நான் தீவிரவாதியா.. அப்புறம் ஏன் மோடி கைது பண்ணலை?.. கெஜ்ரிவால் கிண்டல்

என்னைத் தீவிரவாதி என்று பாஜகவினர் சொல்கிறார்கள். இது மிகப் பெரிய காமெடி.. நான் தீவிரவாதி என்றால் ஏன் என்னை பிரதமர் விட்டு வைத்திருக்கிறார், கைது பண்ண வேண்டியதுதானே என்று ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுள்ளார். பஞ்சாப் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. இங்கு வருகிற 20ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு கெஜ்ரிவால் தனது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: பலரும் சேர்ந்து கொண்டு … Read more

இனி நேபாளத்திலும் யு.பி.ஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை அறிமுகம் <!– இனி நேபாளத்திலும் யு.பி.ஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை… –>

இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் யு.பி.ஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை, அண்டை நாடான நேபாளத்திலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  இதற்காக, NPCI எனப்படும் இந்திய தேசிய பரிவர்த்தனை வாரியம், நேபாளத்தில் உள்ள Gateway Payments Service மற்றும் Manam Infotech ஆகிய நிறுவனங்களுடன் கைக்கோர்த்துள்ளது. இதன் மூலமாக, நேபாளத்தில் இருப்பவர்களுக்கு இந்தியாவில் இருந்து நேரடியாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 940 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 3,900 கோடி பரிவர்த்தனைகள் யு.பி.ஐ … Read more

தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை

புதுடெல்லி: என்.எஸ்.இ. என்று அழைக்கப்படும் தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, தனது பதவிக்காலத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. தேசிய பங்குச்சந்தையில் நியமனம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பதவி இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.  இதுகுறித்து தேசிய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நடத்திய விசாரணையில் சித்ரா ராமகிருஷ்ணா விதிமுறை மீறலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவருக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி … Read more

கர்நாடகாவில் கல்லூரி ஆசிரியர்கள் ஹிஜாப் அணிய தடை: வேலையை ராஜினாமா செய்த பெண் விரிவுரையாளர்

கர்நாடகா: ஹிஜாப் அணிந்து பாடம் நடத்தக்கூடாது என்று கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தியதால் கர்நாடகாவில் விரிவுரையாளர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். துமகூரு நகரில் உள்ள ஜெயின் பியூ கல்லூரியில் ஆங்கில பாடப்பிரிவு விரிவுரையாளராக பணியாற்றி வந்தவர் சாந்தினி. கடந்த 3 வருடங்களாக இவர் ஹிஜாப் அணிந்து வந்த நிலையில் கல்லூரி முதல்வர், ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என்று கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விரிவுரையாளர் சாந்தினி, தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், … Read more

இன்று முதல் அமலுக்கு வந்தது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம்

மத்திய அரசு அமைத்துள்ள தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்புக்கான சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டு மாநில அளவில் அணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உரிமையாளர்களுடன் இணைந்து பாதுகாப்பு குறித்த புள்ளிவிவரங்களை வகுக்க சட்டம் வகை செய்கிறது. அதன்படி அமைக்கப்பட்ட ஆணையம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக மத்திய ஜல் சக்தி … Read more

சென்னை பக்தரின் உயில்படி நன்கொடையாக ஏழுமலையானுக்கு ரூ.9.2 கோடி: தேவஸ்தானத்திடம் உறவினர்கள் வழங்கினர்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு சென்னை பக்தர் ரூ.9.2 கோடி நன்கொடை வழங்கி உள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் ஆர். பர்வதம் (76). திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தரான இவர், தனக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள 2 வீடுகள் மற்றும் வங்கியில் டெபாசிட் செய்திருந்த ரூ.3.2 கோடி பணத்தை ஏழுமலையானுக்கு சேர வேண்டுமென உயில் எழுதி வைத்திருந்தார். டாக்டர் பர்வதம் தற்போது பர்வதம் காலமானதையடுத்து, சென்னை காரப்பாக்கத்தில் வசித்து வரும் அவரது சகோதரி ரேவதி மற்றும் … Read more

ஹிஜாப் அணிய தடை.. "சுயமரியாதை முக்கியம்".. வேலையைத் தூக்கி எறிந்த பேராசிரியை!

கர்நாடகத்தில் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டதால் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டார் உதவிப் பேராசிரியை ஒருவர். கர்நாடகத்தில் சில கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் பிரச்சினை வெடித்தது. மாணவ, மாணவியர் போராட்டங்களில் குதித்தனர். இதனால் கல்வி நிறுவன வளாகங்கள் போர்க்களமாகின. இந்த நிலையில், தற்போது கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் தொடர்ந்து ஹிஜாப் விவகாரம் அனலடித்துக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ஒரு கல்லூரி விரிவுரையாளர் … Read more

அகமதாபாத்தில் 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு <!– அகமதாபாத்தில் 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெ… –>

38 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு அகமதாபாத்தில் 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு 38 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து, அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு எஞ்சிய 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து, அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு Source link

தூங்கவிடாமல் தடுக்கும் எச்சரிக்கை கருவி: நாக்பூர் ஓட்டுனர் கண்டுபிடிப்பு

வாகனங்கள் ஓட்டும்போது ஓட்டுனர்கள் தூங்கிவிடுவதால் அதிகளவில் விபத்துகள் நடக்கிறது. இதனால் பலர் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்காக வாகன ஓட்டுனர்களை தூங்கவிடாமல் எச்சரிக்கும் வகையில் சாதனம் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளார் நாக்பூரைச் சேர்ந்த ஓட்டுனர் கௌரவ் சவ்வாலாகே என்பவர். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- சமீபத்தில் தூக்கம் காரணமாக இரவில் வாகனம் ஓட்டும்போது விபத்துக்குள்ளானேன். அதனால் வாகனம் ஓட்டும்போது யாராவது தூங்கினால் எச்சரிக்கை அளிக்கும் வகையில் கருவி ஒன்றை உருவாக்க நினைத்தேன். அதன்படி, அதிர்வுகளுடன் கூடிய … Read more

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டப்படும்!: கேரள சட்டமன்றத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையில் திட்டவட்டம்..!!

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடிக்கு மேல் உயர்த்தப்படாது என்றும் முல்லை பெரியாறில் புதிய அணை கட்டப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள சட்டப்பேரவையின் நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதையொட்டி சட்டப்பேரவையில் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையாற்றினார். அப்போது, கொரோனா காலத்தில் கேரளா அரசு சிறப்பாக செயல்பட்டதாகவும், அரசின் 100 நாள் செயல்திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, பாதுகாப்பு கருதி முல்லை பெரியாறு அணையின் … Read more