உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் உறுதி

புதுடெல்லி: உக்ரைனின் சுமி நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற தமது தரப்பில் அனைத்து உதவி நடவடிக்கைகளும் செய்து தரப்படும் என்று பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார். உக்ரைனில் உருவாகியிருக்கும் நிலைமை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையின் நிலைமை குறித்து … Read more

Goa: புதுசா வந்த மமதா "கெத்து".. கிங் மேக்கராக உருவெடுக்கும் திரினமூல்!

கோவா சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் திரினமூல் காங்கிரஸ் கட்சி அங்கு கிங் மேக்கராக உருவெடுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கோவாவில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது.. கடந்த 2017ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ்தான் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் தேர்தலுக்குப் பின்னர் பாஜக பல்வேறு கோல்மால்களைச் செய்து ஆட்சியைக் கைப்பற்றி விட்டது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்குத் தாவியதால் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது நடந்துள்ள தேர்தலில் அங்கு … Read more

5 மாநிலங்களில் ஆட்சி அமைப்பது எந்த கட்சி ?… கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியீடு <!– 5 மாநிலங்களில் ஆட்சி அமைப்பது எந்த கட்சி ?… கருத்துக் க… –>

உத்தரப்பிரதேசம் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. 403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்று நியூஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. 70 தொகுதிகள் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்க … Read more

உத்தரப் பிரதேசத்தில் இறுதிக்கட்ட தேர்தல் நிறைவு- மாலை 5 மணி வரை 54.18 சதவீத வாக்குகள் பதிவு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இன்று 7-வது மற்றும் இறுதிக்கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிகளில் மொத்தம் 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த சாகியா, ராபர்ட்கஞ்ச், துத்தி ஆகிய தொகுதிகளில் மட்டும் 4 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவடைந்தது. காலை 11 மணி நிலவரப்படி 21.55 சதவீத … Read more

பங்குனி உத்திரத் திருவிழா: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு

கேரளா: பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை  திறக்கப்படுகிறது. புதன் கிழமை முதல் சன்னிதானத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் போா்டு அறிவித்துள்ளது. மாத பூஜையை முன்னிட்டு வரும் 12-ம் தேதி வரை  நடை திறந்து பூஜைகள் நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும் மாத பூஜையின் தொடர்ச்சியாக 18-ம் தேதி பங்குனி உத்திர ஆறாட்டு விழா தொடங்க உள்ளது. பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை … Read more

உத்தரப் பிரதேசத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு – மார்ச் 10ல் தேர்தல் முடிவுகள்

உத்தரப் பிரதேசத்தில் 7 ஆவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைந்தது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் இறுதிக்கட்ட தேர்தல் வாரணாசி, அசம்கர்க், மாவ், ஜான்பூர், காஸிபூர் சந்தவுளி, மிர்ஸாபூர், படோஹி உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் 54 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு நடைபெற்ற 54 தொகுதிகளில் 11 தொகுதிகள் பட்டியலினத்தவர்களுக்கும், இரு தொகுதிகள் பழங்குடியின மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தன. 2 கோடிக்கும் மேற்பட்டோர் இந்த தேர்தலில் … Read more

உக்ரைனில் இருந்து நாடு திரும்புவதற்கு இந்திய மாணவர்களுக்கு உதவும் ஜெர்மனி தமிழர்கள்

புதுடெல்லி: உக்ரைனில் இந்திய மாணவர்கள், தாய்நாடு திரும்ப ஜெர்மனி வாழ் தமிழர்கள் பல்வேறு வகைகளில் உதவி வருகின்றனர். ரஷ்யாவின் தாக்குதல் நடை பெறும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை ‘ஆபரேஷன் கங்கா’என்ற பெயரில் மத்திய அரசு மீட்டு வருகிறது. அதற்காக உக்ரைனின் அண்டை நாடுகளாக உள்ள ருமேனியா, ஹங்கேரி, போலந்து மற்றும் லெவேஸ்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு இந்தியர்கள் வரவேண்டி உள்ளது. அப்படி எல்லையில் உள்ள நாடு களுக்கு வரும் இந்தியர்கள், அங்கிருக்கும் இந்திய மீட்பு விமானங்களில் இந்தியா … Read more

Exit poll 2022: ஆட்சியை தக்க வைத்தாலும்.. 3 மாநிலங்களில் பாஜகவுக்கு சரிவு!

கடந்த 2017 சட்டசபைத் தேர்தலில் பெற்ற இடங்களுடன் ஒப்பிடுகையில் பாஜகவுக்கு 3 பெரிய மாநிலங்களில் இந்த முறை குறைந்த இடங்களே கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிய வருகிறது. உ.பி, உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் இன்றோடு முடிவடைந்தது. வாக்குப் பதிவு முடிந்ததும், எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா … Read more

5 மாநில தேர்தல் – வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியீடு <!– 5 மாநில தேர்தல் – வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப… –>

உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்ரகாண்ட், கோவா மாநில சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியீடு உத்ரகாண்ட் மாநிலம் உத்ரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைக்குமென ரிபப்ளிக் டி.வி கருத்து கணிப்பு டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் உத்ரகாண்டில் பா.ஜ.க.வுக்கு நூலிழை பெரும்பான்மை கிடைக்குமென தகவல் உத்ரகாண்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்குமென ஏ.பி.பி. சிவோட்டர் கருத்து கணிப்பு கோவா மாநிலம் கோவா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைக்குமென ரிபப்ளிக் டி.வி கருத்து கணிப்பு கோவாவில் எந்த … Read more

5 மாநில கருத்துக் கணிப்பு முடிவுகள்… பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கிறது ஆம் ஆத்மி கட்சி

புதுடெல்லி: உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.  117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இன்று அந்த மாநிலத்திற்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு … Read more