ஏப்ரல் 1-ந்தேதி முதல் திருப்பதியில் ஆர்ஜித சேவைகளில் பக்தர்கள் அனுமதி

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி கட்டண சேவைகளான ஆர்ஜித சேவைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கொரோனா குறைந்ததை அடுத்து ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடைபெற்று வந்த ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுப்ரபாதம், அர்ச்சனை, அஷ்டதள பாத … Read more

சர் க்ரீக் நதி அருகில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்துப் பணி

டெல்லி: சர் க்ரீக் நதி அருகில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். பாகிஸ்தானின் சமீபத்திய செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு ரோந்து பணியை அதிகப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வளைகுடா, இஸ்ரேல், லிபியா என கடந்த 30 ஆண்டுகளில் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மீட்பு

புதுடெல்லி: போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து இப்போது ‘ஆபரேஷன்கங்கா’ திட்டத்தின் கீழ் இந்தியர்கள் மீட்கப்படுவதைப் போலவேகடந்த காலங்களில் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த ஒரு வாரமாக 18,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், உக்ரைனில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மத்திய அரசின் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய குடிமக்களை மீட்க ருமேனியா,போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் மால்டோவா … Read more

டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப்.. காங்கிரஸுக்கு மாற்றாக உருவெடுக்கிறதா ஆம் ஆத்மி?

இந்தியாவைப் பொறுத்தவரை காங்கிரஸ் , பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் அரசுகள்தான் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களை ஆட்சி செய்துள்ளன. தற்போது இவற்றுக்கு அடுத்த இடத்தை ஆம் ஆத்மி பிடிக்கவுள்ளது. இது இந்திய அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எளிய மக்களின் தலைவராக அடையாளம் காட்டப்பட்டு உருவாக்கப்பட்டவர்தான் அரவிந்த் கெஜ்ரிவால். அவர் ஏற்படுத்திய அலை இந்தியா முழுவதும் பரவியது. ஆனால் அந்த அலைக்கு அங்கீகாரம் கிடைத்தது டெல்லியில்தான். ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியைப் பிடித்தபோது புதிய வரலாற்றையும் சேர்த்தே … Read more

இந்தியா ஆயுத உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும் – ஜெனரல் எம்.எம். நரவனே

உக்ரைன் போரை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு எதிர்காலத்தில் இந்தியா போர்களை எதிர்கொள்ள ஆயுதங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் தற்சார்பு நிலையை அடைய வேண்டும் என்று ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே தெரிவித்துள்ளார். சொந்த நாட்டின் ஆயுத உற்பத்தியை வைத்து போரை இந்தியா எதிர்கொள்ள வேண்டும் என்றும்அவர் வலியுறுத்தினார். எந்த நேரத்திலும் போர்கள் மூளலாம் என்றும், அதற்கு நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை உக்ரைன் போர் நமக்கு உணர்த்துவதாகவும் நரவனே கூறினார். … Read more

கேரளாவில் அங்குசத்தால் குத்திய பாகனை மிதித்த யானை

கொல்லம்: கேரளாவில் கோவில் விழாக்களில் யானைகளை பயன் படுத்துவது வழக்கம். அப்படி பயன்படுத்தும்போது அடிக்கடி அவைகள் மிரண்டு பொதுமக்களையும் பாகன்களையும் தாக்கும் சம்பவங்களும் நடப்பது உண்டு. இந்நிலையில் கடந்த ஞயிற்றுக்கிழமை கேரள மாநிலத்தின் கொல்லத்திற்கு அருகில் உள்ள கோவில் திருவிழாவிற்காக யானை ஒன்று கொண்டுவரப்பட்டது. அப்போது யானையின் மீது அமர்ந்து வந்த பாகன் கீழே விழுந்த பையை எடுப்பதற்காக யானையின் மீதிருந்து கீழே இறங்கினார். அப்போது பாகனின் உதவியாளர் யானையின் முன் காலில் அங்குசத்தால் பலமாக தாக்கினார். … Read more

திருப்பதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்ஜித சேவைகளுக்கு அடுத்த மாதம் அனுமதி: தேவஸ்தானம் தகவல்

திருமலை:  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்ஜித சேவைகளில் பங்கேற்க ஏப்ரல் 1ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக சுவாமி தரிசனம் செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும், பல்வேறு கட்டண சேவைகளான ஆர்ஜித சேவைகளில் பக்தர்கள் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பெருமளவில் குறைந்துவிட்டதால் இலவச தரிசன டிக்கெட்டில் கூடுதலாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல், 2 ஆண்டுகளுக்கு பிறகு … Read more

`இனி சாதாரண பட்டன் போன் மூலமாகவும் பணம் அனுப்பலாம்' -புதிய வசதி அறிமுகம்

சாதாரண பட்டன் போன்களுக்கான புதிய பிரத்யேக யுபிஐ வசதியை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த யுபிஐ வசதிக்கு ‘123 பே’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பாதுகாப்பான ஆன்லைன் பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்காக புதிய பிரத்யேக யுபிஐ வசதியை அறிமுகம் செய்யதுள்ளதாகவும், இதன் மூலம் இந்தியாவில் 40 கோடி பேர் பயனடைவார்கள் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பான தகவல்களை பெற பிரத்யேக திட்டமும் தொடங்கப்படும் என்றும் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு … Read more

கைதிகள் – காவல‌ர்கள் இடையே பெங்களூரு சிறையில் கிரிக்கெட் போட்டி

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் தலைமை சிறை கண்காணிப்பாளர் பி.ரங்கநாத் நேற்று கூறியதாவது: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கைதிகள் மற்றும் சிறை காவலர்களுக்கு இடையே நட்புறவை ஏற்படுத்தும் நோக்கில் கிரிக்கெட் போட்டி நடத்த முடிவெடுத்தோம். கைதிகளிடையே தீய சிந்தனையை போக்கி நற்சிந்தனையை விதைக்கும் நோக்கில் இதற்கு ஏற்பாடு செய்தேன். கைதிகளை 4 அணிகளாகவும், காவலர்களை 2 அணிகளாவும் பிரித்து ஒரு வாரம் பயிற்சி அளித்து நட்பு ரீதியான போட்டிக்கு தயார் படுத்தினோம். … Read more

நேற்றே கணித்தது தமிழ் சமயம்.. வேட்பாளர்களை ரிசார்ட்டுகளில் அடைக்கும் காங்.. கோவா கலகல!

கோவா மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையலாம் என்பதால், வெற்றி பெற்ற வேட்பாளர்களை ரிசார்ட்டுகளில் பாதுகாக்கும் சூழல் வரும் வாய்ப்பிருப்பதாக நேற்றுதான் நாம் செய்தி எழுதினோம். இதோ காங்கிரஸ் இன்றே அந்த வேலையை ஆரம்பித்து விட்டது. 5 மாநில சட்டசபைத் தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் உ.பி, உத்தரகாண்ட், மணிப்பூரில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாவில் … Read more