கொல்லப்பட்ட பஜ்ரங் தள நிர்வாகியின் குடும்பத்துக்கு கர்நாடக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஷிமோகா வில் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி பஜ்ரங் தளம் அமைப்பின் நிர்வாகி ஹர்ஷா (26) மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் போலீஸார் 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இக்கொலையில் எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ ஆகிய அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா குற்றம்சாட்டினார். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, “அந்த அமைப்புகளுக்கு தொடர்பு இருந்தால், தடை விதிக்க வேண்டும்” என்றார். … Read more

யாரும் என் கண்ணுல இருந்து தப்ப முடியாது: பைனாக்குலருடன் வலம் வரும் வேட்பாளர்!

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதையொட்டி, இந்த மாநிலங்களுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. உத்தரகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27 ஆம் தேதி முதற்கட்ட தேர்தலும், மார்ச் 3 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான மொத்தம் 403 … Read more

பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ 6 வரை உயர வாய்ப்பு.!

பெட்ரோல் டீசல் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் வரை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் மத்தியஅரசைக் கேட்டுக் கொண்டுள்ளன. 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள்அறிவிக்கப்பட்ட நிலையில் 125 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு அறிவிக்கப்படவில்லை. நேற்று உத்தரப்பிரதேசத்தின் கடைசி கட்டத் தேர்தலுடன் தேர்தல் நிறைவு பெற்றது. இதையடுத்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த மத்திய அரசிடம் எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு139 டாலராக உயர்ந்துவிட்டது. இந்நிலையில் … Read more

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு 14-ம் தேதி கூடுகிறது

புதுடெல்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி மாதம் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெற்றது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. கடந்த மாதம் 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.  இந்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் மக்களவை, மாநிலங்களவை … Read more

மக்களவை, மாநிலங்களவை ஒரே நேரத்தில் செயல்படும்

புதுடெல்லி: கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நடைபெற்றது. கொரோனா விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன. ஜனவரி 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11ம் தேதி வரை முதல் தொடர் நடைபெற்றது. மாநிலங்களவை காலை 10 மணி முதல் 3 மணி வரையிலும், மக்களவை 4 மணி முதல் 9 மணி வரையிலும் செயல்பட்டது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு வரும் 14ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 8ம் … Read more

மக்கள் மருந்தகங்கள் மூலம் ஏழைகள் பயனடைகின்றனர்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: மக்கள் மருந்தகங்கள் மூலம் குறைந்த விலையில் மருந்துகள் வாங்கி ஏழைகள்,நடுத்தர மக்கள் பலனடைகின்றனர் என்று பிரதமர் மோடி கூறினார். மக்கள் மருந்தக தினத்தை முன்னிட்டு மக்கள் மருந்தக திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். இந்த திட்டத்தால் பலனடைந்த மக்கள் பிரதமர் மோடிக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்தனர். அப்போது பிரதமர் கூறியதாவது: மக்கள் மருந்தகம் நாள் என்பது, ஒரு திட்டத்தை கொண்டாடுவதற்கான நாள் மட்டுமல்ல, இந்தத் திட்டத்தால் பயனடைந்த லட்சக்கணக்கான … Read more

முதல்வரின் மகனை நெருங்கும் ஐடி ரெய்டு – காத்திருக்கும் பெரிய ஆபத்து?

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகனும், அம்மாநில அமைச்சருமான ஆதித்யா தாக்கரேவின் நெருங்கிய நபரின் வீடுகளில், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசுக்கும், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் தொடக்கத்தில் இருந்தே முட்டல் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று, மும்பையில் உள்ள சிவசேனா கட்சி … Read more

பெண் ஆளுநரின் உரையின்றி தெலுங்கானாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது – வேதனை தெரிவித்த தமிழிசை

பெண்களுக்கு சம உரிமை என்று பேசிக் கொண்டிருக்கும் நாளில் பெண் ஆளுநரின் உரையின்றி தெலுங்கானாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேதனை தெரிவித்தார். புதுச்சேரி கம்பன் கலையரங்கில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் இவ்வாறு கூறினார். Source link

லடாக் மோதல் விவகாரம் – இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் வரும் 11ம் தேதி பேச்சுவார்த்தை

புதுடெல்லி: கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய படைகள் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 45 வீரர்கள் கொல்லப்பட்டனர் என ரஷ்யா ஊடகமான டாஸ் செய்தி வெளியிட்டது. சீனா இதை மறுத்தது. இதன்பின், கடந்த பிப்ரவரியில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர் என அதிகாரப்பூர்வ தகவலை சீன முதன் முறையாக ஒப்புக்கொண்டது.  இதற்கு … Read more

தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 29 பெண்களுக்கு நாரி சக்தி விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு

புதுடெல்லி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சிறப்பாக விளங்கிய 29 பெண்களுக்கு ‘நாரி சக்தி விருது’ வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவுரவப்படுத்தினார். ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் தொழில் முனைவோர், விவசாயம், புதுமை, சமூக பணி, கல்வி மற்றும் இலக்கியம்,  மொழியியல், கலை மற்றும் கைவினை, அறிவியல், தொழில்நுட்பம், மாற்றுத்திறனாளிகள் உரிமை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கும் பெண்களை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் ‘நாரி சக்தி … Read more