மகளிர் தினத்தை முன்னிட்டு, சமையலறை உபகரணங்களுக்கு தள்ளுபடி: ப்ளிப்கார்ட் நிறுவன விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு

டெல்லி: மகளிர் தினத்தை முன்னிட்டு, சமையலறை உபகரணங்களுக்கு தள்ளுபடி என ப்ளிப்கார்ட் நிறுவனம் செய்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பெண்களுக்கு உகந்தது சமையலறைதான், என்ற கருத்தை மறைமுகமாக கூறுவதாக கண்டனங்கள் எழுந்ததை அடுத்து மன்னிப்பு ப்ளிப்கார்ட் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

மத்திய அரசு வசமுள்ள உபரி நிலங்களை விற்று வருவாய் ஈட்ட புதிய அமைப்புக்கு ஒப்புதல்

மத்திய அரசு வசமுள்ள உபரி நிலங்களை விற்று வருவாய் ஈட்ட தேசிய அளவில் புதிய அமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய நில வருவாய் அமைப்பு என்ற புதிய அமைப்பை உருவாக்க டெல்லியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் வசமுள்ள உபரி நிலங்கள், பயனற்ற கட்டடங்களை விற்று அரசின் வருவாயை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 29 பெண்களுக்கு குடியரசு தலைவர் விருது

புதுடெல்லி: சர்வதேச மகளிர் தினமான நேற்று, நாட்டின் தலைசிறந்த 29 பெண்களுக்கு பெண் சக்தி விருதுகளை (நாரி சக்தி புரஸ்கார்) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படும் பெண்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஆண்டுதோறும் பெண்சக்தி விருது (நாரி சக்தி புரஸ்கார்) வழங்கப்படுகிறது. தொழில்முனைவு, வேளாண்மை, சமூகப் பணி, கல்வி, இலக்கியம், மொழியியல், கலைகள், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், ஊனமுற்றோர் உரிமைகள், … Read more

குதிரை பேர பயம்.. ரிசார்ட்டில் அடைத்துவைக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள்!

கோவா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில், குதிரை பேர அச்சத்தால் கோவா காங்கிரஸ் தனது வேட்பாளர்களை ரிசார்ட்டில் மொத்தமாக வைத்துள்ளது. கோவாவில் தொங்கு சட்டமன்றம் உருவாகும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. எனவே, குதிரை பேரத்தால் எம்.எல்.ஏக்கள் விலைக்கு வாங்கப்படுவார்கள் என்ற அச்சத்தால் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை ரிசார்ட்டில் அடைத்து வைத்துள்ளது. 2017ஆம் ஆண்டு கோவா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வெற்றிபெற்றது. … Read more

ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியல் ரவீந்திர ஜடேஜா முதலிடம்

ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியல் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடம் ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா முதலிடம் 406 புள்ளிகளுடன் டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்தார் 382 புள்ளிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் 2ஆம் இடம் பிடித்தார் இலங்கைக்கு எதிரான தொடரில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்பட்டதால் தரவரிசையில் முதலிடம் பெற்றார் இலங்கைக்கு எதிரான தொடரில் பேட்டிங், பவுலிங் என … Read more

உதம்பூரில் நீதிமன்ற வளாகம் அருகே குண்டு வெடிப்பு- ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இன்று மதியம் 1 மணியளவில் திடீரென குண்டு வெடித்தது. இதில் பலத்த காயமடைந்த ஒருவர் பலியானார். மேலும் 13 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- உதம்பூரில் உள்ள தாசில்தார் அலுவலம் அருகே குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில், ஒருவரின் உயிர் பறிபோனது. 13 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நான் … Read more

ராஜூவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

டெல்லி: ராஜூவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. தற்போது பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜூவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் 32 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்.

கேரளா: கொடியேற்றத்துடன் தொடங்கிய சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா

சபரிமலை ஐயப்பனின் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சபரிமலையில் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு தமிழ் மாதமான பங்குனி மற்றும் மலையாள மாதமான கும்பம் மாதத்தில் சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டு வருகிற 19ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் சபரிமலையில் ஆராட்டு திருவிழா தற்போது கொடியேற்றத்துடன துவங்கியுள்ளது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். மார்ச் 18ஆம் தேதி பம்பை நதியில … Read more

கோவாவில் கட்சித் தாவல்? – காங்கிரஸை தொடர்ந்து ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கும் பாதுகாப்பு 

பனாஜி: கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் காங்கிரஸை தொடர்ந்து ஆம் ஆத்மியும் தனது வேட்பாளர்களை பாதுகாப்பாக வைத்துள்ளது. கோவா சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாகவும் தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. கோவா மாநிலத்தில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆளும் பாஜகவும் காங்கிரஸும் சமமான இடங்களை பெறக்கூடும். எனினும் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத … Read more

பாகிஸ்தான் வாலாட்டினால்.. மோடி சுளுக்கெடுப்பார்.. அமெரிக்கா எச்சரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா, முன்பு போல இல்லை. பாகிஸ்தான் மீண்டும் வாலாட்டினால் ராணுவத் தாக்குதலில் இந்தியா ஈடுபட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க உளவுத்துறை, அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் குறித்த பல முக்கியத் தகவல்களை அது பகிர்ந்துள்ளது. அதில்தான், இந்தியா – பாகிஸ்தான் மோதல் தொடர்பாக முக்கிய தகவல்களை அது வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த கால அரசுகள் … Read more