உ.பி.யில் திருமண விழாவில் சோகம்; இரும்பு வலை உடைந்ததால் கிணற்றில் விழுந்து பெண்கள், குழந்தைகள்: 13 பேர் உயிரிழப்பு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் திருமண விழாவின் போது கிணற்றில் மேல் போடப்பட்ட இரும்பு வலை உடைந்ததால் அதன் மீது அமர்ந்திருந்த பெண்கள், குழந்தைகள் 13 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தின் குஷிநகர் மாவட் டத்தில் உள்ள நெபுவா நவுராங்கியா என்ற கிராமத்தில் நேற்று ஒரு திருமண விழா நடந்தது. திருமணத்துக்கு முந்தைய ‘ஹல்டி’ எனும் சடங்கு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான உறவினர்களும் நண்பர்களும் வந்திருந்தனர். அங்கிருந்த பெரிய கிணறு ஒன்றின் மீது இரும்பு வலையுடன் … Read more

உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை அழைத்து வரும் திட்டமில்லை ; மத்திய அரசு <!– உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை அழைத்து வரும் திட்டமில… –>

ரஷ்யா – உக்ரைன் இடையே பதற்றம் அதிகரித்து இருக்கும் சூழலில், உக்ரைனில் இருக்கும் மாணவர்கள் மற்றும் குடிமக்களை உடனடியாக இந்தியா அழைத்து வரும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி, உக்ரைனுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றார். ஏர் பபுள் திட்டத்தின் கீழ் ஏற்கனவே குறிப்பிட்ட எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், தற்போது … Read more

பஞ்சாப் தேர்தல் – பிரசார மேடையில் தடுமாறி விழுந்த ராஜ்நாத் சிங்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் சென்று வழிபட்டார். அதன்பின், அவர் பரிட்கோட் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார மேடையில் அவருக்கு அணிவிக்க பெரிய மாலை ஒன்று கொண்டு வரப்பட்டது. அப்போது மேடையில் நின்றிருந்த பா.ஜ.க. தலைவர்கள் இடையே அவருக்கு யார் மாலையை அணிவிப்பது … Read more

நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது: தமிழக அரசு திட்டவட்டம்

புதுடெல்லி: தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை கண்டிப்பாக அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம், பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க கடந்த 2011ம் ஆண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதில், 2.5 கிமீ பரப்புக்கு சுரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ‘தேசிய வனவிலங்கு வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பதால், இத்திட்டத்திற்கு … Read more

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 30,757: கெடுபிடிகளை தளர்த்திக் கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,757 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைவிட சற்றே அதிகம். தொற்றின் காரணமாக 541 பேர் உயிரிழந்துள்ளனர்.அன்றாட பாதிப்பு குறைந்துள்ளதால் மாநிலங்கள் கரோனா கெடுபிடிகளை தளர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,757 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. * அன்றாட பரவல் (பாசிடிவிட்டி) விகிதம் … Read more

வனத்துறையின் 1080 ஏக்கர் நிலத்தில் நகர்ப்புறப் பூங்கா அமைக்கும் நாகர்ஜுனா <!– வனத்துறையின் 1080 ஏக்கர் நிலத்தில் நகர்ப்புறப் பூங்கா அமை… –>

தெலங்கானாவின் மேட்சல் மாவட்டத்தில் வனத்துறையின் ஆயிரத்து எண்பது ஏக்கர் நிலத்தைத் தத்தெடுத்துள்ள நடிகர் நாகர்ஜுனா, அதில் தனது தந்தை நாகேஸ்வர ராவ் பெயரில் நகர்ப்புறப் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். பசுமை இந்தியா திட்டத்தில் வனத்துறை நிலங்களில் மரங்களை வளர்த்துப் பூங்காக்களை உருவாக்கத் தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கிச்சேர்லா என்னுமிடத்தில் 1080 ஏக்கர் நிலத்தில் நாகேஸ்வர ராவ் பெயரில் நகர்ப்புறப் பூங்கா அமைக்க நாகர்ஜுனா அடிக்கல் நாட்டினார். இங்கு ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. … Read more

மந்திரி ஈஸ்வரப்பாவை நீக்க வலியுறுத்தி சட்டசபையில் காங்கிரசார் தொடர் போராட்டம்

பெங்களூர்: கர்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவை மீறி உடுப்பி, சிவமொக்கா, துமகூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். இதனால் இந்து மாணவர்களும் காவி துண்டு போட்டு வகுப்புக்கு வந்தனர். இதனால் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவியது. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அன்றைய தினம் கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈஸ்வரப்பா, டெல்லி செங்கோட்டையில் … Read more

ரூ.9 கோடி மதிப்பு சொத்துக்கள் ஏழுமலையானுக்கு காணிக்கை

திருமலை: சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் ரேவதி விஸ்வநாத். இவருடைய சகோதரி பர்வதம். இவர் கடந்தாண்டு மே மாதம் இறந்தார். இவருக்கு சென்னை திருவான்மியூரில் ஒரு வீடும், உத்தண்டியில் ஒரு வீடும் இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 கோடி. மேலும், வங்கியில் ரூ.3.20 கோடி டெபாசிட்டும் வைத்திருந்தார். தனது மறைவுக்குப் பிறகு தனது சொத்துகள், பணத்தை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு காணிக்கையாக கொடுக்கும்படி பர்வதம் கடைசி விருப்பமாக தெரிவித்து இருந்தார். அதன்படி, இந்த வீடுகளுக்கான ஆவணங்களையும், வங்கி … Read more

‘சார்’ என்று அழைத்த வழக்கறிஞர்; சூடாக பதிலடி கொடுத்த பெண் நீதிபதி – வைரலாகும் பதிவு

பெண் நீதிபதியைப் பார்த்து ‘சார்’ என்று வழக்கறிஞர் திரும்ப திரும்ப அழைத்ததும், அதன்பின்பு இருவருக்கும் நிகழ்ந்த சூடான விவாதத்தால், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு நிலவியது. ஆணுக்கு பெண் சமம் என்று என்னதான் சட்டம் இயற்றினாலும், சமுதாயத்தில் பாலின பாகுபாடுகள் அதிகரித்துத்தான் காணப்படுகின்றன. அது, குடும்பத்தில் பாசம், சொத்து ஆகட்டும், பணியிடத்தில் பதவி, சம்பாத்தியம் ஆகட்டும், அரசு, அரசியல் பதவிகளில் இட ஒதுக்கீடு ஆகட்டும், பல சவால்களையும், சிக்கல்களையும் கடந்த பின்பே ஓரளவுக்கு உயர்வான இடத்தை அடைய முடிகிறது. … Read more

காஷ்மீர் புலனாய்வு பிரிவு சோதனையில் ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பின் 10 ‘ஸ்லீப்பர் செல்கள்’கைது

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு திரைமறைவில் உதவி செய்பவர்களை கண்டறிதல் மற்றும் பிரிவினைவாத குற்றங்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காணும் வகையில் மாநில புலனாய்வு ஏஜென்சி (எஸ்ஐஏ) என்ற தனிப் பிரிவு சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இந்த பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் காஷ்மீரின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பல்வேறு இடங்களில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு பல ஆண்டுகளாக உதவி வந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர். … Read more