700 இந்திய மாணவர்கள் இன்று தாயகம் வருகை

உக்ரைனின் பல்வேறு நகரங்களை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், சுமி நகரத்தில் குண்டுகள் வீசி கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பேச்சுவார்த்தை மூலம் இங்கு போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, இங்கு சிக்கியிருந்த 700 இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் 13 பேருந்துகளில் பாதுகாப்புடன் போல்டவாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து, சிறப்பு ரயில் மூலம் சுமார் 888 கிலோ மீட்டர் பயணித்து லிவிவ் நகருக்கு வந்து சேர்ந்தனர். பின்னர், … Read more

உக்ரைனில் இருந்து மீட்க உதவி – பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் மாணவி

உக்ரைனில் இருந்து மீட்டதற்காக பாகிஸ்தான் மாணவி ஒருவர், இந்தியத் தூதரகத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தின் கீழ் இந்தியா மீட்டு வருகிறது. இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இத்திட்டத்தின் மீட்கப்பட்டு தாய்நாடு அழைத்து வரப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவி அஸ்மா ஷஃபிக் என்பவர் … Read more

புதிய ‘எக்ஸிட் போல்’ முடிவு: உ.பி., உத்தரகாண்ட்டில் பாஜக; பஞ்சாபில் ஆம் ஆத்மி; கோவாவில் கடும் போட்டி

புதுடெல்லி: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக மேலும் ஒரு தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக் கணிப்பு இன்று வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 7-ம் தேதி நிறைவு பெற்றது. நாளை 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த சூழலில் பல்வேறு முன்னணி ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா, டைம்ஸ் நவ்-வீட்டோ, ரிபப்ளிக் பி-மார்க், ஏபிபி-சிவோட்டர் மற்றும் நியூஸ் … Read more

நீட் வயது வரம்பு… ஆணையம் அதிரடி அறிவிப்பு!

இளநிலை மருத்துவப் படிப்பில் (எம்பிபிஎஸ்) சேர, நீட் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு குறித்து தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாளை 5 மாநில தேர்தல் முடிவு: வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வியாழக்கிழமை வெளியாக இருக்கின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில் 11 மணி முதல் முன்னணி நிலவரம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் முடிவுகளையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாதவண்ணம் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள்செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 70 ஆயிரம் காவலர்களும், துணை ராணுவப் படையினரும் … Read more

பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட பெட்டியில் பட்ஜெட் கொண்டு வந்த சத்தீஸ்கர் முதல்வர்

சத்தீஸ்கர் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. தொடர்ந்து, சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் இன்று 2022-23ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் ஆவணங்களை மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட பெட்டியில் வைத்து சட்டசபைக்கு எடுத்துச் சென்றார். இந்த பெட்டியை ராய்ப்பூரில் கால்நடை வளாகத்தில் பத்து நாட்களுக்குள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. சாணப் பொடி, பசை மற்றும் மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியில் சமஸ்கிருதத்தில் ‘கோமயே … Read more

உக்ரைன் விவகாரம் குறித்தும் உடனடி போர் நிறுத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் ஹங்கேரி பிரதமரும், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

டெல்லி: உக்ரைன் விவகாரம் குறித்தும் உடனடி போர் நிறுத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பனுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான முயற்சிகளை முன்னெடுக்க இருநாட்டு தலைவர்களும் உறுதி அளித்துள்ளனர் என குறிப்பிட்டார்.

பெண் குழந்தைகளை பெற்றெடுக்க விரும்பும் தமிழக பெண்கள் – ஆய்வு சொல்லும் காரணம் இதுதான்!

தமிழ்நாடு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெண்கள், ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளை பெற்றெடுக்கவே விரும்புவது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வில், தமிழ்நாட்டை சேர்ந்த 8.9 விழுக்காடு தாய்மார்கள், ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளை பெற்றெடுக்கவே விரும்புவதாக தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் என ஒப்பிட்டுப் பார்த்தால் மிசோரம் மாநிலத்தில் 21.4 விழுக்காட்டினரும், மேகாலயாவில் 21.1 விழுக்காட்டினரும் பெண் குழந்தைகள் தேவை என்றே பதில் அளித்துள்ளனர். இதுவே ராஜஸ்தான், … Read more

'உக்ரைனில் சிக்கிய குடிமக்களை மீட்பதில் இந்தியாவுக்கு இணையில்லை' – மற்ற நாடுகளுடன் ஒப்பிட்ட உ.பி முதல்வர் யோகி

புதுடெல்லி: “உக்ரைனில் சிக்கித் தவித்த சொந்த நாட்டு மக்களை திரும்ப அழைத்து வர இந்திய அரசு மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளது” என, நாடு திருப்பிய உத்தரப் பிரதேச மாணவர்களிடம் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மற்றும் மாணவர்களை ’ஆபரேஷன் கங்கா’ திட்டம் மூலமாக இந்திய அரசு அழைத்து வருகிறது. அவ்வாறு இந்தியா திரும்பிய உத்தரப் பிரதேச மாணவர்களை, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்தார். அப்போது மாணவர்களிடம் பேசிய முதல்வர் … Read more