திட்டங்களில் மக்கள் நம்பிக்கை வைத்ததன் எதிரொலியால் உத்தர பிரதேசத்தில் பாஜக மகத்தான வெற்றிப் பெற்றுள்ளத என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமித் ஷா தனது … Read more

கேரள ஓட்டலில் பயங்கரம் நீரில் மூழ்கடித்து குழந்தை கொலை பாட்டியின் கள்ளக்காதலன் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் ஓட்டல் அறையில் பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற பாட்டியின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே அங்கமாலியை சேர்ந்தவர் சஜீவ். அவரது மனைவி டிக்சி. இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை, ஒன்றரை வயதில் நோரா மரியா என்ற ஒரு பெண் குழந்தை. சஜீவனின் தாய் சிப்சி (50). தாய், மகன் 2 பேரும் போதைப்பொருள் கடத்தல் உள்பட பல்வேறு … Read more

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ராகுல்காந்தி வெளியிட்ட கருத்து

உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா என ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்த ஐந்து மாநிலங்களில் ஒன்றில் கூட காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான ராகுல் காந்தி ட்விட்டர் மூலம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.  Humbly accept the people’s verdict. Best wishes to those who have won the mandate. … Read more

உ.பி.-யில் 15 ஆண்டுகளில் முதல்வர் ஆகும் முதல் எம்எல்ஏ – யோகிக்கு இன்னொரு சிறப்பு

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளில் முதல் முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. ஒருவர் முதல்வர் ஆகிறார். அந்தச் சிறப்பை முதல்வர் யோகி ஆதித்யநாத் பெறுகிறார். நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை பெற்று வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத்தே தொடர்வார் என பாஜக அறிவித்துள்ளது. இதன் மூலமாக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் அம்மாநில முதலமைச்சர் … Read more

'இனிமே நம்ம தான்!' – ஜாலியில் ஹோலி கொண்டாடிய யோகி!

உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை மீண்டும் வெற்றி பெற செய்த மக்களுக்கு, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நன்றி தெரிவித்து உள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில், மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. நாட்டிலேயே அதிக சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மாநிலம் உத்தர பிரதேச மாநிலம் தான். இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் கட்சி தான், மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியை அலங்கரிக்கும். உத்தர பிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடித்து விட்டால், மத்தியில் ஆட்சியை … Read more

ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த தயார் – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த தயாராக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து பேட்டியளித்த தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நல்ல பரிந்துரைதான் ஆனால், இது குறித்து நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டு, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றார். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நடைபெற்ற 3 நாடாளுமன்ற தேர்தல்கள் அந்த முறையிலேயே நடைபெற்றதாக குறிப்பிட்ட அவர், சில சமயங்களில் சட்டமன்றமும் சில … Read more