"ஆபாச வலைதளங்களே பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணம்" – ராஜஸ்தான் அமைச்சர்

“நாட்டில் நடைபெறும் பெரும்பாலான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆபாச வலைதளங்களே காரணம்” என்று ராஜஸ்தான் தொழில்துறை அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாட்டில் எங்கு பார்த்தாலும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் அரங்கேறி வருகின்றன. முந்தைய காலங்களிலும் இதுபோன்ற குற்றங்கள் இருந்தன. ஆனால், அவை மிகக்குறைவாக அங்கொன்றும், இங்கொன்றுமாகவே நடந்தன. தற்போது பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிப்பதற்கு இணையதளங்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. இணையத்தில் ஆயிரக்கணக்கான ஆபாச … Read more

உக்ரைனில் 9 வங்கதேச மக்களை மீட்ட இந்தியா: பிரதமர் மோடிக்கு நன்றி கூறிய ஷேக் ஹசீனா

புதுடெல்லி: உக்ரைனில் சிக்கிய வங்கதேசத்தை சேர்ந்த 9 பேரை மீட்க நடவடிக்கை எடுத்த இந்தியாவுக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்குதலைத் தொடங்கியது. அப்போது சுமார் 20,000 மாணவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் அங்கிருந்தனர். அவர்களை மீட்க ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதுவரை சுமார் 18000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் சிக்கியுள்ள … Read more

பாகன் கொம்பால் தாக்கியதால் யானை வெறிச்செயல்.. பாகன்களை சாலையில் வைத்து புரட்டி எடுத்த யானையின் வீடியோ வைரல்

கேரளாவில் தன்னை கொம்பால் அடித்த பாகன்களை யானை ஒன்று புரட்டி எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொல்லம் மாவட்டத்திலுள்ள கேரளபுரம் பகுதியில் கோவில் திருவிழாவுக்காக யானை ஒன்று கொண்டு வரப்பட்டது. அந்த யானையுடன் 2 பாகன்களும் வந்திருந்த நிலையில், யானை மீது அமர்ந்திருந்த பாகனின் பை கீழே விழுந்துள்ளது. கீழே விழுந்த பையை எடுப்பதற்காக, இருவரும் கீழே இறங்கியுள்ளனர். ஒருவர் இறங்கி கீழே நின்று கொண்டிருந்த நிலையில், மற்றொருவர் யானையின் உதவியுடன் கீழே இறங்கினார். அப்போது, … Read more

வெறுப்பை பரப்பி, மக்களை பிரித்து நாட்டை ஆள்கிறார்கள்- ராகுல் காந்தி பேச்சு

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு முக்கம் பகுதியில் ஆதரவற்றோர் இல்ல திறப்பு விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதாவது:- இன்று நம் நாட்டை ஆள்பவர்கள் ஆத்திரத்தை பரப்புகிறார்கள், வெறுப்பை பரப்புகிறார்கள், நாட்டை பிளவுபடுத்துகிறார்கள். நமது அரசாங்கம் பரப்பிய கோபத்தின் விளைவை நீங்களே பார்க்கலாம். வேலையில்லாத் திண்டாட்டம், விண்ணைத் தொடும் விலைவாசி என நமது பொருளாதாரத்திற்கு என்ன நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம்.  மக்கள் பிளவுபட்ட நிலையில் ஒன்றுபட்டுச் செயல்படாததுதான் இதற்கெல்லாம் காரணம். மக்கள் தங்களை நடத்துவது … Read more

உக்ரைனில் சிக்கிய இந்தியர்கள் அண்டை நாடு வழியாக மீட்கும் பணி நாளை நிறைவு பெறுவதாக தகவல்..!

டெல்லி: உக்ரைனில் சிக்கிய இந்தியர்கள் அண்டை நாடு வழியாக மீட்கும் பணி நாளை நிறைவு பெறுவதாக தகவல் தெரிவித்துள்ளது. நாளை கடைசி விமானம் கிளம்பும் என்றும் இந்தியர்களை மீட்க அனுப்பட்ட ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட தூதரக குழுக்கள் நாளை தாயகம் திரும்பவுள்ளனர்.

சாலையோரத்தில் பலூன் விற்ற பெண்ணை மாடலாக மாற்றிய கேரள புகைப்படக்காரர்! – வைரலாகும் போட்டோ

கேரளாவில் சாலைகளில் பலூன் விற்றுக்கொண்டிருந்த பெண்ணொருவரை, புகைப்படங்களுக்கான மாடலாக மாற்றியுள்ளார் அர்ஜூன் கிருஷ்ணன் என்ற புகைப்படக் கலைஞர். இந்த புகைப்படம், இணையத்தில் வைரலாகிவருகின்றது. கிஸ்பு என்ற அந்தப் பெண்ணின் இருவேறு புகைப்படங்களை கொலேஜ் செய்து பதிவிட்டிருக்கும் புகைப்படக்கலைஞர் அர்ஜூன், அதில் “அந்தலூரின் தெருக்களிலிருந்து இப்போது மக்களின் மனதுக்குள் செல்லும் பெண்! மாடலுக்கு செய்யப்படும் மேக்-ஓவருக்குப் பின், அவர் முகத்தில் தெரியும் அந்த மகிழ்ச்சியை பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இரவு நேரமொன்றில், சாலையோரத்தில் பலூன் விற்பனை செய்துகொண்டிருந்த … Read more

மருத்துவம், பொறியியல், கலை – அறிவியல் உட்பட அனைத்து படிப்புகளும் ஒரே கல்லூரியில் வழங்க முடிவு: மார்ச் 20-க்குள் கருத்து தெரிவிக்க யுஜிசி வேண்டுகோள்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைப்படி, மருத்துவம், பொறியியல், கலை அறிவியல், நிர்வாகவியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் உயர்கல்வி மையங்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதற்கான திருத்தங்களுடன் கூடிய வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது. இதன்படி, மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என தனித்தனி கல்லூரிகள் இனி இருக்காது. எல்லா படிப்புகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். இதன்மூலம், ஐஐடி … Read more

உ.பியை அள்ளப் போகிறது பாஜக.. பஞ்சாப் ஆம் ஆத்மிக்கே.. புதிய எக்ஸிட் போல்

5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் தொடர்பான புதிய எக்ஸிட் போல் ஒன்று இன்று வெளியாகியுள்ளது. லோக்நிதி – சிஎஸ்டிஎஸ் வெளியிட்டுள்ள இந்த எக்ஸிட் போலில், உ.பியில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்றும், அதேபோல பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி மிகப் பெரிய வெற்றியை தட்டிச் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்நிதி -சிஎஸ்டிஎஸ் எக்ஸிட் போலில் யாருக்கு எத்தனை சீட் கிடைக்கும் என்பது குறித்துக் குறிப்பிடப்படவில்லை. … Read more

மகளிர் தினத்தில் சாதனைப் பெண்கள்!

பாரினில் பெண்கள் ஆள வந்தோம் என்று உற்சாகமாக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பல்வேறு துறைகளில் இன்று பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.வீட்டின் சமையல் கூடங்களில் சிறைப்பட்டிருக்கும் பெண்கள் நேற்று தங்கள் வலிமையை உணர்ந்து உற்சாகமாகக் கொண்டாடினர். பிரான்சிடமிருந்து இந்தியா வாங்கிய ரபேல் போர் விமானத்தின் விமானியாக ஷிவானி சிங் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். ஆண்களைப் போலவே தானும் பயிற்சி பெற்றதாகவும், இயந்திரங்களுக்கு பாலின வேறுபாடுதெரியாது என்றும் ஷிவானிசிங் குறிப்பிட்டார். … Read more