இந்தப் பூவை வச்சு என்ன பண்றது??.. மத்திய அரசு மீது பாய்ந்த இந்திய மாணவர்!

உக்ரைனிலிருந்து மீண்டு இங்கு வந்த பிறகு பூ கொடுக்கிறார்கள். இதை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்வது என்று கேட்டுள்ளார் இந்திய மாணவர் ஒருவர். உக்ரைன் மீதான ரஷ்யப் போரில் சிக்கிக் கொண்டுள்ளனர் இந்திய மாணவர்கள் . 18,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைனில் படித்து வருகிறார்கள். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்னும் அங்கு சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. போர் உக்கிரமாக நடந்து வரும் கார்கிவ் நகரில்தான் பெருமளவிலான மாணவர்கள் மாட்டிக் கொண்டுள்ளனர். அவர்களது பாதுகாப்பு பெரும் … Read more

உத்தரப் பிரதேசத்தில் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு : ஆட்சியைத் தக்க வைப்போம் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை! <!– உத்தரப் பிரதேசத்தில் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு : ஆட்சியைத் … –>

உத்தரப் பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில் ஆறாம் கட்டமாக 10 மாவட்டங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் வாக்களித்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக 80 விழுக்காடு இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைக்கும் எனத் தெரிவித்துள்ளார். மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசச் சட்டமன்றத்துக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இன்று ஆறாம் கட்டமாகக் கோரக்பூர், பல்லியா உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று … Read more

குர்கானில் பயங்கர விபத்து: டிரக் மீது கார் மோதி 5 பேர் பரிதாப பலி

அரியானா மாநிலம், குர்கான் மாவட்டம் பினாவுலா கிராமத்தில் உள்ள டெல்லி – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் 5 பேருடன் கார் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே சென்றுக் கொண்டிருந்த டிரக் மீது பயங்கரமாக மோதியது. இதில், காரில் இருந்த ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர், … Read more

ரஷ்யா – உக்ரைன் போர்: விலைவாசி உயர்வால் ஐ.டி. சேவைகளுக்கான கட்டணங்கள் உயர வாய்ப்பு; எவரெஸ்ட் குழுமம் கணிப்பு…!!!

டெல்லி: ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுமார் 1 லட்சம் ஐ.டி. வேலைவாய்ப்புகள் இந்தியாவிற்கு வர வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ராணுவம் கடந்த ஒரு வாரமாக உக்ரைன் மீது போர் புரிந்து வரும் நிலையில் உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் போரினால் பல்வேறு பின்விளைவுகளை உக்ரைனும், பிற நாடுகளும் சந்திக்க உள்ளது. ரஷ்யா மற்றும் பெலாரஸ் மீது அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக … Read more

உக்ரைனில் பணயக் கைதிகளாக இந்தியர்கள்? இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்

உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் யாரும் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்படவில்லை என உக்ரைனில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், எந்த நேரத்திலும் ஆபத்து நிகழலாம் என்று கருதி கார்கிவ் பகுதியில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் நேற்று அவசர அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால், சில இடங்களில் இந்திய மாணவர்கள் வெளியேற முடியாமல் உக்ரைன் வீரர்களால் … Read more

குவாட் தலைவர்கள் இன்று ஆலோசனை: உக்ரைன் விவகாரம்; இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும்?

புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்றைய குவாட் நாடுகளின் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவை நிர்பந்திக்க அமெரிக்கா இன்றையக் கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. உக்ரைன் மீது கடந்த 24-ம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரை சுற்றிவளைத்து ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 7 நாட்களை கடந்து போர் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. போரை … Read more

உக்ரைனில் இந்திய மாணவர்கள் எவரும் பணயக் கைதியாக இல்லை – இந்திய வெளியுறவு அமைச்சகம் <!– உக்ரைனில் இந்திய மாணவர்கள் எவரும் பணயக் கைதியாக இல்லை – இ… –>

உக்ரைனில் இந்திய மாணவர் எவரையும் பணயக் கைதியாகப் பிடித்து வைத்திருப்பது பற்றித் தகவல் இல்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊடகத் தகவல்கள் குறித்த வினாவுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி பதிலளித்துள்ளார். அதில் உக்ரைனில் உள்ள இந்தியர்களுடன் இந்தியத் தூதரகம் தொடர்ச்சியான தொடர்பில் உள்ளதாகவும், உக்ரைன் அரசின் ஒத்துழைப்புடன் பல மாணவர்கள் நேற்றே கார்க்கிவ் நகரைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். எந்தவொரு மாணவரையும் பணயக் கைதியாகப் பிடித்து வைத்துள்ளதாகத் தங்களுக்கு எந்தத் தகவலும் … Read more

சித்தூர் மாணவர்கள் 52 பேர் தவிப்பு- உக்ரைன் எல்லைக்கு செல்லும் ஆந்திர அரசு அதிகாரிகள் குழு

திருப்பதி: உக்ரைன், ரஷியா போர் தீவிரமடைந்துள்ளதால் அங்கு படித்து வரும் இந்திய மாணவர்கள் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உக்ரைனில் மருத்துவம் படித்து வரும் மாணவ, மாணவிகள் சிலர் மட்டும் சிறப்பு விமானங்கள் மூலம் பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர். மேலும் 680 மாணவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்திய மாணவர்கள் அனைவரையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இவர்களுக்கு உதவியாக இருக்க ஆந்திர அரசு அதிகாரிகள் … Read more

புலம் பெயர்ந்தவர்கள் நலனுக்காக 'அம்பர்லா' திட்டத்தின் கீழ் ரூ.1452 கோடி நிதி: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: பிற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு புலம் பெயர்ந்தவர்கள் நலனுக்காக அம்பர்லா திட்டத்தின் கீழ் ரூ.1,452 கோடி ஒதுக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2026 ஆம் நிதியாண்டு வரைக்குமான இந்த நிதி, இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் நலனுக்காகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு, காஷ்மீரிலிருந்து புலம்பெயர்ந்த குடும்பங்களின் மேம்பாட்டுக்காகவும், 1984- ல்  சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காகவும் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாத தாக்குதல், இடதுசாரி நக்சல்களின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், கண்ணிவெடி, எல்லைப்பகுதி குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காகவும், … Read more

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: திரிணாமூல் காங்கிரஸ் அமோக வெற்றி

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 108 நகராட்சிகளில் 102-ஐ திரிணாமூல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. பாஜக ஒரு நகராட்சியை கூட கைப்பற்றவில்லை. 108 நகராட்சிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. மொத்தமுள்ள நகராட்சிகளில் 102 நகராட்சிகளை ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. எதிர்கட்சித் தலைவரும், பாஜக எம்.எல்.ஏவுமான சுவேந்து அதிகாரியின் குடும்பத்தினரின் வசம் இருந்த கண்டாய் நகராட்சியில் திரிணாமூல் … Read more