உ.பி.யில் இறுதிக்கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் 54 தொகுதிகளுக்கு 7-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி, அசம்கர்க், மாவ், ஜான்பூர், காஸிபூர் சந்தவுளி, மிர்ஸாபூர், படோஹி உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் 54 தொகுதிகளுக்கு 7-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட தேர்தலுக்கான பரப்புரை சனிக்கிழமையுடன் … Read more

உக்ரைனில் இருந்து இதுவரை 1,200+ தமிழக மாணவர்கள் நாடு திரும்பினர்; செல்லப் பிராணிகளுடன் சிலர் வருகை

புதுடெல்லி: உக்ரைனில் இருந்து இதுவரை சுமார் 1,200 தமிழக மாணவர்கள் நாடு திரும்பினர். இதனிடையே, நாடு திரும்பும் இந்திய மாணவர்கள் தங்களது செல்லப் பிராணிகளுடன் வருகை புரிவது அதிகரித்துள்ளது. தமிழக மாணவர்கள் சிலர் தங்களின் வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளுடன் டெல்லியிலிருந்து விமானத்தில் அனுமதி கிடைக்காதமையால் ரயிலில் தமிழகம் திரும்புகின்றனர். உக்ரைனில் போர் தொடங்கிய பின்னர், அங்கிருந்து இந்திய மாணவர்களை தாயகத்துக்கு அழைத்து வரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு மாணவர் தன்னுடைய செல்ல நாயுடன்தான் … Read more

தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்… அமித் ஷா அதிர்ச்சி தகவல்!

மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் ( CISF ) 53 ஆவது நிறுவன நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளையொட்டி, உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாதில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது: நாட்டின் பாதுகாப்பு தேவைக்கு ஏற்ப மத்திய தொழிலக பாதுகாப்பு படை பிரிவு விரிவுப்படுத்தப்பட வேண்டும். தற்போது, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் மூலமாக தாக்குதல் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற அச்சுறுத்தல்களை கருத்தில்கொண்டு எதிர்கால பாதுகாப்பு தேவைகளுக்காக நம்மை நாம் … Read more

உக்ரைன் அதிபருடன், பிரதமர் மோடி பேச்சு <!– உக்ரைன் அதிபருடன், பிரதமர் மோடி பேச்சு –>

உக்ரைன் அதிபருடன், பிரதமர் மோடி பேச்சு இந்திய மாணவர்கள் மீட்பு குறித்து பிரதமர் பேச்சு இந்தியர்களின் பாதுகாப்பான வெளியேற்றம் – வலியுறுத்தல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன், பிரதமர் நரேந்திர மோடி பேச்சு தொலைபேசி வாயிலாக உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு தொலைபேசி வாயிலாக 35 நிமிடங்கள் உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு சுமி நகரில் உள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க உதவ வேண்டும் என பிரதமர் வலியுறுத்தல் மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை … Read more

உ.பி. சட்டசபை கடைசி கட்ட தேர்தல்: 11 மணி வரை 21.55 சதவீத வாக்குப்பதிவு

403 இடங்களை கொண்ட உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்று 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மூன்று இடங்களில் மட்டும் காலை 7 மணியில் இருந்து மாலை 4 மணி வரை நடைபெறும். மற்ற இடங்களில் மாலை 6 மணி தேர்தல் நடைபெறுகிறது. … Read more

புதுச்சேரியில் பூஜ்யமான கொரோனா தொற்று: 28 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிக்சை பெறுவதாக தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை எனவும், புதுச்சேரியில் 28 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிக்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

"மேகதாது விவகாரத்தில் வைகோ காங்கிரஸைக் கண்டிக்காதது ஏன்? " – அண்ணாமலை

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக பாஜகவைக் கண்டித்து நீண்ட ஓய்வுக்குப் பிறகு அறிக்கை கொடுத்திருக்கும் வைகோ, தங்கள் கூட்டணிக் கட்சியில் இருக்கும் காங்கிரஸை ஏன் கண்டிக்கவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மேகதாதுவில் அணை கட்ட கிளம்பியதே அப்போதிருந்த காங்கிரஸ் ஆட்சிதானே என அறிக்கை வாயிலாக வினவியுள்ள அண்ணாமலை, அணை கட்டுவதற்காக பாதயாத்திரை செல்கிறேன் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் சித்தராமையா சொல்லியிருப்பது வைகோவின் கண்களுக்குப் புலப்படவில்லையா எனக் கேட்டுள்ளார். நதி நீர் … Read more

உக்ரைனில் தவித்த 15,900 இந்தியர்கள் இதுவரை மீட்பு

புதுடெல்லி: உக்ரைனில் நடைபெறும் போரைத் தொடர்ந்து அதன் அண்டை நாடுகளில் இருந்து இதுவரை 15,900க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ், 11-க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள் மூலம், 2,135 இந்தியர்கள், யுக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து நேற்று அழைத்து வரப்பட்டனர். இத்துடன், 15,900 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா … Read more

உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு?

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ராணுவ இலக்குகள், அரசின் சொத்துகளை தாக்கி அழிப்பதே இலக்கு என முதலில் தெரிவித்த ரஷ்யா, தற்போது உக்ரைன் நாட்டின் நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் என்று உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று முடிந்துள்ளன. ஆனாலும், ஆக்கப்பூர்வ முடிவுகள் இதுவரை எடுக்கப்படவில்லை. அதேசமயம், ரஷ்யா போரை … Read more

உத்தரப் பிரதேசத்தில் 54 தொகுதிகளில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு <!– உத்தரப் பிரதேசத்தில் 54 தொகுதிகளில் இன்று இறுதிக்கட்ட வாக… –>

உத்தரப் பிரதேசத்தின் 9 மாவட்டங்களில் உள்ள 54 சட்டமன்றத் தொகுதிகளில் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது.  உத்தரப் பிரதேசத்தில் ஏற்கெனவே ஆறு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் இறுதிக்கட்டமாக இன்று 9 மாவட்டங்களில் 54 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்தத் தொகுதிகளில் மொத்தம் 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசி, சமாஜ்வாதிக் கட்சியின் வலுக்கோட்டையான ஆசம்கர் ஆகியன இவற்றில் அடங்கும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் … Read more