பஞ்சாப் மாநிலத்தில் கணிப்புகளை மிஞ்சிய வெற்றி- காங்கிரஸ் செய்த தவறால் இமாலய சக்தியாக மாறிய ஆம் ஆத்மி

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சி ஒன்று இன்னொரு மாநிலத்தில் வெற்றிக் கொடியை நாட்டி இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்று சாதனையை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. டெல்லியில் அரசு அதிகாரியாக உயர் பதவியில் இருந்த கெஜ்ரிவால், ஊழல் எதிர்ப்பு போராளியான அன்னா ஹசாரேவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராகவே முதலில் களம் கண்டார். பின்னர் ‘ஆம் ஆத்மி கட்சி’யை தொடங்கி தலைநகர் டெல்லியில் … Read more

அனைத்து மாவட்ட திருக்கோயில்களின் வழிகாட்டி கையேடுகள் விரைவில் வெளியிடப்படும் : இந்து சமய அறநிலையத்துறை

சென்னை : அனைத்து மாவட்ட திருக்கோயில்களின் வழிகாட்டி கையேடுகள் விரைவில் வெளியிடப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்திருக்கிறது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்களின்‌ வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  திரு.பி.கே.சேகர்பாபு அவர்களின்‌ அறிவுரையின்படி திருக்கோயில்களில்‌ மாவட்டக்‌ கையேடுகளைப்‌ வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்‌ இதன்‌ மென்‌ பிரதியை இணை ஆணையர்கள்‌ சேகரித்து இவ்வலுவலகத்திற்கு அணுப்பி வைக்குமாறும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அணைத்து திருக்கோயில்களிலும்‌ தலவரலாறுகள்‌ வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. … Read more

உத்தராகாண்ட்: முன்னிலையில் பாஜக; நம்பிக்கை இழக்காத காங்கிரஸ்

கடந்த பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்ற உத்தரகாண்டில் நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடந்து வருகின்றது. மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்தில், தற்போதைய நிலவரப்படி 44 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. போலவே காங்கிரஸ் 23 இடங்களிலும், பிற கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ஆம் ஆத்மி எந்த இடத்திலும் முன்னிலையில் இல்லை. தற்போது உத்தரகாண்டில் பாஜக தான் ஆட்சியிலுள்ளது குறிப்பிடத்தக்கது. இருக்கும் நிலையிலும், அங்கு முதல்வராக இருக்கும் புஷ்பர் … Read more

கோவா தேர்தல் முடிவுகள்: பாஜக தொடர்ந்து முன்னிலை; வேட்பாளர் ஆனந்தக் கண்ணீர்

பனாஜி: கோவா தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அம்மாநில வைபோல் தொகுதி வேட்பாளர் விஸ்வஜித் ரானே ஆனந்தக் கண்ணீர் சிந்தி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். கோவா மாநிலத்தில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பகல் 12 மணி நிலவரப்படி அங்கு பாஜக 18, காங்கிரஸ் 11, திரிணமூல் 4, ஆம் ஆத்மி 3, சுயேச்சைகள் 4 என்று முன்னிலை வகிக்கின்றன. … Read more

லக்கிம்பூரில் முன்னிலை: அடிச்சு தூக்கும் பாஜக!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற பகுதியில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, விவசாயிகள் மீது மோதியாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து அப்பகுதியில் போராட்டம் வெடித்தது. மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார் ஏறியதில் விவசாயிகள் உயிரிழந்ததாக … Read more

தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்கான தடை நீக்கம் – தலைமைத் தேர்தல் ஆணையம்

வெற்றி கொண்டாட்டத்திற்கான தடை நீக்கம் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்கான தடை நீக்கம் – தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு கொரோனா பரவல் காரணமாக தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பதாக, தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது தற்போது கொரோனா பரவல் முற்றாக குறைந்துள்ள நிலையில், தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்கான தடை நீக்கம் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்கான தடை நீக்கப்படுவதாக, தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு Source link

18 தொகுதிகளில் முன்னிலை- கோவாவில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்க வாய்ப்பு

கோவா: 40 சட்டசபை தொகுதிகள் கொண்ட கோவாவில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இங்கு பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. மேலும் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி ஆகியவை போட்டியிட்டன. இங்கு 302 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 79 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வடக்கு கோவாவில் உள்ள 19 தொகுதிகளுக்கான … Read more

பாட்டியாலா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் அமரீந்தர் சிங் தோல்வி

பஞ்சாப்: பாட்டியாலா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் அமரீந்தர் சிங் தோல்வி அடைந்துள்ளார். பஞ்சாபில் தேர்தலுக்கு முன் கட்சி தொடங்கி பாஜக-வுடன் கூட்டணி அமைத்த அமரீந்தர் சிங் தோல்வியை தழுவினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை அமரீந்தர் சிங் தொடங்கியிருந்தார்.

‘ஜிலேபியுடன் கொண்டாட்டம்’- பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்கிறது ஆம் ஆத்மி

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் வீட்டின் முன் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பிற கட்சிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஆம் ஆத்மி அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடிக்க 59 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில், காலை 10.25 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி 88 தொகுதிகளில் முன்னிலை … Read more

பிரியங்கா முயன்றும் பின்னடைவை சந்திக்கும் காங்கிரஸ்: பெரும் தோல்வி காணும் மாயாவதி

லக்னோ: உத்தர பிரதேச தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதுபோலவே பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரம் செய்த நிலையிலும் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்திக்கும் சூழல் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. உ.பி. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் ஆளும் … Read more