குஜராத்தில் மேலும் 7 பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதாக எல்லைப் பாதுகாப்பு படையினர் தகவல்.! <!– குஜராத்தில் மேலும் 7 பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் கைப்பற்ற… –>

குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் மேலும் 7 பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதாக எல்லைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். ஹராமி நல்லா பகுதியில் உள்ள சிற்றோடை ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் அழுகிய மீன்களுடன் 7 பாகிஸ்தான் படகுகளை கண்டுபிடித்த வீரர்கள் அதை பறிமுதல் செய்தனர். இந்திய எல்லைக்குள் நுழைகிற பாகிஸ்தான் மீனவர்கள் BSF ரோந்துப் படையினர் படகுகளைக் கண்டதும், தங்கள் படகுகளைக் கைவிட்டு தப்பிச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  Source link

இந்தியாவில் கொரோனாவால் 37 லட்சம் பேர் இறப்பா?- மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் வரையில் கொரோனா தொற்றால் 4.6 லட்சம்பேர் இறந்ததாக அரசு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால் 32 லட்சம் முதல் 37 லட்சம் வரையிலானோர் கொரோனாவால் இறந்திருக்கலாம் என்ற ஆய்வுக்கட்டுரை ஒன்றின் அடிப்படையில் சில ஊடகங்களில் அறிக்கைகள் வெளியாகி உள்ளன. இந்த தகவல்களை மறுக்கும் விதத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய தகவல்கள் வருமாறு:- * இந்த அறிக்கைகள் தவறானவை என்பது மீண்டும் தெளிவுபடுத்தப்படுகிறது. அவை … Read more

ஜெய்ப்பூர் அருகே நில அதிர்வு: ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு!!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர் அருகே இன்று காலை 8 மணிக்கு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.8 என்ற அளவில் இருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர் என்றும் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது

காவி கொடி குறித்து சர்ச்சை பேச்சு: சட்டப்பேரவைக்குள் உறங்கி காங்., எம்.எல்.ஏ.க்கள் தர்ணா

கர்நாடகாவில் காவி கொடி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஈஸ்வரப்பா பதவியில் இருந்து விலகக்கோரி, சட்டப்பேரவைக்குள் உறங்கி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர். முன்னதாக கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா, “டெல்லி செங்கோட்டையில், ஒரு நாள் மூவர்ண கொடிக்கு பதிலாக காவி கொடி பறக்கும்” என அண்மையில் பேசியிருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈஸ்வரப்பா பதவி விலகக் கோரி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் கர்நாடக … Read more

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதியில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

புதுடெல்லி: தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்துக்கு ஒருபோதும் அனுமதி வழங்கமுடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்து கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் தேசிய பசுமைதீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் வன உயிரிபாதுகாப்பு அமைப்பிடம் உரியஅனுமதி பெற்ற பிறகு இத்திட் டத்தை செயல்படுத்தலாம் … Read more

கர்நாடகாவில் இருந்து கரும்பு வெட்ட கொத்தடிமைகளாக வந்த 28 பேர் மீட்பு <!– கர்நாடகாவில் இருந்து கரும்பு வெட்ட கொத்தடிமைகளாக வந்த 28 … –>

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே கர்நாடகாவில் இருந்து கரும்பு வெட்ட கொத்தடிமைகளாக வந்திருந்த சிறுவர்கள் 14 பேர் உட்பட 28 பேரை தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மீட்டனர். செல்லப்பம்பாளையம் பகுதிக்கு ஒப்பந்த அடிப்படையில் வந்திருந்த தொழிலாளர் குழுவிடம், பெங்களூரைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கர்நாடகாவைச் சேர்ந்த காண்ட்ராக்டர் ஒருவர் உதவியுடன், 28 பேர் கொத்தடிமை தொழிலாளர்களாக வந்ததாகவும் இதில் 14 பேர் குழந்தை தொழிலாளர்கள் என்றும் தெரியவந்தது. இதையடுத்து, நேரில் சென்று வருவாய்துறையினர் … Read more

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம்

புதுடெல்லி: இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சமீபத்தில் 6 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குவாட் அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி மாரைஸ் பெய்ன் உடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக் கொண்டு ஜெய்சங்கர் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் சென்றார். அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி டியோடோரோ எல்.லாக்சின் ஜூனியரை சந்தித்துப் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 5,880,454 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58.80 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,880,454பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 419,985,775 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 343,825,691பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 84,688 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்திய சிறைகளில் இருந்த 12 பாகிஸ்தான் கைதிகள் விடுதலை

இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் தொடர் கோரிக்கைகளின் காரணமாக, இந்தியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 12 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த 6 மீனவர்கள் உள்ளிட்ட 12 பேர், தனி வாகனம் மூலம் வாகா எல்லை வரை கொண்டுசெல்லப்பட்டு, அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் 80 வயது முதியவர் ஆவார். சிறைகளிலிருந்து விடுதலையாகி தாய் மண்ணில் கால் பதித்த … Read more

உ.பி.யில் திருமண விழாவில் சோகம்; இரும்பு வலை உடைந்ததால் கிணற்றில் விழுந்து பெண்கள், குழந்தைகள்: 13 பேர் உயிரிழப்பு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் திருமண விழாவின் போது கிணற்றில் மேல் போடப்பட்ட இரும்பு வலை உடைந்ததால் அதன் மீது அமர்ந்திருந்த பெண்கள், குழந்தைகள் 13 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தின் குஷிநகர் மாவட் டத்தில் உள்ள நெபுவா நவுராங்கியா என்ற கிராமத்தில் நேற்று ஒரு திருமண விழா நடந்தது. திருமணத்துக்கு முந்தைய ‘ஹல்டி’ எனும் சடங்கு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான உறவினர்களும் நண்பர்களும் வந்திருந்தனர். அங்கிருந்த பெரிய கிணறு ஒன்றின் மீது இரும்பு வலையுடன் … Read more