உ.பி.யில் அரசியல் குரு முலாயம் சிங்கின் மகன்; அகிலேஷை எதிர்த்து போட்டியிடும் இணை அமைச்சர்: கடும் போட்டியை சந்திக்கிறது கர்ஹால் தொகுதி

புதுடெல்லி: உத்தர பிரதேச தேர்தலில் பாஜக முதல்வர் ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியிலும், எதிர்க்கட்சி சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் கர்ஹால் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இருவருமே சட்டப்பேரவை தேர்தலை முதல் முறையாக சந்திக்கின்றனர். அகிலேஷின் மக்களவை தொகுதியான மெயின்புரியில் அடங்கியது கர்ஹால் தொகுதி. இங்கு, ஆக்ரா மக்களவை தொகுதிபாஜக எம்.பி.யாக இருக்கும்எஸ்.பி.சிங் பகேல், அகிலேஷ் சிங்கை எதிர்த்து போட்டியிடுவது பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது. அகிலேஷின் தந்தையும் சமாஜ் வாதி நிறுவனருமான முலாயம் சிங் சீடராக இருந்து … Read more

சிங்கப்பூர் பிரதமர் பேச்சு தேவையில்லாதது.. தூதரை அழைத்து இந்தியா கண்டனம்

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு பிரதமர் லீ சியன் லூங் பேசும்போது, இந்திய எம்.பிக்கள் குறித்து கருத்து தெரிவித்தது தேவையில்லாதது என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிங்கப்பூர் தூதரை நேரில் அழைத்து மத்திய வெளியுறவுத்துறை தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு விவாதத்தின்போது மறைந்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவை வெகுவாகப் புகழ்ந்து பேசியிருந்தார் லீ சியன் லூங். நேரு உருவாக்கிய இந்தியாவின் இன்றைய நிலை குறித்தும் அவர் கவலை தெரிவித்திருந்தார். … Read more

உத்தரபிரதேசத்தில் 3-வது கட்ட தேர்தல்: 59 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது

லக்னோ: உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதில் உத்தரகாண்ட், கோவா மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக கடந்த 14-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட்டில் 59.51 சதவீதமும், 40 தொகுதிகளை கொண்ட கோவாவில் 78.55 சதவீதமும் பதிவாகி இருந்தது. 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10-ந்தேதி 58 … Read more

சோட்டாணிக்கரை பகவதியம்மன் கோயிலில் நயன்தாரா காதலனுடன் சாமி தரிசனம்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சோட்டாணிக்கரை பகவதியம்மன் கோயிலும் ஒன்று. இங்கு மாசி மாதம் மகம் நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதில் கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள் கலந்து கொள்வார்கள். நேற்றுமுன்தினம் மகம் நாள் என்பதால் ஏராளமான பெண்கள் கோயிலில் தரிசனம் செய்ய குவிந்தனர். இதில் நடிகை நயன்தாரா, தனது காதலனும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் … Read more

ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு விஜயவாடா கல்லூரியில் அனுமதி மறுப்பு

விஜயவாடா: கர்நாடக மாநிலத்தை தொடர்ந்து தற்போது ஆந்திராவிலும் ‘ஹிஜாப்’ விவகாரம் துளிர் விடத் தொடங்கி உள்ளது. ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் 2 இஸ்லாமிய மாணவிகள் நேற்று ஹிஜாப், புர்கா அணிந்து வகுப்புக்கு வந்தனர். அப்போது கல்லூரி முதல்வர் கிஷோர், அந்த பெண்களை அழைத்து, ”ஏன் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்தீர்கள்? வீட்டிற்கு சென்று, மாற்று உடை அணிந்து வாருங்கள்” என கூறினார். இதுகுறித்து அந்த 2 மாணவிகளும் தங்களது பெற்றோருக்கு … Read more

அரசு ஊழியர்களுக்கு இப்படியொரு செக் – வெளியானது புது உத்தரவு!

மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளதாக அரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில், ஒமைக்ரான் பரவல் மற்றும் கொரோனா மூன்றாவது அலை காரணமாக, கொரோனா பாதிப்பு தீவிரமாகப் பரவியது. இதன் காரணமாக மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதாவது, அரசு அலுவலகங்களில், 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும், பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை ரத்து போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாடு முழுவதும் கடந்த … Read more

அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு ; குற்றவாளிகளுக்கு தண்டனை விபரங்கள் அறிவிப்பு <!– அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு ; குற்றவாளிகளுக்கு தண்டனை… –>

அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 49 பேரில், 38 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு குஜராத்தின் முக்கிய நகரமான அகமதாபாத்தில் 70 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 21 குண்டுகள் வெடித்த தொடர் தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் இந்தியன் முஜாஹிதீன் என்று சொல்லக்கூடிய ஐ.எம்.தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 77 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்து, கடந்த 8-ந் தேதி தீர்ப்பு வெளியானது. … Read more

2 கோடி சிறார்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மன்சுக் மாண்டவியா பெருமிதம்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல்வேறு பிரிவுகளில் போடப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தின் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.   முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் 3-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தும் பணி நடந்து வருகிறது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதற்கிடையே, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி … Read more

ஆயிரம் ஏக்கர் வனத்தை தத்தெடுத்த நாகார்ஜுனா

ஐதராபாத்: தெலங்கானாவில் மெட்கல் மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்துள்ள நாகார்ஜுனா, அதை பராமரிக்க 2 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். மறைந்த தனது தந்தையும் நடிகருமான அக்கினேனி நாகேஸ்வர ராவின் பெயரில் இந்தப் பணிகளை மேற்கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். இந்த வனத்தை நகர்ப்புற பூங்காவாக அவர் அமைக்கிறார். ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஏற்கனவே உள்ள மரங்களை பராமரிப்பதோடு, மேலும் மரக்கன்றுகள், பசுந்தாவரங்கள் நட்டு வளர்க்கவும் நாகார்ஜுனா திட்டமிட்டுள்ளார்.

'இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியமான ஒன்று இல்லை' – உயர் நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வாதம்

பெங்களூரு: “இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியமான மத நடைமுறை ஒன்றும் அல்ல. எனவே ஹிஜாப் அணிய விதித்த தடை, அரசியல் சாசன சட்டம் 25-ஐ மீறுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது” என்று கர்நாடக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதித்த தடையை எதிர்த்து உடுப்பி முஸ்லிம் மாணவிகள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கு 6-வது நாளாக இன்று தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா … Read more