“இனி காந்திகளின் தலைமை காங்கிரஸில் வேலைக்கு ஆகாது” – அஸ்வினி குமார்

உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா என ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்த ஐந்து மாநிலங்களில் ஒன்றில் கூட காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த பிப்ரவரி வாக்கில் விலகிய அஸ்வினி குமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார். “தேர்தல் முடிவுகளிலிருந்து ஒன்றே ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. இனி காந்திகளின் தலைமை காங்கிரஸ் கட்சியில் வேலைக்கு ஆகாது என்பதுதான் அது. அவர்கள் இனி … Read more

2014-ல் போட்ட விதை… 'டெல்லி மாடல்'… ஆம் ஆத்மி பக்குவமாக பஞ்சாப்பை வசப்படுத்திய வரலாறு!

ஆம் ஆத்மியின் மற்றொரு கோட்டையாக மாறியிருக்கிறது பஞ்சாப். 117 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி 90 ப்ளஸ் இடங்களை வசப்படுத்துகிறது. இவ்வளவு பெரிய வெற்றிக்கான விதை இன்று, நேற்று போடப்பட்டதல்ல… 2014-ம் ஆண்டிலேயே இந்த வெற்றியை நோக்கி பயணத்தைத் தொடங்கியது. சொல்லப்போனால், தனது கோட்டை எனப்படும் டெல்லிக்கு முன்பே பஞ்சாப்பில் அடித்தளத்தை அமைத்தது ஆம் ஆத்மி. 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. நாடு முழுவதும் மோடி அலை … Read more

"முதல்வரே.. அரே.. அரே".. மண்ணைக் கவ்விய 2 இந்நாள்.. 5 முன்னாள் முதலமைச்சர்கள்!

5 மாநில சட்டசபைத் தேர்தலில் 2 இந்நாள் முதல்வர்களும், 5 முன்னாள் முதல்வர்களும் மண்ணைக் கவ்வியுள்ளனர். இதுவரை இப்படி இத்தனை முதல்வர் பதவி வகித்தவர்கள் கூண்டோடு தோல்வியைத் தழுவியது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி நாடு முழுவதும் பல்வேறு வகையான விவாதங்களைக் கிளப்பியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. உத்தரகாண்ட், மணிப்பூர், கோவாவிலும் பாஜக ஆட்சியே மீண்டும் அமைகிறது. பஞ்சாப் மாநிலத்தில் … Read more

உ.பி.,யில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி… 37 ஆண்டுக்கு பின் சாதனை..!

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியை தக்க வைத்துள்ளது. 37 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த மாநிலத்தில் ஆளும் கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட சாதனையை பாரதிய ஜனதா நிகழ்த்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே பெருவாரியான தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர். நேரம் செல்ல, செல்ல பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே சென்றது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாரதிய ஜனதா … Read more

உ.பி வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்த பா.ஜ.க?

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குப்பதிவு இயந்திரங்களை பா.ஜ.க மாற்றிவிட்டதாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி குற்றம் சாட்டியது.  அதிகாரிகள் சிலர் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாகனத்தில் வைத்து எடுத்து செல்வது போன்ற புகைப்படங்கள், வீடியோக்களை சமாஜ்வாடி கட்சி வெளியிட்டது. இதையடுத்து பா.ஜ.க வாக்குகளை திருடிவிட்டதாக அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி இருந்தார்.  இந்நிலையில் அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகாரிகளின் பயிற்சிக்காக எடுத்து செல்லப்பட்டது என … Read more

இன்று இரவு 7 மணிக்கு பாஜக அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி

டெல்லி: பிரதமர் மோடி இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு செல்கிறார். 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்க உள்ள நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

கோரக்பூர் தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் யோகி ஆதித்யநாத் வெற்றி

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் தனது தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். 403 தொகுதிகளைக்கொண்ட உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கு ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆட்சியைப் பிடிக்க 202 தொகுதிகள் தேவை என்ற நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி 250க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. இதனால் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா … Read more

‘‘நான் தீவிரவாதியா? உண்மையான தேசபக்தன்; எங்கள் புரட்சி நாடுமுழுவதும் பரவும்’’- அரவிந்த் கேஜ்ரிவால் நெகிழ்ச்சி

புதுடெல்லி: கேஜ்ரிவால் ஒரு தீவிரவாதி அல்ல, நாட்டின் மகன், உண்மையான தேசபக்தர் என்பதை பஞ்சாப் மக்கள் உறுதி செய்துள்ளனர் என டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு … Read more

அன்று தமிழ்நாட்டில் தொடங்கிய காங்கிரசின் வீழ்ச்சி இன்று பஞ்சாப் வரை தொடரும் பரிதாபம்!

தேசிய அளவிலும், மாநிலங்களிலும் பாஜக இன்று எப்படி அசுர பலத்துடன் உள்ளதோ இதேபோன்றுதான் நேரு, இந்திரா ராஜீவ் காலம் வரை காங்கிரஸும் மத்தியிலும், மாநிலங்களிலும் கோலோச்சி இருந்தது. காங்கிரசின் கை ஓங்கியிருந்த அந்த காலத்திலேயே அதன் முதல் வீழ்ச்சி 1967 இல் தமிழகத்தில் தொடங்கியது. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து அதுநாள்வரை மக்களவைத் தேர்தலோ, மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலோ பெரும்பாலும் காங்கிரஸ்தான் வெற்றி பெற்று கொண்டிருந்தது. காங்கிரசின் அந்த 20 ஆண்டுகால சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மாநில … Read more

விமான டிக்கெட் விலை குறைய வாய்ப்பு..!

கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால், இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் சர்வதேச விமான பயணக் கட்டுப்பாடுகளை விலக்கியுள்ள நிலையில், சர்வதேச விமான டிக்கெட் விலை 50 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 2 ஆண்டுகளாக விதிக்கப்பட்ட சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளால் விமான டிக்கெட் விலை சுமார் இரு மடங்கு உயர்ந்ததாக கூறப்படுகிறது. தற்போது பல நாடுகள் கட்டுபாடுகளை தளர்த்தி வருவதால், லுஃப்தான்ஸா குழுமத்தின் சுவிஸ் ஏர்லைன்ஸ், வரும் நாட்களில் சர்வதேச விமான … Read more