நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் சகோதரி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை <!– நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் சகோதரி வீட்டில் அமலாக்க… –>

பணம் மோசடி வழக்கு தொடர்பாக மும்பையில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் சகோதாரி ஹசீனா பார்கர் வீட்டில், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சட்டவிரோத சொத்து விற்பனை மற்றும் ஹவாலா பண பரிவர்த்தனை தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டது. தாவூத்துக்கு எதிராக அண்மையில் என்ஐஏ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், மொத்தம் 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும், வழக்கில் தொடர்புடைய மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் ஒருவரும் கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.   … Read more

ஹிஜாப் மோதல் : கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

தும்கூர்: ஹிஜாப் விவகாரம் காரணம் கர்நாடகாவில் மூடப்பட்டிருந்த 10 வகுப்பு வரையிலான பள்ளிகள் கடந்த 14ம் தேதி திறக்கப்பட்டன. இந்நிலையில் ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரிகள் மற்றும் பட்டப்படிப்பு கல்லூரிகளுக்கு இன்று வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்திருந்தார். நாளை மீண்டும் கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், தும்கூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தும்கூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.  … Read more

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு ஏன்? உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

புதுடெல்லி: ‘தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோரின் முன்னேற்றத்துகாகவே 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது,’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு, ராமதாஸ், ஜி.கே.மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி, பாமக உள்ளிட்டோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தங்கள் தரப்பு வாதங்களையும் விசாரணையின் போது கேட்க வேண்டும் என்று பாலமுரளி, வி.வி.சாமிநாதன், முக்குலத்தோர் … Read more

உங்களுக்கு முதல்வர், பிரதமர் வேண்டுமா? அல்லது இன்னொரு கிம் ஜோங் உன் வேண்டுமா? – விவசாய சங்கத் தலைவர் சாடல்

லக்கிம்பூர்: “உங்களுக்கு முதல்வர், பிரதமர் வேண்டுமா? அல்லது இன்னொரு கிம் ஜோங் உன் வேண்டுமா? என யோசித்துத் தீர்மானித்து வாக்களியுங்கள்” என உத்தரப் பிரதேச மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார், விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திக்கைத். டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டங்களை ஒருங்கிணைத்தவர் தான் இந்த திக்கைத். 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் கடந்த 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2-ம் … Read more

ஹேக் செய்யப்பட்ட சன்சாத் சேனலை நிறுத்திய யூடியூப்!

நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெறும் நிகழ்வுகளை மத்திய அரசின் சன்சாத் டிவி நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. அதேபோல் சன்சாத் யூடியூப் சேனலிலும் இந்த நிகழ்வுகள் ஒளிபரப்பப்படுகிறது. இந்த சேனல் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் இல்லாத நாட்களில் அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் சன்சத் சேனலில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும் சன்சத் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக சன்சாத் டிவி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து … Read more

48 ஆண்டுகளில் 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது..! <!– 48 ஆண்டுகளில் 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது..! –>

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 48 ஆண்டுகளில் 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒடிசாவின் கேந்திரபாரா(Kendrapara) மாவட்டத்தை சேர்ந்த அவர், முதன் முதலில் 1982 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணை மணந்துள்ளார். பிறகு 2002 ஆம் ஆண்டில் அந்த பெண்ணுக்கு தெரியாமல் 2-ஆவதாக வேறோரு பெண்ணை மணந்துள்ளார். இந்த இரு மனைவிகள் மூலம் 5 குழந்தைகளை பெற்றுள்ளார். 2002 முதல் 2020 வரை திருமண இணையம் … Read more

நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதால் நடிகர் தீப் சித்து உயிரிழந்தார் – சோனிபட் காவல்துறை விளக்கம்

பல்வால்: வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற விவசாய போராட்டங்களின் போது டெல்லி செங்கோட்டையில் சீக்கிய மதக் கொடியை சிலர் ஏற்றினர். இந்த போராட்டத்தை தூண்டியதாக பஞ்சாப் நடிகரும் சமூக ஆர்வலமான தீப் சித்து கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அரியானா மாநிலம் சோனிபட் அருகே நேற்றிரவு நிகழ்ந்த சாலை விபத்தில்  தீப் சித்து உயிரிழந்தார்.  குண்ட்லி-மனேசர்-பல்வால் எக்ஸ்பிரஸ் சாலையில் பிப்லி சுங்க சாவடி அருகே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி  மீது தீப் சித்து … Read more

ரூ.139 கோடி முறைகேடு வழக்கிலும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் குற்றவாளி: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

ராஞ்சி: பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், தோரந்தோ கருவூலத்தில் இருந்து ரூ.139 கோடி முறைகேடு செய்த வழக்கிலும் குற்றவாளியாக சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.  பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் முதல்வராக இருந்தபோது கால்நடைகளுக்காக தீவனம் வாங்கியதில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக லாலு மீது 5 வழக்குகள் தொடரப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தியது. இதில், 4 ஊழல் வழக்கிலும் அவர் குற்றவாளியாக … Read more

பெற்றோர் சம்மதிக்க, மேளதாளம் முழங்க, கரம்பிடித்த கேரள திருநர் ஜோடி!

கேரளாவில் காதலர் தினத்தன்று பெற்றோர் சம்மதத்துடன் மேளதாளம் முழங்க திருநங்கை ஜோடி திருமணம் செய்துகொண்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மணமகள் ஷியாமா கேரள சமூக நீதித்துறையின் திருநங்கைகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். திரிச்சூரைச் சேர்ந்த மணமகன் மனு ஐடி கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். காதலில் விழுந்த பிரபாவும் ஷியாமாவும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கின்றனர். பெற்றோரிடம் அனுமதி பெற்ற அவர்கள், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 2019-இன் கீழ் தங்கள் திருமணத்தை பதிவுசெய்ய அரசின் … Read more

கர்நாடகா: ஹிஜாப் அணிந்து வந்த பள்ளி மாணவிகளுக்கு பல மாவட்டங்களில் அனுமதி மறுப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் திங்கள்கிழமை முதல் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பல மாவட்டங்களில் ஹிஜாப் அணிந்து வந்ததன் காரணமாக மாணவிகளுக்கு வகுப்புக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ஹிஜாப் தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், அம்மாநிலத்தின் பல பள்ளிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. ஹிஜாப்பை நீக்கிய பிறகே மாணவிகள் பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர். மாண்டியாவில் ரோட்ரி சோசைட்டி பள்ளியில் புர்கா அணிந்து வந்த ஆசிரியர்களும், புர்காவை … Read more