மும்பை புறநகர் ரயிலில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகேட்ட ரயில்வே அமைச்சர் அஸ்வினி

மும்பை: மும்பை புறநகர் ரயிலில் பயணம் செய்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மும்பை புறநகர் ரயில் தடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு கூடுதல் ரயில் பாதைகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார். இதற்காக அவர் தானே மற்றும் திவா நிலையங்களுக்கு இடையே உள்ள மின்சார ரயிலில் பயணிகளுடன் சேர்ந்து பயணம் செய்தார். தானே மற்றும் திவாவை இணைக்கும் புதிய ரயில் பாதைகளை நேற்று பிற்பகல் பிரதமர் மோடி … Read more

"ஓகே. தம்பி உங்களை நம்புறேன்".. அபிஷேக் பானர்ஜியை மீண்டும் அங்கீகரித்த மமதா!

திரினமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜிக்கும், அவரது உறவினரும், கட்சியின் அதிகாரப்பூர்வமற்ற நம்பர் 2 தலைவருமான அபிஷேக் பானர்ஜிக்கும் இடையே பூசல் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், அபிஷேக் பானர்ஜி மீதான தனது நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார் மமதா பானர்ஜி . அவருக்கு தேசிய பொதுச் செயலாளர் பதவியைக் கொடுத்துள்ளார். மமதா பானர்ஜியின் உறவினர்தான் அபிஷேக்பானர்ஜி. இவர்தான் கட்சியின் அதிகாரப்பூர்வமற்ற நம்பர் 2 தலைவர். மமதாவுக்கு அடுத்து இவர்தான். இவர் கூறும் அறிவுரைகள், வழிகாட்டுதல்களின் அடிப்படையில்தான் செயல்படுகிறார் … Read more

மணிப்புரி நடனமாடிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.. <!– மணிப்புரி நடனமாடிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.. –>

மணிப்பூர்த் தலைநகர் இம்பாலில் பாரம்பரிய நடனக் கலைஞர்களுடன் இணைந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடனமாடிய காட்சி டுவிட்டரில் வெளியாகியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27ஆம் நாள் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இம்பாலில் பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மணிப்புரி நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினார். இந்த நடனக் காட்சியை மணிப்பூர் மாநில பாஜகவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 

பஞ்சாப்: தேர்தல் விதிமீறல் வழக்குகளை எதிர்கொள்ளும் முன்னணி தலைவர்கள்

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அகாலி  தளம் தலைவர் சுக்பீர்  சிங் பாதல், காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான சரண்ஜித் சன்னி ஆகிய முக்கிய தலைவர்கள் மீது தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சியினர் மீது வீடியோ வெளியிட்டதற்காக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அகாலி தளம் துணை தலைவர் அர்ஷ்தீப் சிங் அளித்த புகாரின் … Read more

“தனக்கு பிறக்கவில்லை என்று தகராறு” 2 வயது குழந்தையை சீரழித்த தந்தைக்கு ஆயுள் சிறை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இரண்டரை வயதான தனது மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் முட்டடா பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் (34). அவருக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை பிறந்த போது தன்னுடைய குழந்தை இல்லை என்று கூறி மனைவியிடம் அலெக்ஸ் அடிக்கடி தகராறு செய்து வந்து உள்ளார். தன்னுடைய குழந்தை தானா? என்பதை கண்டுபிடிக்க டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் … Read more

’வேலைவாய்ப்பு எங்கே?’ ராஜ்நாத் சிங்கை பேசவிடாமல் கோஷமிட்ட இளைஞர்கள் – உ.பி.யில் பரபரப்பு

உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச தொடங்கிய போது, அவரை பேசவிடாமல் அங்கிருந்த இளைஞர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அங்கு ஆளுங்கட்சியான பாஜகவுக்கும், பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவி வருகிறது. இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பாஜக சார்பிலான பொதுக்கூட்டம் பிஜ்னோரில் இன்று … Read more

நாடு முழுவதும் 22,270 பேருக்கு கரோனா தொற்று; பரவல் 14% குறைந்தது

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,270 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைய தொற்று எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இன்று 14% குறைந்துள்ளது. நாடுமுழுவதும் கரோனா பரவல் குறித்த கடந்த 24 மணி நேர நிலவர அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,270 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைய தொற்று எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இன்று 14% குறைந்துள்ளது. * அன்றாட பரவல் … Read more

'அகமதாபாத் குண்டுவெடிப்பு: சமாஜ்வாடி தலைவர்களுக்கு தொடர்பு!' – மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு!

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர்களுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக மத்திய அமைச்சர் அனுதாக் தாக்குர் குற்றம் சாட்டி உள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்ற நிலையில், நாளை மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. … Read more

மூட்டையில் சேர்த்து வைத்த நாணயங்கள்… ஸ்கூட்டர் வாங்கிய மனிதர்.. கொண்டாட்டத்தில் துள்ளி குதித்த தருணம்.. <!– மூட்டையில் சேர்த்து வைத்த நாணயங்கள்… ஸ்கூட்டர் வாங்கிய … –>

அசாம் மாநிலத்தில் சிறு வியாபாரி ஒருவர் ஒரு வருடமாக சிறுக சிறுக சேமித்த சில்லரைக்காசுகளை சாக்குமூட்டையில் கட்டி எடுத்து சென்று ஸ்கூட்டர் வாங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பார்பேட்டா(Barpeta) பகுதியில் உள்ள இருசக்கர வாகன விற்பனை கடையை அணுகி சேமித்து வைத்திருந்த சில்லரைக்காசுகளை எடுத்துச் சென்று அதை பெற்றுக்கொண்டு வாகனம் தருமாறு கூறி கேட்டதாகவும் அதற்கு கடைக்காரர்கள் ஒப்புக்கொண்டனர். அந்த சில்லரைக்காசுகளை எண்ணுவதற்கு 2 முதல் 3 மணி நேரம் எடுத்துக் கொண்டதாகவும், அதில் 22 ஆயிரம் ரூபாய் … Read more

பாறை இடுக்கில் சிக்கிய வாலிபரை மீட்க விரைந்து செயல்படாத தீயணைப்பு அதிகாரிகள் இடமாற்றம்

திருவனந்தபுரம்: கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள குரும்பாச்சி மலைக்கு சென்ற வாலிபர் பாபு கால் இடறி விழுந்து பாறை இடுக்கில் சிக்கி கொண்டார். கடந்த 7-ந் தேதி பாறை இடுக்கில் சிக்கி கொண்ட பாபுவை 2 நாட்களுக்கு பிறகு ராணுவத்தினர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டனர். இந்த சம்பவம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மீட்பு பணிக்கு மட்டும் ரூ. 75 லட்சம் செலவானதாக கூறப்பட்டது. இதற்கிடையே 7-ந் தேதி … Read more