கோவாவில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே காங்கிரஸ் வேட்பாளர்களை பாதுக்காக்க கட்சி நடவடிக்கை

கோவா: கோவாவில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே காங்கிரஸ் வேட்பாளர்களை பாதுக்காக்க கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. காங்கிரஸ் தனது வேட்பாளர்கள் அனைவரையும் ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்று பத்திரப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உ.பி தேர்தல்: இ.வி.எம் எந்திரங்களை எடுத்துச் சென்றதன் ஏன்? காரணம் கூறிய தேர்தல் அதிகாரி

உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் விதிகளுக்கு எதிராக, EVM இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருந்த நிலையில், அவை பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்களே என தேர்தல் அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பு அறையில் இருந்த EVM இயந்திரங்களை சம்பந்தப்பட்ட தொகுதி வேட்பாளர்களுக்கு முன்அறிவிப்பு ஏதும் வழங்காமலேயே அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வாகனத்தை முற்றுகையிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்தல் … Read more

இந்திய பிரதமருக்கும், தூதரகத்துக்கும் நன்றி.. உக்ரைனிலிருந்து காப்பாற்றப்பட்ட பாகிஸ்தான் மாணவி நெகிழ்ச்சி

உக்ரைனில் போர் பகுதியில் சிக்கியிருந்த தன்னை பாதுகாப்பாக ஐரோப்பிய நாடுகளின் எல்லைகள் அமைந்துள்ள மேற்குப் பகுதிக்கு அழைத்துவந்த இந்திய தூதரகத்துக்கும், பிரதமருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் மாணவி ஒருவர். ஆபரேஷன் கங்காவின் உதவிக்கரம்: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்குதலைத் தொடங்கியது. அப்போது சுமார் 20,000 இந்திய மாணவர்கள் அங்கிருந்தனர். அவர்களை மீட்க ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இது வரை 15000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பத்திரமாக … Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் – தெற்கு ரயில்வே செம அறிவிப்பு!

192 ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் மீண்டும் முன்பதிவில்லா பயணம் செய்யும் திட்டத்தை வரும் 10 ஆம் தேதி முதல் தெற்கு ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது. ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 அல்லது 5 பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். கொரோனா காலத்திற்கு பின்னர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் நீக்கப்பட்டு, எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிப்போர் அனைவரும் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது … Read more

பாஜகவுக்கு மாற்று கிடைத்தால் அக்கட்சியை மக்கள் நீக்கி விடுவார்கள் – மம்தா பானர்ஜி

பாஜகவுக்கு மாற்றாக அரசியல் கட்சியை மக்கள் அடையாளம் காணும் வரை பாஜக ஆட்சியில் நீடிக்கும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு மாற்றாக எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு  2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்றுமாறு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். கொல்கத்தாவில் திரிணாமூல் காங்கிரசின் புதிய மாநில கமிட்டிகள் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, பாஜக ஜனநாயகப் பண்புகளை சிதைக்க … Read more

வெளிநாட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி- 2 வாலிபர்கள் கைது

திருப்பதி: லிதிவேனியா நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த வாரம் இந்தியாவிற்கு வந்தார். நேற்று முன்தினம் அவர் சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக கோவா செல்வதற்காக ஆம்னி பஸ்சில் புறப்பட்டு சென்றார். அவருடன் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கூடூர் அடுத்த வெங்கடபாளையத்தை சேர்ந்த சாய்குமார் என்ற வாலிபர் பயணம் செய்தார். அப்போது இளம்பெண் பஸ் டிக்கெட்டிற்கு தனது நாட்டு கரன்சியை கொடுத்தார். இதனை கண்ட பஸ் கண்டக்டர் வெளிநாட்டு கரன்சியை வாங்க முடியாது. இந்திய நாட்டு … Read more

ஜாமீன் கேட்ட பேரறிவாளனின் கோரிக்கை தொடர்பாக 2 மணிக்கு விசாரிக்க உள்ளது உச்சநீதிமன்றம்

டெல்லி: ஜாமீன் கேட்ட பேரறிவாளனின் கோரிக்கை தொடர்பாக 2 மணிக்கு உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால் ஜாமீன் கொடுக்க வேண்டும் என பேரறிவாளன் கோரிக்கை வைத்துள்ளார்.

பெங்களூரு: கியாசிஸ் போதைப்பொருள் பறிமுதல் – காதல் ஜோடி உள்பட 3 பேர் கைது

பெங்களூரில் போதைப் பொருட்களை விற்பனை செய்த காதல் ஜோடி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு பி.டி.எம். லே-அவுட் 4-வது மெயின் ரோடு, அரகா கிராமத்தில் ஒரு நபர் போதைப்பொருள் விற்பனை செய்ய முயற்சிப்பதாக ஹூலிமாவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றிய நபரை பிடித்து சோதனை நடத்தியபோது அவரிடம் கியாசிஸ் ஆயில் என்ற போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மடிவாளா மாருதி நகரைச் சேர்ந்த விக்ரம் … Read more

சந்திரனில் முதல் முறையாக நாசா சார்பில் 4ஜி நெட்வொர்க்: இந்தியரான நிஷாந்த் பத்ரா அமைக்கிறார்

புதுடெல்லி: நாசா விண்வெளி அமைப்புக்காக சந்திரனில் முதல் முறையாக 4ஜி நெட்வொர்க்கை ஏற்படுத்தும் பணிக்கு டெல்லியில் பிறந்த நிஷாந்த் பத்ரா தலைமை வகிக்கிறார். டெல்லியில் 1978-ல் பிறந்தவர் நிஷாந்த் பத்ரா. இந்தூரில் உள்ளதேவி அகில்யா பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் துறையில் பட்டம் பெற்ற இவர், பிறகு இன்சீட் பிசினஸ் பள்ளியில் எம்பிஏ முடித்தார். இதையடுத்து அமெரிக்காவில் உள்ள சதர்ன் மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் தொலைத்தொடர்பு துறையிலும் கணினி அறிவியல் பாடத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார். தற்போது பின்லாந்து நாட்டின் … Read more

ராகுல் காந்தியைத் தொடர்ந்து.. பிரியங்காவும் தோற்கிறாரா.. எக்ஸிட் போல் சொல்வது என்ன?

உத்தரப் பிரதேச அரசியலில் காந்தி குடும்பத்தின் முக்கியத்துவம் குறைந்து விட்டதா.. அவர்களது செல்வாக்கு போய் விட்டதா என்ற பெரும் கேள்விகள் எழுகின்றன. உத்தரப் பிரதேச எக்ஸிட் போல் முடிவுகளைப் பார்த்தால் அந்த கேள்விதான் வருகிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை நேரு குடும்பத்து வாரிசுகள்தான் தொடர்ந்து தலைமைப் பதவியில் இருந்து வருகின்றனர். ராஜீவ் காந்தி மறைவுக்குப் பின்னர், சிறு இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் தலைமைப் பொறுப்புக்கு வந்தவர் சோனியா காந்தி. அவரைத் தொடர்ந்து ராகுல் காந்தி தலைவரானார். இப்போது … Read more