தங்கம் கடத்தல் வழக்கு அமலாக்கத் துறை மீண்டும் சொப்னாவிடம் விசாரணை

திருவனந்தபுரம்: கேரளாவில் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சொப்னாவுக்கு உடந்தையாக இருந்ததின் பேரில் கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது செய்யப்பட்டார். மூன்று மாத சிறைவாசத்திற்குப் பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட சுயசரிதையில்,  ‘சொப்னாவுக்கும், எனக்கும் நெருங்கிய பழக்கம் இருந்தது. ஆனால், அவர் தங்கம் கடத்தியது குறித்து எதுவும் தெரியாது,’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த சொப்னா, நானும் சிவசங்கரும் … Read more

'97% மார்க் எடுத்தும் கோடிக்கணக்கில் கேட்டார்கள்' – உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் தந்தை

கர்நாடகா: “97% மதிப்பெண் பெற்றிருந்தாலும், என் மகனால் மாநிலத்தில் மருத்துவ சீட் பெற முடியவில்லை. மருத்துவ சீட் பெற, கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்க வேண்டும்” என்று உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் தந்தை பேசியுள்ளார். வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றுவரும் இந்தியர்களில் 90% பேர் இங்கு இந்திய அரசால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் (Foreign Medical Graduates Examination FMGE) வெற்றி பெறுவதில்லை என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இன்று பேசினார். இந்திய மாணவர்கள் ஏன் அதிகளவில் … Read more

#istandwithputin.. புடினுக்கு பெருகும் ஆதரவு.. அமெரிக்காவை வறுத்தெடுக்கும் இந்தியர்கள்!

ரஷ்யா- உக்ரைன் இடையிலான போரில் உக்ரைன் அதிபருக்கு ஒரு பக்கம் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் புடினுக்கு ஆதரவாக பலர் கிளம்பியுள்ளனர். டிவிட்டரில் #istandwithputin டிரெண்ட் ஆகி வருகிறது. உக்ரைன் விவகாரம்தான் இன்று உலகின் பேசு பொருளாகியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு மூல காரணம் அமெரிக்காவும் நேட்டோவும்தான். ஐரோப்பிய நாடுகளைக் குறி வைத்து அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், ரஷ்யாவை முடக்கிப் போடுவதே. முன்னாள் சோவியத் யூனியன் குடியரசுகள் பலவற்றை அது நேட்டோவில் … Read more

இந்தியாவின் வலிமை அதிகரிப்பதால், உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க முடிகிறது – பிரதமர் மோடி <!– இந்தியாவின் வலிமை அதிகரிப்பதால், உக்ரைனில் தவிக்கும் இந்த… –>

இந்தியாவின் வலிமை அதிகரிப்பதால், உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க முடிவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் ராபர்ட்ஸ்கன்ஜ் என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், ஆபரேசன் கங்கா என்ற பெயரில் இந்திய மாணவர்கள் மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை சுட்டிக்காட்டினார். உக்ரைனில் இருந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தாயகம் திருப்பி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக மத்திய அமைச்சர் 4 பேர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பி … Read more

இந்திய வரலாற்று பாடப் புத்தகங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் – குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

ஏலூரு: ஆந்திரப் பிரதேச மாநிலம் ஏலூருவில் உள்ள சர் சி. ஆர். ரெட்டி கல்வி நிலையங்களின் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது: இளைய தலைமுறையினரிடையே நமது மதிப்பு வாய்ந்த கலாச்சார பாரம்பரியம் குறித்த பெருமையை கொண்டு செல்லும் வகையில், இந்திய கண்ணோட்டத்தோடு வரலாற்று பாடப் புத்தகங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும். நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்காக நமது வேர்களுக்கு மீண்டும் செல்ல வேண்டும். … Read more

சுமார் 800 இந்தியர்களுடன் இந்திய விமானப்படையின் விமானங்கள் காலை 8 மணிக்குள் உ.பி.யில் தரையிறங்கும் என தகவல்

டெல்லி: சுமார் 800 இந்தியர்களுடன் இந்திய விமானப்படையின் (IAF) நான்கு விமானங்கள் இன்று நள்ளிரவு 1.30 மணி முதல் நாளை காலை 8 மணிக்குள் உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் ஹிண்டன் விமான தளத்தில் தரையிறங்கும் என ஒன்றிய அரசு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ருமேனியாவில் இருந்து இந்திய விமானப்படையின் சி17 ரக முதல் போர் விமானத்தில் 200 இந்தியர்கள் இன்று இரவு நாடு திரும்புகின்றனர்.

மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் மம்தா கட்சி அபாரம்: 108-ல் 102 நகராட்சிகளை கைப்பற்றியது

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 108 நகராட்சிகளில் 102 இடங்களை கைப்பற்றிய ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 272 இடங்களில் 203 இடங்களில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்த பாஜகவால் 77 தொகுதிகளை மட்டுமே … Read more

உக்ரைனில் கர்நாடக மாணவன் இறக்க இதுதான் காரணம்- முன்னாள் முதல்வர் பகீர் குற்றச்சாட்டு!

உக்ரைனில் நடந்த ரஷிய தாக்குதலில், அங்கு மருத்துவ படிப்பு படித்துவந்த கர்நாடகத்தை சேர்ந்த நவீன் என்ற மருத்துவ மாணவன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இக்கொடூர சம்பவத்துக்கு நீட் தேர்வுதான் காரணம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் அடுக்கடுக்கான ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், ‘நவீன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 96 சதவீதமும், பியூசியில் 97 சதவீதமும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். ஒரு கிராமப்புற மாணவர் இவ்வளவு … Read more

உக்ரைனில் இருந்து இதுவரை 17,000 பேர் இந்தியர்கள் மீட்பு..! <!– உக்ரைனில் இருந்து இதுவரை 17,000 பேர் இந்தியர்கள் மீட்பு..! –>

உக்ரைனில் இருந்து இதுவரை இந்தியர்கள் 17,000 பேர் வெளியேறி இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தலை அடுத்து, உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேறுவது அதிகரித்துள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்தார். கீவ் நகரில் இருந்த தூதரகத்தில் இருந்து அதிகாரிகள் அனைவரும் வெளியேறிய நிலையில், உக்ரைன் நாட்டின் லீவிவ் நகரில் இந்திய தூதரகத்தின் தற்காலிக அலுவலகம் அமைக்கப்படுமென அவர் அறிவித்தார். இதனிடையே உக்ரைனில் இருந்து போலந்து நாட்டின் எல்லை நகருக்கு வந்துள்ள … Read more

எங்களை உக்ரேனியர்கள் அடிக்கிறார்கள்- கார்கிவ் ரெயில் நிலையத்தில் தவிக்கும் இந்திய மாணவர்கள்

புதுடெல்லி: உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷிய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறும்படி இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.  இதனால் இந்தியர்கள் கார்கிவ் நகரில் இருந்து வெளியேறியவண்ணம் உள்ளனர்.  ஆனால் அவர்கள் கார்கிவ் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். கார்கிவ் ரெயில் நிலையத்தில் உள்ள  நிலவரம், தங்களின் நிலை குறித்து இந்திய மாணவர்கள் வீடியோக்கள் மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர்.  கடும் சிரமங்களை சந்தித்து ரெயில் நிலையத்திற்கு வந்தால் … Read more