ரஷ்யாவுக்கு அழுத்தம் தர இந்தியாவுக்கு பிரிட்டன் வலியுறுத்தல் <!– ரஷ்யாவுக்கு அழுத்தம் தர இந்தியாவுக்கு பிரிட்டன் வலியுறுத்தல் –>

உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி ரஷ்யாவுக்கு இந்தியாவும் சீனாவும் அழுத்தம் தர வேண்டும் என பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. ரஷ்யாவுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள இரு நாடுகளும், உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டிக்கவில்லை எனப் பிரிட்டன் துணைப் பிரதமர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினரான சீனாவும், உறுப்பினரான இந்தியாவும் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்கள் மீது வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இரு நாடுகளும் ரஷ்யாவுக்கு அழுத்தம் தர வேண்டும் என டொமினிக் … Read more

மைசூரில் கனவுத் திட்டம்: ரூ.81 கோடி மதிப்பில் கோளரங்கம் – அடிக்கல் நாட்டினார் நிர்மலா சீதாராமன்

கர்நாடகாவில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் உள்ள வளாகத்தில் ரூ.81 கோடி மதிப்பில் பிரம்மாண்ட கோளரங்கம் அமைக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராம் இன்று அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராம் மேலும் கூறியதாவது:- மைசூரு பல்கலைக்கழகத்தில் உருவாகி வரும் கோளரங்கம் இளம் விஞ்ஞானிகள் பயன்படுத்தும் தரவுகளை நிகழ்நேர அடிப்படையில் பார்க்கும் வகையில் அமைக்கப்படுகிறது. இது கோளரங்கத்தைவிட மேலானது. இந்த திட்டம் மார்ச் 2023-ம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்ப்படுகிறது. லடாக் வானத்தை … Read more

பாஸ்போர்ட்டை இழந்து தவிக்கும் இளைஞரை நாளை இந்தியா அழைத்து வர உள்ளதாக ஒன்றிய அமைச்சர் ட்வீட்

டெல்லி: கீவ் பகுதியில் பாஸ்போர்ட்டை இழந்து தவிக்கும் ஹர்ஜோத் சிங் என்பவரை நாளை இந்தியா அழைத்துவர உள்ளதாக ஒன்றிய அமைச்சர்  வி.கே.சிங் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். கீவ் பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் குண்டு பாய்ந்த நிலையில் தனது பாஸ்போர்ட்டை ஹர்ஜோத் சிங் தவற விட்டார்.

புதுச்சேரி: கடல் சீற்றத்தால் பாரடைஸ் கடற்கரை கடுமையான சேதம் – கடலில் இறங்க தடை

புதுச்சேரியில் கடல் சீற்றம் அதிகரித்ததன் காரணமாக பாரடைஸ் கடற்கரை கடுமையாக சேதமடைந்ததால் அரசு சுற்றுலாத்துறைக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, வட தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கே 280 கி.மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு, தென்கிழக்கே 290 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் இன்றும், நாளையும் … Read more

கரோனா, உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டில் மருத்துவப் பயிற்சி தொடர முடியாத மாணவருக்கு இந்தியாவில் அனுமதி தந்தது என்எம்சி

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று மருத்துவ பயிற்சியை (இன்டெர்ன்ஷிப்) மேற்கொண்டு வரும் இந்திய மாணவர்கள், அவர்களது பயிற்சி தவிர்க்க முடியாத காரணத்தால் தடை படுமாயின் அவர்கள் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ளலாம்என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்து அங்கேயே மருத்துவ பயிற்சியை மேற் கொண்டு வரும் இந்திய மாணவர் கள் கரோனா பரவல் காரணமாகவோ அல்லது ரஷ்யா-உக்ரைன் போர் சூழல் காரணமாகவோ நாடு திரும்பியிருந்தால், அவர்கள் இந்தியாவில் மருத்துவ பயிற்சி … Read more

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் எவ்வளவு பேர்? – மத்திய அரசு தகவல்!

உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளில் இருந்து கடந்த 22 ஆம் தேதி முதல் தற்போது வரை 15,900 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் போர் நடைபெற்று வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, ரஷ்யப் படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால் உக்ரைன் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதை அடுத்து உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை … Read more

உக்ரைனில் சிக்கிய மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்கும் ஆப்ரேஷன் கங்காவின் இறுதிக்கட்டம் <!– உக்ரைனில் சிக்கிய மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்கும்… –>

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்கும் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் இறுதிக்கட்டம் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஹங்கேரியில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பில், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் மொபைல் நம்பர், இருப்பிட தகவலோடு தூதரகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளது. உக்ரைனில் தங்கியுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள், அவசரகால அடிப்படையில் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹங்கேரி எல்லைக்கு அருகே உள்ள உக்ரைன் பகுதிகளில் உள்ள இந்தியர்கள், … Read more

உக்ரைனில் இருந்து திரும்பும் மாணவர்களுக்கு அரசு செலவில் இந்தியாவில் படிக்க வாய்ப்பு- திக்விஜய சிங் கோரிக்கை

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். உக்ரைன் தனது வான் எல்லையை மூடியதால், இந்தியர்கள் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவாக்கியா, ஹங்கேரி சென்று அங்கிருந்து தாயகம் திரும்பி வருகிறார்கள்.   ஆபரே‌ஷன் கங்கா திட்டத்தின் மூலம் இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பயணிகள் விமானம் மற்றும் இந்திய விமானப்படை விமானம் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி, இதுவரை 15 ஆயிரத்து 900 இந்தியர்கள் உக்ரைனில் இருந்து … Read more

பண மோசடி வழக்கில் சிக்கிய பாலிவுட் நடிகைக்கு ‘பிடிவாரண்ட்’- உத்தரபிரதேச நீதிமன்றம் அதிரடி

மொரதாபாத்: பண மோசடி வழக்கில் சிக்கிய பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு எதிராக உத்தரபிரதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லியில் நடந்த ‘இந்தியா பேஷன் மற்றும் பியூட்டி விருது’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம் பணம் வாங்கியிருந்தார். அவருக்கு நான்கு தவணைகளில் ரூ.37 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால், கடைசி நிமிடத்தில் அவர் வர மறுத்துவிட்டார்.இதனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், கொடுத்த … Read more

4 சக வீரர்களை சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்ட பிஎஸ்எப் வீரர் – பஞ்சாபில் அதிர்ச்சி

பஞ்சாபில் 4 சக வீரர்களை சுட்டுக் கொன்ற எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிஎஸ்எப் முகாம் அமைந்துள்ளது. பாகிஸ்தானின் வாஹா எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பிஎஸ்எப் வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை அங்கு பணியில் இருந்த சடேப்பா என்ற காவலர், திடீரென தனது துப்பாக்கியால் அருகில் இருந்த சக வீரர்களை … Read more