தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணா கைது!

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணா அண்மையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக, அவர் பதவிக்காலத்தில் பங்குச் சந்தை தொடர்பான மிக ரகசிய தகவல்களை இமயமலை சாமியார் ஒருவரிடம் பகிர்ந்துகொண்டுள்ளதாக பிப்ரவரி 11ஆம் தேதி செபி வெளியிட்ட உத்தரவில் தெரிவித்தது. மேலும், தேசிய பங்குச் சந்தையின் குழும அதிகாரியாக ஆனந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டதிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவித்த செபி, முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியத்தை உயர் பதவியில் நியமித்து அவருக்கு அதிக … Read more

தெலுங்கானா சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரை இல்லாமல் இன்று ஆரம்பம் <!– தெலுங்கானா சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரை இல்லாமல் இன்று… –>

தெலுங்கானாவில் ஆளுநர் உரை இல்லாமல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. முதல் நாளான இன்று நிதி அமைச்சர் ஹரிஷ் ராவ் 2022-23-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் வழக்கமாக இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஆளுனர் உரை நிகழ்த்துவது வழக்கம். ஆனால் இந்த கூட்டத்தொடர் ஆளுநர் உரை இல்லாமல் தொடங்குகிறது. இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இல்லை என்பதாலும் ஏற்கனவே நடந்த தொடரின் தொடர்ச்சி என்பதாலும் ஆளுனரின் உரை தேவையில்லை என்றும் … Read more

உ.பி. சட்டசபை தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

லக்னோ: உத்தர பிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் 7-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. அசம்கார், மாவ், ஜான்பூர், காஜிப்பூர், சண்டாலி, வாரணாசி, மிர்சாபூர், பதோகி மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களுக்கு உட்பட்ட 54 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் 613 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். இவர்களது அரசியல் எதிர்காலத்தை 2.06 கோடி வாக்காளர்கள் … Read more

இந்தியாவின் செல்வாக்கால் `ஆபரேஷன் கங்கா’ வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்

புனே: ‘உலக அரங்கில் வளர்ந்து வரும் இந்தியாவின் செல்வாக்கினால்தான் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டம் வெற்றி பெற்றது,’ என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். உக்ரைனில் போர் நடக்கும் நிலையில், அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் உள்பட 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கித் தவித்தனர். இவர்களை தாய் நாடு அழைத்து வர ‘ஆபரேஷன் கங்கா’ திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் 13,700 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டதாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், புனேயில் … Read more

அமராவதிதான் ஆந்திராவின் தலைநகரம்: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

அமராவதி: ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம், தனியாக பிரிந்தபின்னர், ஹைதராபாத் தெலங்கானாவின் நிரந்தர தலைநகரமானது. இதனால், ஆந்திராவுக்கு குண்டூர்-விஜயவாடா இடையே மாநிலத்தின் மையப் பகுதியில் தலைநகரம் அமைக்க சந்திரபாபுநாயுடு ஆட்சியின் போது, இப்பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து நிலங்கள் கேட்கப்பட்டன. இதற்கு விவசாயிகளும் தங்களது விவசாய நிலங்களை வழங்கினர். இதில் தற்காலிகமாக தலைமைச் செயலகம், சட்டப் பேரவை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு அந்த இடத் திலேயே பேரவை கூட்டங் களும் நடத்தப்பட்டன. ஆனால், ஜெகன் மோகன் ஆட்சிக்கு வந்ததும், 3 … Read more

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுத்து பயணித்த பிரதமர்.. மாணவர்களுடன் கலந்துரையாடல்..! <!– மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுத்து பயணித்த பிரதமர்.. மாணவர்க… –>

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி, பயணச்சீட்டு வாங்கி ரயிலில் பயணித்து மாணவியர் மற்றும் பயணியருடன் கலந்துரையாடினார். புனேயில் கிழக்கு – மேற்கு, தெற்கு வடக்கு என இருவழித்தடங்களில் 32 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாகக் கிழக்கு மேற்குத் தடத்தில் பணி முடிக்கப்பட்ட 12 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். பயணச்சீட்டு வாங்கிக் கார்வார் … Read more

உக்ரைனில் காயமடைந்த இந்திய மாணவர் இன்று நாடு திரும்புகிறார்

புதுடெல்லி: உக்ரைன், ரஷியா இடையே 10 நாளுக்கும் மேலாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரனை போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். சிறப்பு விமானங்களில் இதுவரை 15,920 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, உக்ரைனில் வேன் ஒன்றில் 3 பேருடன் சென்ற இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் … Read more

15 ஆண்டுகளுக்கு பின் தீவிரவாதிகள் வெறி ஜம்முவில் டிரோன் மூலம் திரவ வெடிபொருள் வீச்சு: அதிகாரிகள் விசாரணை

ஸ்ரீநகர்: ஜம்முவில் 15 ஆண்டுகளுக்கு பிறகு டிரோன் மூலம் திரவ வெடிபொருள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை அளித்துள்ளது. பாகிஸ்தான் எல்லை வழியாக காஷ்மீருக்குள் டிரோன்கள் மூலம், தீவிரவாதிகளுக்கு வெடிபொருட்கள், ஆயுதங்கள், போதை பொருட்கள் வீசப்படுகின்றன. அதோடு, வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தவும் முயற்சிக்கப்படுகிறது. இவற்றை இந்திய படைகள் முறியடித்து வருகின்றன. இந்நிலையில், ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லை வழியாக கடந்த மாதம் 24ம் தேதி பாகிஸ்தானில் இருந்து நுழைந்த டிரோன்கள் மூலம் மூன்று பாட்டில்கள் வெள்ளை … Read more

தெலங்கானாவுக்கு முன் கூட்டியே பேரவைத் தேர்தல்?

தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) ஆட்சியில் உள்ளது. சந்திரசேகர ராவ் முதல்வராக நீடித்து வருகிறார். இந்நிலையில், தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத் காந்தி பவனில் கூறியதாவது: தெலங்கானாவில் அடுத்தது காங்கிரஸ் ஆட்சிதான். ஆனால், பிரசாந்த் கிஷோர் மூலம் முதல்வர் சந்திரசேகர ராவ் சர்வே எடுக்கிறார். ஆதலால், இந்த ஆண்டு இறுதியில் ஆட்சியை கலைத்து விட்டு, அடுத்தாண்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த முடிவு செய்வார் சந்திரசேகர ராவ். என்று ரேவந்த் கூறினார். Source … Read more

பஞ்சாப்பில் 4 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட பாதுகாப்பு படை வீரர் <!– பஞ்சாப்பில் 4 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை ச… –>

பஞ்சாப்பில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தனது சக பாதுகாப்பு படைவீரர்கள் 4 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அமிர்தசரஸின் ஹாசா கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மஹாராஷ்டிராவைச் சேர்ந்த Sattepa என்ற எல்லை பாதுகாப்பு படை வீரர், திடீரென தனது சக பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சக … Read more