குழந்தைகளுடன் குறைவான நேரத்தை செலவிடுவதாக பெற்றோர்கள் கவலை – ஆய்வில் தகவல்

பெரும்பாலான குடும்பங்களில் அனைவரும் ஒன்றாக இருந்தும் தங்கள் பொழுதை தனியாகவே கழித்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ‘ஒன்றாக இருந்தும் தனித்திருக்கும்’ (Alone-together) நேரம் என சொல்கின்றனர். குழந்தைகளும், பெற்றோர்களும் ஒரே இடத்தில் இருந்தும் தனித்தனியாகவே இருப்பதாக குழந்தைகள் தெரிவித்துள்ளதாக இந்த ஆய்வை மேற்கொண்ட இணை ஆய்வறிஞர் தெரிவித்துள்ளார்.  குழந்தைகளுடன் போதுமான நேரம் செலவிட தவறிய இந்திய பெற்றோர்கள் குற்ற உணர்வுடன் இருப்பதாகவும், அழுத்தத்துடன் இருப்பதாகவும் உணர்வதாக கடந்த 2014 வாக்கில் வெளியிடப்பட்ட IKEA பிளே … Read more

பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்க இஸ்லாமிய வெறுப்பா?- முகலாய படையெடுப்பை ஒப்பிட்ட உக்ரைன் தூதர்: ஒவைசி கடும் கண்டனம்

புதுடெல்லி: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை ராஜ்புத்திரர்களை மொகலாயர் படுகொலையுடன் ஒப்பிட்ட பேசிய இந்தியாவுக்கான உக்ரைன் பொலிகாவை ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசியை கடுமையாக விமர்சித்துள்ளார். உக்ரைனின் கார்கிவ் நகரில் நேற்று நடந்த தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் நவீன் (21) உயிரிழந்தார். உக்ரைனில் கொல்லப்பட்ட நவீன் கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டம் செலகெரேவை சேர்ந்தவர். சேகரப்பா கவுடர் என்பவரின் மகனான இவர் அங்குள்ள கார்கிவ் தேசிய மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் … Read more

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் – வெளியானது ஜாக்பாட் அறிவிப்பு!

தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் விரைவில் வழங்கப்பட உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில், மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில், அரசு ஊழியர்கள் , அரசு ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுவாக, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும். இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் தேர்தல் … Read more

உக்ரைனியர்களை தனது உணவகத்தில் தங்க வைத்து இலவசமாக உணவு, உறைவிடம் வழங்கிய இந்தியருக்கு குவியும் பாராட்டு <!– உக்ரைனியர்களை தனது உணவகத்தில் தங்க வைத்து இலவசமாக உணவு, உ… –>

ரஷ்ய தாக்குதலில் இருந்து தப்பிக்க உக்ரைனியர்கள் சிலர் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான உணவகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். குஜராத்தை சேர்ந்த மனிஷ் டேவ், தலைநகர் கீவில் தங்கி படிக்கும் இந்திய மாணவர்களுக்காக ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தில் உணவகம் ஒன்றை தொடங்கினார். தற்போது ரஷ்யா-உக்ரைன் இடையே போர் மூண்டதால் ரஷ்ய தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள மக்கள் பாதாள அறைகளில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். பாதாள அறை வசதி இல்லாதவர்கள் தனது உணவகத்தில் வந்து தங்கி கொள்ளுமாறு மனிஷ் டேவ் அறிவித்தார். உக்ரைனியர்கள், … Read more

இந்தியர்கள் அனைவரும் கார்கிவ் நகரை விட்டு வெளியேற உத்தரவு

புதுடெல்லி: உக்ரைன் மீது உக்கிரமான தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள் ஒரு சில பகுதிகளை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். 7வது நாளாக போர் நீடிக்கும் நிலையில், கார்கிவ் நகரில் ரஷிய படைகள் தீவிர தாக்குதல் நடத்துகின்றன.  எனவே, பாதுகாப்பு கருதி கார்கிவிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.   கார்கிவில் உள்ள இந்தியர்கள் பெசோசின், பபாயி, பெஸ்லியுடோவ்கா ஆகிய பகுதிகளுக்கு செல்லவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டு நேரப்படி இன்று மாலை … Read more

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல்: ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி; ஒரு நகராட்சியை கூட கைப்பற்றாத நிலையில் பிஜேபி, காங்கிரஸ்

கொல்கத்தா: மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது. மேற்கு வங்கத்தில் அண்மையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதன் முடிவுகளை மாநிலதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்கு வங்கத்தில் உள்ள மொத்தமுள்ள 107 நகராட்சிகளில் 93 இடங்களை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், கைப்பற்றியுள்ளது. 7 நகராட்சிகளில் திரிணாமுல் முன்னிலையில் உள்ளதாகவும் மார்க்சிஸ்ட் மற்றும் ஹம்ரோ ஆகிய கட்சிகள் தலா 1 இடத்தை கைப்பற்றியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2021 … Read more

தேசிய ஸ்டார்ட் அப் விருதுகள் 2022: விண்ணப்பங்கள் அனுப்பலாம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 17 துறைகளில் 7 சிறப்பு பிரிவுகளில், தேசிய ஸ்டார்ட் அப் விருதுகள் 2022-ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை, தனது 3வது தேசிய ஸ்டார்ட் அப் விருதுகளை தொடங்கியுள்ளது. விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை முன்னிட்டு, தொடங்கப்பட்டுள்ள ஸ்டார்ட் அப் விருதுகள் 22, ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும், இந்தியாவின் வளர்ச்சி கதைக்கு காரணமாக இருப்பவர்களையும், … Read more

வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு: மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றுவரும் இந்தியர்களில் 90 சதவீதம் பேர் இங்கு இந்திய அரசால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் (Foreign Medical Graduates Examination-FMGE) வெற்றி பெறுவதில்லை என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் 2021ஆம் ஆண்டு விதிகளின்படி, அயல்நாடுகளில் மருத்துவப்படிப்பை மேற்கொண்டால், அங்குள்ள கல்லூரிகளில் 54 மாதங்கள் கல்வி பயின்றிருக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் 12 மாதங்கள் பயிற்சியும் பெற்றிருப்பது அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல வெளி நாடுகளில் … Read more

இந்தியாவுக்கு எஸ்400 ஏவுகணை வழங்க எந்தத் தடையும் இருக்காது -இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் <!– இந்தியாவுக்கு எஸ்400 ஏவுகணை வழங்க எந்தத் தடையும் இருக்காத… –>

இந்தியாவுக்கு எஸ் 400 ஏவுகணை அமைப்பை வழங்குவதில் எந்தத் தடையும் இருக்காது என இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் டெனிஸ் அலிப்போவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை அமைப்பை வாங்க இந்தியா உடன்பாடு செய்துள்ளது. இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அதன் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இதனால் குறித்த காலத்தில் இந்தியாவுக்கு ஏவுகணை அமைப்பு வழங்கப்படுமா என்கிற வினாவுக்கு ரஷ்யத் தூதர் டெனிஸ் அலிப்போவ் பதிலளித்தார். … Read more

விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 22 வயது பெண் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று இவர் விபத்தில் சிக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து அவர் கோமா நிலைக்கு சென்றார். உறவினர்கள் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் டாக்டர்கள் கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்று தெரியாமல் தவித்தனர். … Read more