21 ஆண்டு கால உத்தரகாண்ட் வரலாற்றில் சாதனை- பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்தது

டேராடூன்: 70 இடங்களை கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 14-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 65.37 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரி கூட்டணி என 4 கட்சிகள் களத்தில் இருந்தாலும் உத்தரகாண்டில் பா.ஜனதா-காங்கிரஸ் இடையே தான் நேரடி போட்டி நிலவியது. மொத்தம் 632 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி மாநிலம் … Read more

நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த உன்னாவ், ஹத்ராஸில் பாஜக முன்னிலை.. லக்கிம்பூர் கெரியிலும் பாஜக ஆதிக்கம்!!

லக்னோ : தேசிய அளவில் பரபரப்புக்கு உள்ளான லக்கிம்பூர் கெரி, ஹத்ராஸ் மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது. உத்தர பிரதேசம் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 202 இடங்கள் தேவைப்படுகிறது.  7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 61.04% வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியது. இதில் பாஜக 263 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் உத்தரப் பிரதேசத்தில் தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க … Read more

மணிப்பூர் தேர்தல்: முன்னிலையில் பாஜக; 'கை'விட்டதா காங்கிரஸ்?

இரண்டு கட்டமாக பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் நடந்துமுடிந்த மணிப்பூர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகின்றது. அதில் தற்போதைய நிலவரப்படி பாஜக 26 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது. மணிப்பூரில் 89.3% வாக்காளர்கள் வாக்கு செலுத்தியிருந்த நிலையில், இன்று அங்கு வாக்கு எண்ணிக்கை நடந்து வருகின்றது. அதன்படி பாஜக 26 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும், என்.பி.பி. 13 இடங்களிலும், பிற கட்சிகள் 11 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மொத்தம் … Read more

யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ் முன்னிலை: முதன்முறை களம் கண்ட சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி முகம் 

லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் முதன்முறையாக களம் கண்ட சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக பெரும் வெற்றி பெரும் நிலையில் உள்ளது. இதுவரை இல்லாத நிலையில் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2-ம் முறையாக முதல்வர் பதவி ஏற்கும் சூழல் உருவாகியுள்ளது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கர்ஹால் சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முன்னணியில் உள்ளார். அகிலேஷ் … Read more

சாய்ந்தது "யானை".. உடைந்தது "கை".. உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா.. உ.பி. அதகளம்!

உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா கதையாக மாறியுள்ளது பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிலை. உத்தரப் பிரதேசத்தில் இதுவரை வாங்கியிராத மோசமான அடியை இந்த இரு கட்சிகளும் வாங்கியுள்ளன. கடந்த காலத்தில் வாங்கிய தொகுதிகளைக் கூட வாங்க முடியாமல் சரிந்து போய்க் கிடக்கின்றன இரு கட்சிகளும். உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் அனைவரும் எதிர்பார்த்தது போல பாஜக பெரும் வெற்றியை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கிறது. வழக்கம் போல 2வது இடத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது சமாஜ்வாதி. இந்த … Read more

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியீடு

உத்தரபிரதேசம்,  பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கான சட்டப் பேரவை தேர்தல் கடந்த பிப்ரவரி 10 தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதேபோல் 60 எம்.எல்.ஏ. க்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப் பேரவை தேர்தல் இரு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்றது. … Read more

பார்வையற்ற மாற்றுதிறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர்

திருப்பதி: ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த கொண்ட மிட்டாவை சேர்ந்தவர் 32 வயது மாற்றுத்திறனாளி பெண். இவர் திசா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் கூறியிருப்பதாவது:- எனக்கு பிறவியிலேயே ஒரு கண் தெரியாது.சித்தூர் அடுத்த விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரா (வயது 42) என்பவர் எனக்கு கடந்த 1 ஆண்டாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த ஜெயச்சந்திரா என்னை பாலியல் பலாத்காரம் … Read more

பலூன் விற்பவர் TO ஃபேஷன் மாடல்!: பெண்ணின் வாழ்க்கையை மாற்றிய இன்ஸ்டாகிராம் பதிவு..குவியும் வாய்ப்புகள்..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் பலூன் விற்பனை செய்த பெண் ஃபேஷன் மாடலாக மாறியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் கண்ணூரில் உள்ள அண்டிலுர் காவி என்ற கோவிலில் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் வருகை தந்தனர். இந்த திருவிழாவுக்கு சென்ற புகைப்பட கலைஞர் அர்ஜுன் கிருஷ்ணன் என்பவர் பெண் ஒருவர் பலூன் விற்றுக் கொண்டிருந்ததை பார்த்தார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெண்ணின் முகம் புகைப்படத்திற்கு ஏற்ற முகம் என கருதிய … Read more

'பாலியல் வழக்குகளில் ராஜஸ்தான் முதலிடம்; அதற்கு காரணம் இதுதான்' -அமைச்சர் பேச்சால் சர்ச்சை

‘பாலியல் வழக்குகளில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது; ஏனெனில் அது ஆண்களின் மாநிலம்’ என அம்மாநில அமைச்சர் சட்டசபையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சாந்தி தாரிவால் பேசினார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய சாந்தி தாரிவால், ”பாலியல் வழக்குகளில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. அதில் சந்தேகமே இல்லை. ஆனால் பாலியல் வன்முறை வழக்குகளில் ராஜஸ்தான் ஏன் முன்னணியில் இருக்கிறது என்பதை … Read more

விவசாயிகள் பலியான லக்கிம்பூர் கேரியில் பாஜக முன்னிலை

லக்னோ: விவசாயிகள் மீது தாக்குதல் நடந்து பெரும் சர்ச்சை நடந்த லக்கிம்பூர் கேரியில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக பெரும் வெற்றி பெரும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 203 இடங்களை கடந்து அக்கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வர் பதவியில் அமரும் சூழல் உள்ளது. இந்தநிலையில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். விவசாய சட்டங்கள் காரணமாகவும் விவசாயிகள் போராட்டத்தை … Read more