புலம் பெயர்ந்தவர்கள் நலனுக்காக 'அம்பர்லா' திட்டத்தின் கீழ் ரூ.1452 கோடி நிதி: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: பிற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு புலம் பெயர்ந்தவர்கள் நலனுக்காக அம்பர்லா திட்டத்தின் கீழ் ரூ.1,452 கோடி ஒதுக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2026 ஆம் நிதியாண்டு வரைக்குமான இந்த நிதி, இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் நலனுக்காகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு, காஷ்மீரிலிருந்து புலம்பெயர்ந்த குடும்பங்களின் மேம்பாட்டுக்காகவும், 1984- ல்  சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காகவும் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாத தாக்குதல், இடதுசாரி நக்சல்களின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், கண்ணிவெடி, எல்லைப்பகுதி குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காகவும், … Read more

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: திரிணாமூல் காங்கிரஸ் அமோக வெற்றி

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 108 நகராட்சிகளில் 102-ஐ திரிணாமூல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. பாஜக ஒரு நகராட்சியை கூட கைப்பற்றவில்லை. 108 நகராட்சிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. மொத்தமுள்ள நகராட்சிகளில் 102 நகராட்சிகளை ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. எதிர்கட்சித் தலைவரும், பாஜக எம்.எல்.ஏவுமான சுவேந்து அதிகாரியின் குடும்பத்தினரின் வசம் இருந்த கண்டாய் நகராட்சியில் திரிணாமூல் … Read more

கடுமையாக உயரும் கச்சா எண்ணெய் விலை: 8 ஆண்டுகளில் இல்லாத லாபம் ஈட்டும் ஓஎன்ஜிசி

புதுடெல்லி: கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதிகமாக இறக்குமதி செய்யும் இந்தியா பாதிக்கப்படும் என அச்சம் உள்ள நிலையில் கச்சா எண்ணெய் தோண்டி எடுக்கும் இந்திய அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா மீது கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து … Read more

ஆப்ரேஷன் கங்கா: இந்திய விமானப்படையின் 2 விமானங்கள் தாயகம் வந்தடைந்தது!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் கல்வி, வேலைவாய்பு காரணமாக அங்கு சென்ற ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். சுமார் 20,000 இந்தியர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து, ஏர் இந்தியா, ஸ்பைஸ் … Read more

மகாராஷ்ட்ராவில் மும்பை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்குக் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு <!– மகாராஷ்ட்ராவில் மும்பை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்குக் கொரோ… –>

மகாராஷ்ட்ராவில் கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கியதை அடுத்து மும்பை உள்பட 14 மாவட்டங்களில் ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், உணவகங்கள், மால்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள் போன்றவை 100 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த 14 மாவட்டங்களில் வசிப்பவர்கள் 90 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும் 70 சதவீதம் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் மகாராஷ்ட்ரா அரசு தெரிவித்துள்ளது. Source link

இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 6,500 ஆக குறைந்தது

புதுடெல்லி:  இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 6,500 ஆக குறைந்துள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,561 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகதாரத்துறை கூறி உள்ளது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 2,373 பேருக்கு தொற்று உறுதியானது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 45 ஆயிரத்து 160 ஆக உயர்ந்தது. தினசரி பாதிப்பு விகிதம் 0.74 சதவீதமாகவும், வாரந்திர பாதிப்பு விகிதம் 0.99 … Read more

காலாவதி தேதியை நெருங்கும் கொரோனா தடுப்பூசி மருந்தை மாற்றிக் கொடுக்க மாநில அரசுகளுக்கு தடையில்லை: ஒன்றிய சுகாதாரத்துறை

டெல்லி: காலாவதி தேதியை நெருங்கும் கொரோனா தடுப்பூசி மருந்தை மாற்றிக் கொடுக்க மாநில அரசுகளுக்கு தடையில்லை என ஒன்றிய சுகாதாரத்துறை கூறியுள்ளது. தனியார் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி மருந்து காலாவதி தேதியை நெருங்கியதால் ஒன்றிய சுகாதாரத்துறை இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.

"இந்தியர்களை மீட்க என்னென்ன திட்டங்கள்?" – ராகுல்காந்தி வலியுறுத்தல்

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பான திட்ட விவரங்களை மத்திய அரசு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ராகுல், மேலும் சோகம் நிகழ்வதைத் தவிர்க்க மீட்பு குறித்த தகவல்களை பகிர்வது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். உக்ரைனிலிருந்து எத்தனை மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர், இன்னும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர், பகுதிவாரியாக அவர்களை வெளியேற்ற அரசிடம் உள்ள திட்டங்கள் என்னென்ன? என்பன போன்றவற்றை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். … Read more

'இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்படவில்லை': வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: உக்ரைனின் கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதை இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுச் செயலர் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டர் பக்கத்தில், உக்ரைனில் உள்ள இந்தியர்களுடன் அங்குள்ள நமது தூதரகம் தொடர்பில் உள்ளது. உக்ரைன் அதிகாரிகளின் உதவியுடன் நேற்று நிறைய இந்திய மாணவர்கள் கார்கிவ்வில் இருந்து வெளியேறினர். இதுவரை இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு எந்தத் … Read more

உத்தரப் பிரதேசத்தில் 6வது கட்டமாக 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு <!– உத்தரப் பிரதேசத்தில் 6வது கட்டமாக 57 தொகுதிகளில் வாக்குப்… –>

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் உள்பட 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 11 தொகுதிகள் தனித் தொகுதிகளாகும். காலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர் இரண்டு கோடியே 14 லட்சம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 676 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர். எஞ்சிய 54 தொகுதிகளுக்கான ஏழாம் கட்ட இறுதித் தேர்தல் இம்மாதம் … Read more