Exit Poll Results 2022 | உ.பி-யில் மீண்டும் பாஜகவின் யோகி ஆட்சி – தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

புதுடெல்லி: ஐந்து மாநிலத் தேர்தல் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தியாவே உற்றுநோக்கும் உத்தரப் பிரதேச தேர்தல் முடிந்துள்ள நிலையில், இதன் கருத்துக் கணிப்புகள் மீண்டும் பாஜகவே மீண்டும் ஆட்சிபுரியும் என்கின்றன. கடந்த இரண்டு மாதங்களாக நடந்த ஐந்து மாநிலத் தேர்தல் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 7-வது கட்டத் தேர்தல் … Read more

விமான பயணத்தில் நேர்ந்த அந்த சம்பவம்… முதல்வர் அதிர்ச்சி தகவல்!

ஏழாவது மற்றும் இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நேற்று முன்தினம் (மார்ச் 5), உத்தரப் பிரதேசத்தில் இருந்து விமானத்தில் கொல்கத்தா திரும்பி கொண்டிருந்தார். அப்போது கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது அவர் பயணம் செய்த விமானம் திடீரென குலுங்கியது. இதில் மமதாவுக்கு உள்காயம் ஏற்பட்டது. இருப்பினும் விமானி சாதுர்யமாக விமானத்தை செலுத்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் பத்திரமாக … Read more

நகைக்கடை காதல்… சர்ச்சில் டும்..! டும்..! ஓட்டலில் கொலை… வாழ்க்கையை முடித்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ! <!– நகைக்கடை காதல்… சர்ச்சில் டும்..! டும்..! ஓட்டலில் கொல… –>

திருவனந்தபுரம் ஜோஸ்கோ நகைக்கடையில் வரவேற்பாளராக வேலைப்பார்த்த பெண் ஒருவர், ஓட்டலின் படுக்கை அறையில் சடலமாக கிடந்த சம்பவத்தில் அவருடன் தங்கி இருந்த திருவண்ணாமலை கடை ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். ரகசியமாக தாலி கட்டிய போது எடுத்த புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸா வைத்ததால் நிகழ்ந்த விபரீத கொலை சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. திருவனந்தபுரம் அடுத்த தம்பானூரில் உள்ள ஓட்டல் ஒன்றின் படுக்கை அறையில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து … Read more

மகளிர் தினத்தை கவுரவிக்க ‘டூடுல்’ வெளியிட்டது கூகுள்

புதுடெல்லி: சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்நாள் பல நாடுகளில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பது பெண் இனத்தின் பெருமைகளை மற்றவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கூகுள் நிறுவனம் இன்று சிறப்பு ‘டூடுல்’ வெளியிட்டது. பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி இருப்பதை குறிப்பிடும் வகையில் அது அமைந்திருந்தது.   மேலும், சிறப்பு அனிமேஷன் வீடியோவையும் கூகுள் வெளியிட்டது. மகளிர் தினத்தின் வரலாற்று பின்னணி, அதன் … Read more

வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் விவகாரம் தமிழக சிபிசிஐடி போலீஸ் விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: சென்னை அண்ணாநகர் மேற்கு தங்கம் காலனியைச் சேர்ந்தவர் சங்கரசுப்பு. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவரது மகன் சதீஷ்குமார்(24). இவர் கடந்த 2011ல் மாயமானார். அவரது உடல் அதே ஆண்டு ஜூலை 13ம் தேதி சென்னை ஐ.சி.எப் வடக்கு காலனி ஏரியில் மீட்கப்பட்டது. மேலும் சதீஷ்குமாரின் சட்டை பாக்கெட்டில் இரண்டு பிளேடுகள் மற்றும் கழுத்தில் நான்கு வெட்டுக் காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். சதீஷ்குமார் மரணம் தற்கொலை என சிபிஐயும், கொலை என சிறப்பு புலனாய்வு … Read more

Exit Poll Results 2022 | மணிப்பூரில் முந்தும் பாஜக, கடும் போட்டியில் கோவா, உத்தராகண்ட்

கடந்த இரண்டு மாதங்களாக நடந்த ஐந்து மாநிலத் தேர்தல் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகவும் மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கு இரு கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது. இதனிடையே இந்த தேர்தலையொட்டி பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. உத்தராகண்ட் மாநில கருத்துக்கணிப்பு முடிவுகள்: கடந்த 2017-ல் இந்த மாநிலத்தில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அதன் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் … Read more

Exit poll: பஞ்சாபில் மட்டும் பெருசு.. மற்ற 4 மாநிலங்களில் புஸ்வானமான ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாபில் மட்டுமே மக்கள் மவுசு கிடைத்திருப்பதை எக்ஸிட் போல் முடிவுகள் காட்டுகின்றன. மற்ற 4 மாநிலங்களில் அந்தக் கட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 5 மாநில சட்டசபைத் தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று மாலை வெளியாகின. இதில் பஞ்சாப் மாநிலத்தைத் தவிர பிற மாநிலங்களில் மீண்டும் பாஜகவே ஆட்சியமைக்கும் வாய்ப்புகள் தெரிய வந்துள்ளது. இந்த எக்ஸிட் போல் முடிவுகளில் ஆம் ஆத்மிக்கு ஒரே ஒரு மாநிலத்தில் மட்டுமே … Read more

உத்தரப்பிரதேசத்தில் இறுதி கட்ட வாக்குப்பதிவு நிறைவு <!– உத்தரப்பிரதேசத்தில் இறுதி கட்ட வாக்குப்பதிவு நிறைவு –>

உத்தரப்பிரதேசத்தில் 7வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. வாரணாசி, காசிப்பூர், மிர்சாப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. 613 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருக்கின்றனர். மாலை 5 மணி நிலவரப்படி 54 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்குப்பதிவு முடிந்ததும், … Read more

விமானியின் சாதுர்யத்தால்தான் உயிர் பிழைத்தேன்- மம்தா பானர்ஜி பேட்டி

கொல்கத்தா: மேற்கு வங்காள முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச மாநிலத்தில் பிரசாரம் செய்துவிட்டு, கொல்கத்தாவுக்கு திரும்பியபோது அவர் பயணம் செய்த விமானம் திடீரென கடுமையாக குலுங்கியது. இதில், மம்தாவுக்கு உள்காயம் ஏற்பட்டது.  எனினும், விமானி சாமர்த்தியமாக விமானத்தை செலுத்தி, கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார். இது குறித்து விரிவான அறிக்கை கேட்டு, மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கு, மேற்கு வங்காள அரசு கடிதம் … Read more

ஒன்றிய அரசின் சமரச பேச்சுக்கு கர்நாடக கட்சிகள் எதிர்ப்பு; அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை: பசவராஜ் பொம்மை..!

பெங்களூரு: மேகதாது அணை விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின் போதே அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதன் பின்னர் டெல்லி சென்று நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கடநாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான வரைவு திட்ட அறிக்கையை தயாரித்து ஒன்றிய நீர்வளத்துறைக்கு கர்நாடக அரசு அனுப்பி வைத்துள்ளது. மேகதாதுவில் … Read more