உ.பி., பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? : வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது!!

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குதொடங்கியது. இதில், 2 முதல் 3 மணி நேரத்துக்குள் எந்தெந்த மாநிலத்தில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது தெரிந்து விடும். உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது.  இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்குகள் … Read more

உக்ரைனின் சுமி பல்கலைக் கழகத்தில் இருந்த இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டது எப்படி?

புதுடெல்லி: உக்ரைனின் சுமி பல்கலைக் கழகத்தில் இருந்த இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப் பட்டது எப்படி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. உக்ரைனில் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் ரஷ்யா கடந்த 14 நாட்களாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, உக்ரைனின் வடகிழக்கில் உள்ள சுமி நகரத்தில் ஏராளமான பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன. அந்த நகரம் ரஷ்ய எல்லையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்குள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஏராளமான இந்திய மாணவ, மாணவியர் கல்வி … Read more

புதுச்சேரியில் வருகிற 27-ஆம் தேதி முதல் விமான சேவை தொடக்கம்

புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து சேவை வருகிற 27-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதற்கட்டமாக புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூர் நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து சேவை தொடங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

உத்தர பிரதேச தேர்தல் வாக்கு எண்ணிக்கை – வாரணாசி பகுதியில் 144 தடை உத்தரவு

லக்னோ: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 5 மாநில சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி தொடங்குகிறது. இதையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பிற்பகலுக்குள் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகள் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று … Read more

அரசு நிலங்களை விற்று பணமாக்க புது அமைப்பு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: அரசிடம் பயன்படுத்தப்படாமல் உள்ள உபரி நிலங்களை விற்று பணமாக்குவதற்காக புதிய அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பொதுத்துறை நிறுவனங்களின் வசம் உள்ள உபரி நிலங்கள் மற்றும் உபயோகத்தில் இல்லாத கட்டிடங்களை விற்று பணமாக்குவதற்காக தனி அமைப்பை உருவாக்குவது பற்றி பரிசீலிக்கப்பட்டது. இதன் முடிவில், தேசிய நில பணமாக்கல் கழகம் (என்.எல்.எம்.சி) எனப்படும் புதிய அமைப்பை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், பொதுத்துறை நிறுவனங்களின் உபரி … Read more

மாடலிங் கலைஞராக மாறிய பலூன் விற்கும் கேரள இளம்பெண்: குவியும் வாய்ப்புகள்; சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

திருவனந்தபுரம்: கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அண்டலூர் காவு பரசுராமன் கோயிலில் நடக்கும் தைய்யம் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவின் போது கிஸ்பு என்னும் வட மாநிலப் பெண் கோயில் வாசலில் அமர்ந்திருந்து பலூன் வியாபாரம் செய்துவந்தார். ஏற்கெனவே ஊதி வைத்திருந்த பலூன்களுக்கு இடையில் கிஸ்பு ஒரு மலரைப் போல் இருப்பதைப் பார்த்த புகைப்படக் கலைஞர் அர்ஜுன் கிருஷ்ணன், கிஸ்புவை புகைப்படம் எடுத்தார். தான் எடுத்த புகைப்படங்களை கிஸ்புவிடமும், அவரோடு இருந்து பலூன் விற்றுக்கொண்டிருந்த … Read more

மாடு முதல் புரோக்கர் வரை.. உத்தரப் பிரதேச தேர்தல் முடிவை தீர்மானிக்கும் விவசாயிகள்!

உத்தரப் பிரதேச தேர்தல் முடிவை தீர்மானிக்கும் விவசாயிகளின் பிரச்சினைகள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதற்கிடையே விடுதலை கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. பேரறிவாளன் ஏற்கனவே பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால் ஜாமின் வழங்கும்படி அதில் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்ச … Read more

நகராட்சி தேர்தல் அசாமில் பாஜ அமோக வெற்றி

கவுகாத்தி: அசாமில் மாநிலம் முழுவதும் உள்ள மொத்த 80 நகராட்சிகளில் கடந்த 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இங்கு முதல் முறையாக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலவரப்படி, 73 நகராட்சிகளில் பாஜ வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், 5 நகராட்சிகளில் தொங்கு நகராட்சி அமைந்துள்ளது.