மாணவி தற்கொலை செய்த தஞ்சை பள்ளி மீது நடவடிக்கை பெற்றோருக்கு மனநல சிகிச்சை: தேசிய ஆணையம் பரிந்துரை

புதுடெல்லி: பதிவு செய்யப்படாமல் சட்ட விரோதமாக செயல்பட்ட தஞ்சாவூர் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கும்படி தேசிய குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த அரியலுாரை சேர்ந்த 17 வயது மாணவி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதால் தற்கொலை செய்ததாக புகார்கள் எழுந்தது. . இது தொடர்பான விசாரணையை சிபிஐ.க்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை … Read more

இதுவரை எத்தனை இந்தியர்கள் உக்ரைனிலிருந்து வந்து இருக்கிறார்கள்? – மத்திய அரசு தகவல்

‘ஆபரேஷன் கங்கா’ நடவடிக்கையின் கீழ் 30 விமானங்கள் மூலம் உக்ரைனில் இருந்து இதுவரை 6,400 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ” எங்களது முதல் ஆலோசனை வெளியானதில் இருந்து மொத்தம் 18,000 இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர். ‘ஆபரேஷன் கங்கா’ நடவடிக்கையின் கீழ் 30 விமானங்கள் மூலம் உக்ரைனில் இருந்து இதுவரை 6,400 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். அடுத்த 24 … Read more

ஆபரேஷன் கங்கா | இதுவரை 6,200 இந்தியர்கள் மீட்பு; அடுத்த 2 நாட்களில் 7,400+ பேரை மீட்க திட்டம்

ஆபரேஷன் கங்கா செயல்திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் உக்ரைனிலிருந்து 6,200-க்கும் அதிகமான இந்தியர்கள் திரும்பியுள்ளனர் என்றும், அடுத்த இரண்டு நாட்களில் 7,400-க்கும் அதிகமான இந்தியர்கள் வந்து சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை திரும்ப அழைத்து வர ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில், மீட்பு நடவடிக்கைகளை இந்தியா பெருமளவில் மேற்கொண்டு வருகிறது. இந்திய மாணவர்களை வெகு வேகமாக இந்தியாவிற்கு … Read more

மேரேஜுக்கு முன்னாடியே அந்த மேட்டர்…. எங்கேன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

திருமணமாவதற்கு முன் ஒரு ஆண், பெண் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உடலுறவு வைத்து கொள்வது மேலை நாடுகளில் வழக்கமான பழக்கமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் அங்கு திருமணத்துக்கு பின்பு விவகாரத்துக்கும், கணவன், மனைவி அல்லாதவர்களுடன் உறவு வைத்துக் கொள்வது சர்வசாதாரண விஷயம். ஆனால் பாரம்பரியம், கலாச்சாரத்துக்கு பெயர் போன நம் நாட்டில் இதுபோன்றதொரு வழக்கம் உள்ளதென்றால் உங்களால் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகதான் இருக்கும். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள முரியா, கோண்ட் பழங்குடியினரை பற்றி அறிந்தவர்கள் இந்த தகவலை நம்புவார்கள். … Read more

போரை நிறுத்துமாறு நாம் ரஷ்ய அதிபர் புதினிடம் கேட்க முடியுமா? தலைமை நீதிபதி என்.வி.ரமணா <!– போரை நிறுத்துமாறு நாம் ரஷ்ய அதிபர் புதினிடம் கேட்க முடியு… –>

போரை நிறுத்துமாறு நாம் ரஷ்ய அதிபர் புதினிடம் கேட்க முடியுமா? என வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேள்வி எழுப்பியுள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள பாத்திமா அஹானா என்ற மருத்துவ மாணவியின் குடும்பத்தினர், மால்டோவா – ருமேனியா எல்லையில் மாணவர்கள் சிக்கித் தவிப்பதாகக் கூறி வழக்கு தொடர்ந்தனர். இதன் விசாரணையின்போது, இந்த விவகாரத்தில் நாம் என்ன செய்ய முடியும்? நாளை புடினுக்கு உத்தரவு பிறப்பிக்கச் சொல்வீர்களா? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். மாணவர்கள் மீது … Read more

உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்பது அரசின் கடமை.. உதவி அல்ல- ராகுல் காந்தி

உக்ரைன் மீதான ரஷியா தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே குண்டு வெடிப்பு, ஏவுகணை தாக்குதல் உள்ளிட்டவையால் மக்கள் கலங்கி போய் உள்ளனர். தங்களின் உயிரை பாதுகாத்துக் கொள்ள லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். இதுபோல், உக்ரைனின் பல்வேறு நகரங்களிலும் வெளியேற முடியாமல் இந்திய மாணவர்கள் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இதையடுத்து, மத்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்மூலம் உக்ரைனில் … Read more

உலகிலேயே அதிக பொய் கூறும் கட்சி பாஜ: அகிலேஷ் கடும் தாக்கு

லக்னோ: உ.பி.யில் 6ம் கட்ட தேர்தல் இன்று நடந்து வருகிறது. கடைசிகட்ட தேர்தல் வரும் 7ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், ஜான்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அரசு பணிகளுக்கான வயது வரம்பு தளர்த்தப்படுவதுடன், காவல் துறையில் காலியாக இருக்கும் அனைத்து இடங்களும் நிரப்பப்படும். எங்களை குடும்ப கட்சி என்று பாஜ கேலி செய்து வருகிறது. … Read more

“போரில் பூனையை யார் பார்த்துக்கொள்வார்கள்?”- தமிழக மாணவரின் நெகிழ்ச்சிப் பேட்டி

“நான் தாயகம் திரும்பி விட்டால், போர் நடைபெறும் அந்த இடத்தில் எனது பூனையை கவனிக்க யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் என்னுடைய செல்லப்பிராணியையும் என்னுடன் அழைத்து வந்துவிட்டேன்” என தர்மபுரியை சேர்ந்த மருத்துவ மாணவர் கவுதம் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கிடையே கடுமையான போர் நடைபெற்று பெறும் சூழலில் இந்திய விமானப்படையின் விமானம் மூலம் உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்கள், செல்லப்பிராணிகளையும் அழைத்து வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா … Read more

உக்ரைனில் இருந்து தாயகம் புறப்பட்ட பஞ்சாப் மாணவர் மாரடைப்பால் மரணம்

புதுடெல்லி: உக்ரைனில் இருந்து நாடு திரும்புவதற்குப் புறப்பட்ட பஞ்சாப் மாணவர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், வினிஸ்தியா நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் நிகழும் ரஷ்யப் போரால் அங்குள்ள வெளிநாட்டினர் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. இதற்காக மத்திய அரசால் ‘ஆப்ரேஷன் கங்கா’ எனும் பெயரில் விமானங்களில் மீட்கப்படும் மாணவர்கள் டெல்லிக்கு வந்து சேருகின்றனர். தாயகம் திரும்புவதற்காக உக்ரைனின் எல்லையில் உள்ள ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி, போலாந்து, செக்கஸ்லேவேகியா … Read more

உக்ரைன் மீதான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் எண்ணமில்லை ; ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் <!– உக்ரைன் மீதான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் எண்ணமில… –>

உக்ரைன் மீதான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் எண்ணமில்லை என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜீ லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். மேலைநாடுகள் அணு ஆயுதப் போர் பற்றிப் பேசி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். விமானப் போக்குவரத்து, விண்வெளித்துறை சார்ந்த ரஷ்ய நிறுவனங்கள் பிரிட்டன் காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து காப்பீட்டுச் சேவைகளைப் பெறுவதைத் தடை செய்துள்ளதாக பிரிட்டன் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. கசக்கஸ்தானில் ரஷ்யாவுக்குச் சொந்தமான பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதை நிறுத்திக்கொள்வதாக பிரிட்டனைச் சேர்ந்த … Read more