புதிதாக 6,396 பேருக்கு கொரோனா- சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 70 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு

புதுடெல்லி: நாட்டில் கொரோனா 3-ம் அலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,396 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகதாரத்துறை கூறி உள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13,450 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து … Read more

'ஒரு உடலை வைக்கும் இடத்தில் 8 மாணவர்கள் வர முடியும்': உக்ரைனில் பலியான கர்நாடக மாணவரின் உடலை மீட்பது பற்றி பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு..!!

பெங்களூரு: உக்ரைனில் இருந்து கர்நாடக மாணவர் உடலை கொண்டு வருவது பற்றிய கேள்விக்கு அம்மாநில பாஜக எம்.எல்.ஏ. அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த நிலையில் போரில் கொல்லப்பட்டார். நவீனின் உடலை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவரது பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹுப்ளி பாஜக எம்.எல்.ஏ. அரவிந்த் பெல்லாட், உயிரிழந்த மாணவரின் உடலை கொண்டுவர … Read more

உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

புதுடெல்லி: போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவ, மாணவியரை உடனடியாக மீட்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம். தர் வாதிடும்போது, ‘‘உக்ரைனின் ருமேனியா எல்லைப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பரிதவிக்கின்றனர். அவர்களை உடனடியாக மீட்க உத்தரவிட வேண்டும்” என்று கோரினார். தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறியதாவது: உக்ரைனில் தவிக்கும் இந்திய … Read more

இந்தியாவின் நடுநிலை குறித்து செனட் சபை அதிருப்தி: ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கும்படி அமெரிக்கா இந்தியாவுக்கு கோரிக்கை <!– இந்தியாவின் நடுநிலை குறித்து செனட் சபை அதிருப்தி: ரஷ்யாவு… –>

ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கும்படி இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.ஐநா.சபையில் மூன்று முறை ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பு நடந்த போது இந்தியா தீர்மானத்துக்கு ஆதரவளிக்கவில்லை. இது அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மீது பொருளாதாரத் தடையை அறிவிக்கவும் ஜோ பைடன் அரசுக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக தெளிவான முடிவு எடுக்கும்படி அமெரிக்கா இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்தியா தனது எல்லைகளில் சீனா … Read more

உத்தர பிரதேசத்தில் 6ம் கட்ட தேர்தல் நிறைவு- 5 மணி வரை 53.31 சதவீத வாக்குப்பதிவு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்று 6ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அம்பேத்கர்நகர், பல்ராம்பூர், சித்தார்த்நகர், பஸ்தி, சந்த் கபீர் நகர், மகராஜ்கஞ்ச், கோரக்பூர், குஷிநகர், தியோரியா மற்றும் பல்லியா ஆகிய மாவட்டங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றது.  இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற கோரக்பூர் தொகுதியில் முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார். மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் … Read more

வேலையின்மை பற்றி வாய் திறக்காத மோடி இளைஞர்களிடம் கோபமும் மன உளைச்சலும் அதிகரிப்பு: ராகுல் காந்தி கருத்து

புதுடெல்லி:  ‘வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, சமூக அமைதியின்மை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி வாய்திறப்பது கிடையாது,’ என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில், அவர் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் மற்றும் சமூக அமைதியின்மை உள்ளிட்டவை நாட்டின் முன் உள்ள முக்கிய பிரச்னைகள். இவற்றின் காரணமாக இளைஞர்களிடையே மனஉளைச்சலும், கோபமும் அதிகரித்து வருகின்றது. … Read more

“உக்ரைன் விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும்”- குவாட் மாநாட்டில் மோடி

“உக்ரைனில் போரை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும்” என குவாட் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷ இடா ஆகியோருடன் காணொளி வாயிலாக நடந்த குவாட் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி ஆகியவை தான் குவாட் அமைப்பின் முக்கிய … Read more

உக்ரைன் எல்லைக்கு செல்லும் ஆந்திர அரசு அதிகாரிகள் குழு

அமராவதி: உக்ரைனில் மருத்துவம் படித்து வரும் ஆந்திர மாணவ, மாணவியரில் சிலர் மட்டும் சிறப்பு விமானங்கள் மூலம் பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர். மேலும் 680 மாணவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்திய மாணவர்கள் அனைவரையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இவர்களுக்கு உதவிகரமாக இருக்க ஆந்திர அரசு அதிகாரிகள் குழுவும் உக்ரைன் எல்லை வரைசெல்லலாம் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ஒப்புதல் அளித் துள்ளார். அதன்பேரில் சுமார் 10 பேர்கொண்ட குழு உக்ரைன் … Read more

சாலையில் நின்றிருந்த பாகன் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பயந்து ஓடிய யானையின் வைரல் வீடியோ <!– சாலையில் நின்றிருந்த பாகன் மீது இருசக்கர வாகனம் மோதியதில்… –>

கேரள மாநிலம் கொச்சியில் சாலையில் நின்றுக் கொண்டிருந்த யானைப்பாகன் மீது இருசக்கர வாகனம் மோதியதைக் கண்டு, யானை அலறியடித்து பயந்து ஓடிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. மகாதேவர் கோவிலில் சிவராத்திரி பூஜைக்காக வந்திறங்கிய யானை, சாலையில் நின்றுக் கொண்டிருந்தது. அச்சமயம் இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் வந்த பெண் ஒருவர், கட்டுப்பாட்டை இழந்து திடீரென அங்கு நின்றுக் கொண்டிருந்த யானைப்பாகன் மீது மோதினார். இதில், யானைப்பாகன் சிறிது தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டதை கண்டு மிரண்ட அந்த யானை, … Read more

போரை நிறுத்துங்கள் – மணல் சிற்பம் வரைந்து சுதர்சன் பட்நாயக் வலியுறுத்தல்

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக், சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.   இதற்கிடையே, உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. உக்ரைன் மீது ரஷியா … Read more