உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி! 

உக்ரைன் மீது படையெடுத்துள்ளது ரஷ்யா. அதன் காரணமாக இரு நாடுகளும் போரிட்டு வருகின்றன. அதனால் உக்ரைன் நாட்டில் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்கள் மற்றும் பணி நிமித்தமாக சென்ற நாட்டு மக்களை ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் பத்திரமாக மீட்டு வரும் பணியை மேற்கொண்டு வருகிறது இந்தியா.   இந்த சூழலில் உக்ரைன் நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு வாரணாசியில் இன்று நடைபெற்றுள்ளது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் பிரதமரை … Read more

உற்பத்தி துறையில் ஆற்றல் மிக்கதாக இந்தியாவை உலகம் காண்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: உங்களின் நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருள்கள் மீது பெருமிதம் கொள்ளுங்கள், அதே போல் இந்தப் பெருமித உணர்வை உங்களின் இந்திய வாடிக்கையாளர்களிடம் நிலை நிறுத்துங்கள் என இந்திய உற்பத்தி நிறுவனங்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை ஏற்பாடு செய்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திரு மோடி இன்று உரையாற்றினார். பிரதமரால் உரை நிகழ்த்தப்பட்ட பட்ஜெட்டுக்குப் பிந்தைய எட்டாவது இணையவழிக் கருத்தரங்காகும் இது. இந்தக் கருத்தரங்கிற்கு உலகத்துக்காக … Read more

உக்ரைனில் பிணைகைதிகளாக இந்திய மாணவர்கள்: மத்திய வெளியுறவுத்துறை விளக்கம்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் கல்வி, வேலைவாய்பு காரணமாக அங்கு சென்ற ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். சுமார் 20,000 இந்தியர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியர்களை மீட்கும் பணிகளை பிரதமர் மோடி நேரடியாக பார்வையிட்டு வருகிறார். இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களையும் அவர் நடத்தி … Read more

இந்தியாவை சீனா தொடர்ந்து சீண்டி வருகிறது – அமெரிக்கா கருத்து <!– இந்தியாவை சீனா தொடர்ந்து சீண்டி வருகிறது – அமெரிக்கா கருத்து –>

கிடைத்த சர்ந்தர்ப்பத்தில் எல்லாம் சீனா இந்தியாவை சீண்டி வருவதாகவும், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில் இந்தியாவின் ராணுவ பலத்தை வலுப்படுத்த அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த ராஜாங்க அதிகாரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவை அவ்வப்போது சீண்டிவிடுவதை போல சீனா, இந்தியாவையும் சீண்டிவிடுவதாக தெற்கு மற்றும் மத்திய இந்திய விவகாரங்களுக்கான துணை அமைச்சர் டோனால்டு லூ தெரிவித்துள்ளார். சீனாவின் தொடர் சீண்டுதலை சமாளிக்க  கடல் பாதுகாப்பு, உளவு துறை, தகவல் பரிமாற்றம், விண்வெளி … Read more

கர்நாடகாவை சேர்ந்த 550 மாணவர்கள் உக்ரைனில் சிக்கி தவிப்பு- மாணவருடன் வளர்ப்பு நாயையும் மீட்க ஏற்பாடு

பெங்களூரு: உக்ரைனில் போர் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அங்கு தவிக்கும் இந்தியர்களை மீட்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. பல்வேறு கட்டங்களாக இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டு வருகின்றனர். உக்ரைனில் கர்நாடகாவை சேர்ந்த 694 மாணவர்கள் மருத்துவம் மற்றும் இதர படிப்புகள் படித்து வருகின்றனர். போர் தொடங்கும் முன்பாக அவர்களில் 57 பேர் கர்நாடகாவுக்கு திரும்பினர். கடந்த பிப்ரவரி 27-ந்தேதி முதல் நேற்றுவரை 86 மாணவர்கள் பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் … Read more

இந்தியாவை சுயசார்பு அடிப்படையில் உலகத்திற்கான சந்தையாக மாற்றுவதே நோக்‍கம்!: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: இந்தியாவை சுயசார்பு அடைப்படையில் உலகத்திற்கான சந்தையாக மாற்றுவதே நோக்‍கம் என தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உள்ளூர் உற்பத்தியாளர்கள் உலக அளவிலான தரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். பட்ஜெட்டிற்கு பிறகு, ‘உலகத்திற்காக மேக் இன் இந்தியா’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் கவனம் செலுத்துவதுடன், தரமான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். செமி கண்டக்டர்கள் உற்பத்தியில் நாம் தன்னிறைவு … Read more

'உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உலகளாவிய தரத்தை பராமரிக்க வேண்டும்' – பிரதமர் மோடி

தீபாவளியன்று, மட்கலங்களால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வாங்குவது மட்டுமே உள்ளூர் மக்களுக்கு குரல் கொடுப்பதாக ஆகாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பட்ஜெட்டுக்குப் பிந்தைய, இணையதளத்தில் ‘மேக் இன் இந்தியா ஃபார் தி வேர்ல்ட்’ என்ற தலைப்பிலான மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார். அப்போது உரை நிகழ்த்திய அவர், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உலகளாவிய தரத்தை பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆராய்ச்சி அடிப்படையிலான எதிர்கால அணுகுமுறை தேவை என்றும், அதற்கு நாம் பெரிய அளவில் சிந்திக்க வேண்டும் … Read more

காப்பீட்டு சான்றிதழ் சரிபார்ப்பு; செல்போன் எண் கட்டாயம்: புதிய அறிவிப்பு வெளியீடு

புதுடெல்லி: சாலை விபத்துகள் குறித்த விரிவான அறிக்கை மற்றும் காப்பீட்டு சான்றிதழில் சரிபார்க்கப்பட்ட செல்போன் எண்ணை இடம்பெற செய்வதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சாலை விபத்துகள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்கான நடைமுறைகள் கட்டாயமாக்கப் படுகிறது. சாலை விபத்துகள் குறித்த விரிவான அறிக்கை மற்றும் அதுபற்றி சம்பந்தப்பட்ட தரப்பினர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தகவல் அளிப்பது, வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம், இழப்பீடு கோரிக்கைகளுக்கு … Read more

நான் வேணும்னா.. போரை நிறுத்துமாறு புடினிடம் சொல்லவா?.. கடுப்பான தலைமை நீதிபதி!

உக்ரைன் மீதான ரஷ்யப் போரை நிறுத்த தலைமை நீதிபதி என்ன செய்கிறார் என்று சமூக வலைதளங்களில் கேட்கிறார்கள். நான் வேண்டும் என்றால் போரை நிறுத்துமாறு புடினிடம் போய் சொல்லட்டுமா என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேட்டுள்ளார். உக்ரைன் எல்லைப் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உச்சநீதின்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, ஹீமா … Read more

குவாட் அமைப்பின் தலைவர்கள் காணொலி மூலம் ஆலோசனை <!– குவாட் அமைப்பின் தலைவர்கள் காணொலி மூலம் ஆலோசனை –>

குவாட் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்நிலையில் காணொலி வாயிலாக இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட 4 நாடுகளின் தலைவர்களும் இணைந்து ஆலோசனை நடத்த உள்ளனர். உக்ரைன் விவகாரத்தை மையமாக வைத்தே இவர்களது உரையாடல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குவாட் கூட்டணியில் உள்ள நாடுகளில் இந்தியா மட்டுமே உக்ரைன் – … Read more