ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி ஏற்றுமதி பாதிப்பு

புதுடெல்லி: கரோனா தடுப்பூசி மருந்துகளில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் மருந்தும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றது. தற்போது ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது பொருளாதார தடைகளை சர்வதேச சமூகம் விதித்துள்ளது. இதனால் ஸ்புட்னிக் தடுப்பூசி மருந்து ஏற்றுமதி மற்றும் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஸ்புட்னிக் மருந்தை தயாரிக்கும் ரஷ்யாவின் ஆர்டிஐஎப் நிறுவனம் இந்தியாவில் இம்மருந்தைத் தயாரிக்க உரிமம் வழங்கியுள்ளது. பொருளாதார தடை காரணமாக இந்தியாவில் சுமார் 12 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகள் தேக்கமடைந்துள்ளதாக … Read more

இந்தியாவில் புதிதாக 6,396 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி <!– இந்தியாவில் புதிதாக 6,396 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி –>

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்து  6 ஆயிரத்து 396 ஆக பதிவாகி உள்ளது.  24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 201 பேர் உயிரிழந்த நிலையில், 13 ஆயிரத்து 450 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 69 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 69 ஆயிரத்து 897 பேர்  சிகிச்சையில் இருந்து வருகின்றனர். Source link

நிலையான எரிசக்தி ஆதாரங்களில் இருந்து மட்டுமே நிலையான வளர்ச்சி சாத்தியம் – பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: உலகிற்காக இந்தியாவில் உருவாக்குவோம் என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய நிலைமை குறித்து பிரதமர் மோடி இன்று இணையதளம் மூலம் பேசியதாவது: வரும் ஆண்டுகளில், இந்தியாவின் எரிசக்தி தேவைகள் அதிகரிக்கும். எனவே, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு நாம் மாற வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் 15 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்க உதவும் வகையில் நாம் சொந்தமாக சூரிய மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இது தனித்துவமாக மட்டும் இல்லாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும். 2030 ஆண்டிற்குள், இந்தியா தனது … Read more

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை 130 ரஷ்ய பேருந்துகள் மூலம் மீட்க திட்டம்

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை 130 ரஷ்ய பேருந்துகள் மூலம் மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. கார்கிவ், சுமியின் சிக்கியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை ரஷ்ய பேருந்துகள் மூலம் மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து டெல்லி திரும்பினாலும் இயல்புநிலைக்கு திரும்பாத மாணவர்கள்: ஜூனியர்களை முதலில் அனுப்பும் தமிழக மாணவர்கள்

புதுடெல்லி: உக்ரைன் நாட்டின் கீவ், கார்கிவ்நகரங்களில் உள்ள பாதாள அறைகளில் தஞ்சம் அடைந்திருந்த இந்திய மாணவர்கள், டெல்லிதிரும்பிய பிறகும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. தமிழகத்தைச்சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் முதலில் அனுப்பி பெருந்தன்மையுடன் நடந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து உக்ரைனின் உஸ்குரோத் தேசிய அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பயிலும் ஒசூர் மாணவர் வாஜித் அகமது கூறும்போது, “இந்திய மாணவர்களை 200-250 பேர் கொண்ட குழுக்களாக பல்கலைக்கழக நிர்வாகம் தாயகம்அனுப்பி வருகிறது. இந்த குழுக்களில் … Read more

ஓடும் ரயிலில் இருந்து இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர் <!– ஓடும் ரயிலில் இருந்து இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இ… –>

குஜராத் மாநிலம் சூரத் ரயில் நிலையத்தில் வேகமாக சென்ற ரயிலில் இருந்து இறங்கிய பயணி ஒருவர்  அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட வீடியோவில், ரயில்நிலையத்தில் இருந்து அந்த ரயில் மெதுவாக கிளம்பி பின்னர் படிப்படியாக வேகம் எடுத்துச் செல்வது பதிவாகி உள்ளது. அப்போது அந்த ரயிலில் இருந்து பயணி ஒருவர் இறங்க முற்படுகையில் தவறி விழுந்து இழுத்து செல்லப்படும் நிலை ஏற்பட்டது. இதனை கவனித்த ரயில்வே கார்டு உடனடியாக ரயிலை பிரேக் போட்டு நிறுத்தியதால் … Read more

புதிதாக 6,396 பேருக்கு கொரோனா- சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 70 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு

புதுடெல்லி: நாட்டில் கொரோனா 3-ம் அலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,396 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகதாரத்துறை கூறி உள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13,450 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து … Read more

'ஒரு உடலை வைக்கும் இடத்தில் 8 மாணவர்கள் வர முடியும்': உக்ரைனில் பலியான கர்நாடக மாணவரின் உடலை மீட்பது பற்றி பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு..!!

பெங்களூரு: உக்ரைனில் இருந்து கர்நாடக மாணவர் உடலை கொண்டு வருவது பற்றிய கேள்விக்கு அம்மாநில பாஜக எம்.எல்.ஏ. அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த நிலையில் போரில் கொல்லப்பட்டார். நவீனின் உடலை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவரது பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹுப்ளி பாஜக எம்.எல்.ஏ. அரவிந்த் பெல்லாட், உயிரிழந்த மாணவரின் உடலை கொண்டுவர … Read more

உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

புதுடெல்லி: போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவ, மாணவியரை உடனடியாக மீட்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம். தர் வாதிடும்போது, ‘‘உக்ரைனின் ருமேனியா எல்லைப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பரிதவிக்கின்றனர். அவர்களை உடனடியாக மீட்க உத்தரவிட வேண்டும்” என்று கோரினார். தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறியதாவது: உக்ரைனில் தவிக்கும் இந்திய … Read more

இந்தியாவின் நடுநிலை குறித்து செனட் சபை அதிருப்தி: ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கும்படி அமெரிக்கா இந்தியாவுக்கு கோரிக்கை <!– இந்தியாவின் நடுநிலை குறித்து செனட் சபை அதிருப்தி: ரஷ்யாவு… –>

ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கும்படி இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.ஐநா.சபையில் மூன்று முறை ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பு நடந்த போது இந்தியா தீர்மானத்துக்கு ஆதரவளிக்கவில்லை. இது அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மீது பொருளாதாரத் தடையை அறிவிக்கவும் ஜோ பைடன் அரசுக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக தெளிவான முடிவு எடுக்கும்படி அமெரிக்கா இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்தியா தனது எல்லைகளில் சீனா … Read more