இந்தியாவில் 2-ம் அலையின் தொடக்கத்தை விட குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா 3-ம் அலை முடிவுக்கு வந்த நிலையில் தினசரி பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,993 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 9-ந் தேதி நிலவரப்படி ஒரு நாள் பாதிப்பு 3 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. அதன்பிறகு நாள்தோறும் பாதிப்பு அதிகரித்து செப்டம்பரில் உச்சத்தை எட்டியது. பின்னர் படிப்படியாக சரிந்து … Read more

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி 29 பெண்களுக்கு விருதுகளை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்..!!

டெல்லி: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, 29 பெண்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கவுள்ளார். 2020, 2021ம் ஆண்டுக்கான பெண் சக்தி விருதுகளை 29 பெண்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்குகிறார். பெண் சக்தி விருது பெறும் பெண்களுடன் பிரதமர் நரேந்திர மோடியும் உரையாடுவார்.

பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு வெற்றி வாய்ப்பு; உ.பி. உட்பட 4 மாநிலங்களில் பாஜக முந்துகிறது: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்

புதுடெல்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் உத்தரபிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிஅமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நேற்றுடன் நிறைவு பெற் றது. வரும் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த சூழலில் பல்வேறு முன்னணி ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை நேற்று மாலை வெளியிட்டன. உத்தர பிரதேசத்தில் மொத்தம் … Read more

Exit poll: பஞ்சாபை வெல்லும் ஆம் ஆத்மி.. ஆட்சியை இழக்கும் காங். பரிதாபத்தில் பாஜக!

பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என்று பிமார்க் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. ஆத்மி கட்சி பிரமாதமான வெற்றியைப் பெறும் என்றும் அது கணித்துள்ளது. பஞ்சாப் சட்டசபையில் மொத்தம் 117 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு பிப்ரவரி 20ம்தேதி தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம், பஞ்சாப் லோக் காங்கிரஸ், பாஜக ஆகியவை முக்கியக் கட்சிகளாக போட்டியிட்டன. இத்தனை பேர் போட்டியிட்டாலும் கூட காங்கிரஸுக்கும், ஆம் ஆத்மிக்கும் … Read more

நேருக்கு நேர் மோத இருந்த இரண்டுவிமானங்கள், விமானியின் சாமர்த்தியத்தால் உயிர் பிழைத்த மம்தா பானர்ஜி <!– நேருக்கு நேர் மோத இருந்த இரண்டுவிமானங்கள், விமானியின் சாம… –>

நடுவானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேராக மோத இருந்த ஆபத்தான சூழலில் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானிகள் பெரும் விபத்தைத் தவிர்த்தனர். இந்த சம்பவத்தில் முதுகிலும் நெஞ்சிலும் பலத்த காயம் அடைந்ததாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜியின் தனி விமானம் வாரணாசியில் இருந்து கொல்கத்தாவுக்குப் புறப்பட்ட போது எதிரில் வேறு ஒரு விமானம் வருவதை அறிந்த விமானி துரிதமாக செயல்பட்டு விபத்தை தவிர்த்ததாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். ஆனால் விமானம் திடீரென கீழ் … Read more

ஜி.எஸ்.டி. குறைந்தபட்ச வரி 5-ல் இருந்து 8 சதவீதமாக உயர வாய்ப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டதால் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடு செய்வதற்காக 2022-ம் ஆண்டு வரை இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. தற்போது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் ஆகிய 4 வகைகளில் ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு குறைந்த பட்சமாக 5 சதவீதம் ஜி.எஸ்.டி. … Read more

சர்வதேச மகளிர் தினம் இன்று.. சிறப்பு டூடூலை வெளியிட்ட கூகுள்; கடற்கரையில் சிறப்பு மணல் சிற்பங்கள்!!

சென்னை : சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் உலக அளவில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் பெண்களை போற்றி, தங்கள் வாழ்த்தினை பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கூகுள் நிறுவனம் இன்று சிறப்பு ‘டூடுல்’ ஒன்றை வெளியிட்டுள்ளது. பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி இருப்பதை குறிப்பிடும் வகையில் இந்த டூடூல் அமைந்துள்ளது. மேலும், … Read more

"கருத்துக் கணிப்புகள் முக்கியமில்லை; நாங்கள்தான் வருவோம்" – அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்புகளை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்  நிராகரித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், “கருத்துக்கணிப்பில் அவர்களுக்கு கிடைத்ததை காட்டட்டும்,  உத்தரப் பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும்”எனக் கூறினார் நேற்றுடன் உத்தரப் பிரதேசத்தில் 7 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றது. இந்த சூழலில் பல நிறுவனங்கள் தங்களின் … Read more

உக்ரைனில் காயமடைந்த இந்திய மாணவருக்கு மத்திய அமைச்சர் வி.கே.சிங் நேரில் ஆறுதல்

புதுடெல்லி: உக்ரைனில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களில் ஏராளமான இந்திய மாணவர்கள் படித்துவந்தனர். இதனிடையே உக்ரைன்மீது ரஷ்யா போரைத் தொடங்கியுள்ளதால் அங்குள்ள மாணவர்களை ஆபரேஷன் கங்கா மூலம் இந்திய அரசு மீட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் குண்டு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் போலந்து எல்லைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது காயமடைந்த மாணவர் ஹர்ஜோத் சிங்கை, போலந்தின் ருசெஸ்ஸோ விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் … Read more

பஞ்சாப்பில் மண்ணை கவ்வும் காங்கிரஸ், பாஜக? – ஆம் ஆத்மி அமோக வெற்றி!

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 74 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வாக்குகள் வரும் 10 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில் அங்கு ஆட்சியை அமைக்கப் போவது யார் என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று வெளியாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன. … Read more