உக்ரைன் அதிபருடன் இன்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதால் அங்குள்ள மாணவர்களை மீட்பதில் இந்தியாவுக்கு கடும் சவாலாக உள்ளது. கடந்த 24-ந்தேதி ரஷியா தாக்குதலை தொடங்கியது. இரண்டு நாட்கள் கழித்து 26-ந்தேதி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் இந்திய பிரதமர் மோடி டெலிபோன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்தது தொடர்பாக பேசியதாக கூறப்பட்டது. கீவ், கார்கிவ் நகரில் இருந்து ஏராளமான மாணவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், சுமி நகரில் தற்போது சண்டை … Read more

ரஷ்ய எண்ணெய் எரிவாயுவுக்கு தடை?

புதுடெல்லி: உலகப் பொருளாதாரத்தில் இருந்து ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்தும் வகையில், ரஷ்யா எண்ணெய் மற்றும் எரிசக்தி பொருட்களை அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்வதைத் தடை செய்வது உள்ளிட்ட சட்டங்களை நாடாளுமன்றம் ஆராய்ந்து வருவதாக சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்து உள்ளார். இதற்கான வரைவு மசோதா விரைவில் வெளியிடப்பட உள்ளது.

குண்டு வீச்சு காரணமாக உக்ரைனின் சுமி பகுதியில் மாணவர்களை மீட்பதில் சிக்கல்

புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், மத்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை மீட்டு வருகிறது. எனினும், சுமி பகுதியில் தொடர்ந்து குண்டுகள் வீசப்படுவ தால் அங்குள்ள மாணவர்களை மீட்கும் பணியில் சிக்கல் உள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை இணை செயலாளர் அரிந்தம் பக்‌ஷி கூறியதாவது:- உக்ரைனில் இருந்து இதுவரை ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் 63 விமானங்களில் சுமார் … Read more

மணிப்பூர் எக்ஸிட் போல்; பாஜகவை அடிச்சு தூக்குமா காங்கிரஸ்?

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, மார்ச் 5ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பாஜக 60 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மணிப்பூரில் ஆட்சியை பிடிக்க 31 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். தற்போது பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் மணிப்பூர் … Read more

ஏழைகளின் நலத்தை உறுதிசெய்யும் மக்கள் மருந்தகம் – பிரதமர் பெருமிதம் <!– ஏழைகளின் நலத்தை உறுதிசெய்யும் மக்கள் மருந்தகம் – பிரதமர் … –>

மக்கள் மருந்தகங்கள் மலிவு விலையில் மருந்துகளை வழங்கி மக்களின் நலவாழ்வை உறுதி செய்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்கள் மருந்தக உரிமையாளர்கள், பயனாளிகளுடன் காணொலியில் கலந்துரையாடிய பிரதமர் மோடி, இந்தத் திட்டம் பயனாளிகளின் நலனில் அக்கறை காட்டுவதுடன், மருந்துக்கான செலவையும் குறைத்துள்ளதாகத் தெரிவித்தார். உடலுக்கான மருந்தை வழங்குவதுடன், மக்கள் மனத்தில் உள்ள கவலைகளையும் குறைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். ஏழைகள் இலவசமாக டயாலிசிஸ் செய்துகொள்வதுடன், புற்றுநோய், நீரிழிவு, காசநோய்க்கான மருந்துகள் உட்பட எண்ணூற்றுக்கு மேற்பட்ட மருந்துகள் மலிவு விலையில் … Read more

ஹங்கேரியில் இருந்து மேலும் 160 இந்தியர்கள் இன்று டெல்லி வந்தனர்

புதுடெல்லி: நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்துள்ளது. இதனால் உக்ரைனில் உள்ள 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவித்தனர். அவர்கள் பக்கத்து நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டு ஆபரே‌ஷன் கங்கா செயல் திட்டத்தின் கீழ் பயணிகள் விமானம், விமானப்படை விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். நேற்று வரை 15 ஆயிரத்து 920 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இன்று 8 விமானங்கள் மூலம் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா அழைத்துவரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு … Read more

ஓரிரு நாளில் தமிழக மாணவர்கள் முழுமையாக மீட்கப்படுவார்கள்: டெல்லியில் எம்பி திருச்சி சிவா தகவல்

புதுடெல்லி: உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்கள் தினமும் திரும்பிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் டெல்லியில் திமுக எம்பி திருச்சி சிவா அளித்த பேட்டியில், ‘‘உக்ரைன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தற்போது வரையில் 1196 மாணவர்கள் தமிழகம் வந்தடைந்துள்ளனர். இன்று(நேற்று) 200 பேர் வரவுள்ளனர். குறிப்பாக தங்களின் சொந்த செலவில் மட்டும் 257 மாணவர்கள் வந்துள்ளனர். இதைத்தவிர உக்ரைனில் நிலைமை சீராகி விடும் என தெரிவித்து 30 மாணவர்கள் வர விருப்பமில்லை என தெரிவித்துள்ளனர். சுமியில் … Read more

Exit Poll Results 2022 | ஆம் ஆத்மி வசமாகும் பஞ்சாப்: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

புதுடெல்லி: ஐந்து மாநிலத் தேர்தல் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியைக்கும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. கடந்த இரண்டு மாதங்களாக நடந்த ஐந்து மாநிலத் தேர்தல் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில், முக்கிய எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மியும் தீவிரமாக தேர்தல் களத்தில் பணியாற்றி இருந்தது. தற்போது தேர்தலுக்குப் … Read more

உத்தர பிரதேசத்தில் யார் ஆட்சி? வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள்!

உத்தரபிரதேச மாநிலத்தை அடுத்த ஐந்து ஆண்டுகள் யார் ஆள வேண்டும் என முடிவு செய்து மக்கள் வாக்களித்து முடித்துள்ளனர். ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் இன்று மாலை 6 மணியுடன் இறுதி கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் வியாழன் (மார்ச் 10) அன்று வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக மக்களின் எண்ணவோட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. 403 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் … Read more

அரசு மருத்துவமனையில் செவிலியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவர் கைது <!– அரசு மருத்துவமனையில் செவிலியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட… –>

புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில், செவிலியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மருந்து மாத்திரைகளை வீசி எறிந்த இருவரை போலீசார் விரைந்து வந்து கைது செய்தனர். திருபுவனை அரசு மருத்துவமனைக்கு கையில் ரத்த காயங்களுடன் வந்த சுஜித் என்பவருக்கு செவிலியர் ஒருவர் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். சுஜித்துடன் வந்த இருவர், செவிலியர் சரியாக கட்டு போடவில்லை என குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மருத்துவமனையில் இருந்த மாத்திரைகளையும் தரையில் வீசி எறிந்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து விரைந்த போலீசார் இருவரையும் உடனடியாக … Read more