94 வயதில் பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தோல்வி..தொண்டர்கள் அதிர்ச்சி..!!

சண்டிகர்: லம்பி தொகுதியில் சிரோமணி அகாலிதள கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் சிங் பாதல் தோல்வியடைந்தார். மிக மூத்த அரசியல்வாதியும், முன்னாள் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் தோல்வியுற்றார். பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோன்மணி அகாலிதளம் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் 90 தொகுதிகளுக்கு மேல் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து அபார வெற்றியை பெற்றிருக்கிறது. இந்நிலையில், பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் … Read more

“வாக்குச்சாவடிகளிலிருந்து வெளியேறி விடாதீர்கள்” – தொண்டர்களுக்கு சமாஜ்வாதி வேண்டுகோள்

உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்துவரும் நிலையில், அங்கு அவர்களை எதிர்த்துள்ள அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாதி கட்சியினர், இன்னும் தங்களுக்கான வெற்றிவாய்ப்பு இருப்பதாக தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றனர். சமாஜ்வாதி கட்சி சார்பில் இதுதொடர்பாக செய்யப்பட்டிருக்கும் ட்வீட்டில், “நம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், பிரமுகர்களுக்கும் சொல்லிக்கொள்கிறோம். தொலைக்காட்சிகளில் வருவனவற்றை வைத்து, அதில் பேசப்படும் விஷயங்களை நம்பி நீங்கள் யாரும் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். உங்களுடைய வாக்குச்சாவடிகளில் நம்பிக்கையுடன் இருங்கள். இறுதியில் ஜனநாயகமே வெல்லும். அந்தவகையில் இறுதி முடிவு நிச்சயம் சமாஜ்வாதி கட்சி … Read more

5 மாநில தேர்தல் முடிவுகள்: உ.பி உட்பட 4 மாநிலங்களில் பாய்ச்சல் காட்டிய பாஜக

புதுடெல்லி: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா என நான்கு மாநிலங்களில் பாஜக பாய்ச்சலைக் காட்டி வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்கவைப்பது உறுதியாகியுள்ளது. 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் என்று நாட்டிலேயே அதிகளவில் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத் தேர்தலுக்கு எப்போதுமே மினி நாடாளுமன்றத் தேர்தல் என்ற அடைமொழியும் உண்டு. இத்தேர்தலில் பகல் ஒரு மனி நிலவரப்படி பாஜக 272, சமாஜ்வாதி 122, பகுஜன் … Read more

ஒன்னுல்ல, மொத்தம் 7 சரவெடி; உ.பி.,யில் தெறிக்கவிட்ட யோகி ஆதித்யநாத்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக அபார வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை 202. இதனை ’மேஜிக் நம்பர்’ என்றும் அழைப்பர். தற்போதைய நிலவரப்படி, பாஜக 267, எஸ்.பி 127, பி.எஸ்.பி 3, காங்கிரஸ் 3, பிற காட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. இதன்மூலம் யோகி ஆதித்யநாத் … Read more

குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் குண்டுவீச்சு தாக்குதல்: உக்ரைன் குற்றச்சாட்டு

உக்ரைனின் மரியுபோல் நகரத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்திருந்த நிலையில், Mariupol உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. Source link

யோகி ஆதித்யநாத் 34000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை- பாஜக தொண்டர்கள் உற்சாகம்

லக்னோ: உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் பாஜக, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. எனவே, பாஜக ஆட்சியை தக்க வைப்பது உறுதியாகிவிட்டது.  பாஜகவின் முன்னணி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.  அவ்வகையில், முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், கோரக்பூர் நகர தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் … Read more

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி!: வெற்றியை கைப்பற்றினார் ஆம் ஆத்மி வேட்பாளர்..!!

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வியை தழுவினார். பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோன்மணி அகாலிதளம் இடையே கடும் போட்டி நிலவியது. அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம், 3 விவசாய சட்டங்கள் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பஞ்சாப் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே … Read more

பஞ்சாப் தேர்தலில் படு தோல்வி – ஆளும் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு சரிசமமான ஆம் ஆத்மி

பஞ்சாப் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்ததன்மூலம், நாட்டில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து இரண்டாக மாறியுள்ளது. உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி முதல், மார்ச் மாதம் 7-ம் தேதி வரை சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களைவைத் தேர்தல் வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளநிலையில், இந்தத் தேர்தல் முன்னோட்டமாக பார்க்கப்பட்டது. இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க தேசிய கட்சிகளான காங்கிரஸ் … Read more

பஞ்சாப் தேர்தலில் அம்ரீந்தர் சிங் தோல்வி: காங்கிரஸ் தலைவர்களும் தோல்வி முகம்

சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் தோல்வியடைந்தார். பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் சூழல் உள்ளது. ஆளும் காங்கிரஸ் 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் சன்னி … Read more

ரைட்டு.. இதுதான் சரியான சாய்ஸ்… ஆம் ஆத்மி தலைமை தாங்கலாம்.. காங். யோசிக்கணும்!

தேசிய அளவில் ஒரு எதிர்க்கட்சி கூட்டணி உருவானால், அதற்குத் தலைமை தாங்கக் கூடிய சரியான கட்சியாக ஆம் ஆத்மியை மக்கள் அடையாளம் காட்டத் தொடங்கியுள்ளனரோ என்ற எண்ணத்தை 5 மாநில தேர்தல் முடிவுகள் உருவாக்கியுள்ளன. காங்கிரஸ் கட்சி அதன் பொலிவு, பலம், வளம் என எல்லாவற்றையுமே இழந்து விட்டது. உ.பியில் அது தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துப் பார்த்தது.. ம்ஹூம்.. மக்கள் மசியவே இல்லை. வெறும் 3 சீட்டுக்கு இறங்கி வந்து மிகப் பரிதாபமாக காட்சி தருகிறது. … Read more