வரும் 27ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி – மத்திய அரசு

வருகிற 27ஆம் தேதி முதல் வழக்கமான சர்வதேச விமான சேவைக்கு அனுமதியளிக்கப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு அனுமதித்த வழித்தடங்களில் மட்டும் சர்வதேச விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில், வழக்கமான விமான போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்றி விமான சேவை … Read more

மத்தியில் மாற்று அணி இல்லாததால் பாஜக இன்னும் ஆட்சியில் உள்ளது – மம்தா பானர்ஜி கருத்து

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் தலைவரும்,மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.  நிகழ்ச்சியில் பேசிய அவர், மாற்று அணி இல்லாததால் மத்தியில் பாஜக இன்னும் ஆட்சியில் உள்ளதாக கூறியுள்ளார். பாஜகவினர் ஜனநாயகத்தை அழிக்க நினைக்கிறார்கள் என்றும், மாற்று சக்தியை உருவாக்க மற்ற எதிர்க்கட்சிகளுடன் திரிணாமுல் கட்சியும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  எதிர்க்கட்சி கூட்டணி உருவாகும் நாளில் பாஜக அகற்றப்படும் … Read more

ஜல்லிக்கட்டில் அனைத்து வகை மாடுகளையும் அனுமதிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

புதுடெல்லி: ஜல்லிக்கட்டில் அனைத்து வகை மாடுகளையும் அனுமதிக்க வேண்டும் எனக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்; வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும். நாட்டு மாடுகளுக்கு பெரிய திமில் இருக்கும் என்பதால் அதனை ஜல்லிக்கட்டு வீரர்கள் பிடிக்க வசதியாக இருக்கும். … Read more

இலக்கை எட்டியதா மகளிர் தினம்? அதிகாரத்துக்கு வந்துவிட்டனரா பெண்கள்? – ஓர் பார்வை

பெண்கள் எவ்வளவு முன்னேறி இருக்கிறார்கள் என்பதை வைத்தே ஒரு சமூகம் எவ்வளவு முன்னேறி இருக்கிறது என்பதை நான் அளவிடுவேன் என அம்பேத்கர் கூறினார். அந்த வகையில் பல்துறைகளில் பெண்கள் முன்னேற்றம் குறித்து இதில் பார்க்கலாம்.  >அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள நிர்வாகம் சார்ந்த வேலைகளில் பெண்கள் குறைந்த அளவிலேயே உள்ளனர்.  >கடைநிலை ஊழியராக இருப்பவர்களில் பெண்கள் கிட்டத்தட்ட 50 %; உயர் பதவி வகிப்பவர்கள் 20% மட்டுமே.  >செவிலியர்கள், ஆசிரியர்கள் பணியிலும் பெண்களின் பங்கு மிக அதிகம்.  … Read more

உலக அளவில் முதல் மூன்று நாடுகளில் இந்தியா இடம் பெற வாய்ப்பு; எந்தெந்த துறைகள்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: உலக அளவில் முதல் மூன்று நாடுகளில் இந்தியா இடம் பெறுவதற்கு உரிய வழிமுறைகள் உள்ளன என்றும் அது எந்தெந்த துறை என்றும் பிரதமர் மோடி கூறினார். வளர்ச்சிக்கான நிதி மற்றும் வளர விரும்பும் பொருளாதாரம்’ என்ற பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: நூற்றாண்டுக்கு ஒருமுறை பாதிக்கும் பெருந்தொற்றுக்கு பின்னர் இந்திய பொருளாதாரம் மீண்டும் வேகமடைந்துள்ளது. இது நமது பொருளாதார முடிவுகள் மற்றும் பொருளாதாரத்தின் வலுவான … Read more

கேரளாவின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!

தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தேசிய ஊரக சுகாதாரம் திட்டத்தின் கீழ் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவசர கால மருத்துவ தேவைகளுக்கு, இந்தச் சேவை எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், கேரள மாநிலத்தில் கனிவ் 108 (கேரள ஆம்புலன்ஸ் நெட்வொர்க் – Kerala Ambulance Network for Injured Victims) என்ற பெயரில் இந்த சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கேரள மாநிலத்தின் முதல் … Read more

இமாச்சலப் பிரதேசத்தில் மலைப்பாதையில் வாடகைக் கார் ஓட்டும் இளம் பெண் மீனாட்சி.!

இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் மலைப்பாதைகளில் வாடகைக் கார் ஓட்டும் இளம் பெண் மீனாட்சி பெண்களின் உறுதிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். பெண்கள் சுயமான முன்னேற்றத்தை அடைய முடியும் என்று உலக மகளிர் தினத்தையொட்டி அவர் தெரிவித்தார். மீனாட்சி நேகி என்ற இந்த இளம் பெண் கரடுமுரடான பனிபடர்ந்த மலைப்பாதைகளில் லாவகமாக காரை ஓட்டிச் சென்று சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்கிறார். எந்த வித நிர்ப்பந்தமும் இல்லாமல் விரும்பி இந்தத் தொழிலை மேற்கொண்டதாகக்கூறும் மீனாட்சி மலைப்பாதையில் காரை ஓட்டுவது மிகவும் … Read more

பெட்ரோல், டீசல் விலை: மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு முடிவெடுக்கும்- அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்து நீடிக்கிறது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கும் முன்பு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 100 டாலருக்கு குறைவாகவே இருந்தது. உக்ரைன்-ரஷியா போருக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியது. கடந்த 2-ந் தேதி கச்சா எண்ணெய் விலை 110 டாலர்களாக உயர்ந்தது. 3-ந் தேதி அது 118 டாலராக அதிகரித்தது. உக்ரைன் … Read more

கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த சர்வதேச விமான சேவைக்கு மார்ச் 27-ம் தேதி முதல் ஒன்றிய அரசு அனுமதி

டெல்லி: கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது சர்வதேச விமான சேவைக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மார்ச் 27-ம் தேதி முதல் வர்த்தக ரீதியிலான பயணிகள் விமனான போக்குவரத்து தொடங்கப்படும் என ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதும் விமான போக்குவரத்து நடைபெறு வருகிறது, இருப்பினும் ஒன்றிய உள்த்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள சர்வதேச விமான போக்குவரத்து மட்டுமே நடைபெற்று வருகிறது. வழக்கமான சர்வதேச … Read more

"பெட்டிய தூக்கிருவானுங்களோ…" – பைனாகுலருடன் வாக்கு இயந்திர அறையை சுற்றி வரும் வேட்பாளர்!

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஒருவர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை பைனாகுலர் மூலம் கண்காணித்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று நேற்று முடிவடைந்தது. இதன் தொடர்ச்சியாக வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் பெரும்பாலானவற்றில், பாஜகவே மீண்டும் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது இடத்தில் சமாஜ்வாதி கட்சி இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில், கடைசி இரண்டு கட்ட தேர்தல்களில் சமாஜ்வாதி கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருந்ததாக … Read more