விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 22 வயது பெண் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று இவர் விபத்தில் சிக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து அவர் கோமா நிலைக்கு சென்றார். உறவினர்கள் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் டாக்டர்கள் கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்று தெரியாமல் தவித்தனர். … Read more

உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெளியுறவு விவகாரத்துறை குழுவிடம் அமைச்சர் ஜெய்சங்கர் நாளை விளக்கம்

டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெளியுறவு விவகாரத்துறை குழுவிடம் அமைச்சர் ஜெய்சங்கர் நாளை விளக்கம் அளிக்க உள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவிடம் நாளை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்கவுள்ளது.

"தொழில்நுட்பத்துறையில் நாடு சுயசார்பு நிலையை எட்டுவது அவசியம்" – பிரதமர் மோடி பேச்சு

தொழில்நுட்பத்துறையில் நாடு சுயசார்பு நிலையை எட்டுவது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இணையதள கருத்தரங்கு ஒன்றில் பேசிய பிரதமர், தொழில்நுட்ப அடிப்படையிலான வளர்ச்சிக்கு அரசு முக்கியத்துவம் தந்து வருவதாக கூறினார். கடந்த மத்திய பட்ஜெட்டில் செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர், ட்ரோன் உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். அடுத்து வரவுள்ள 5ஜி தொழில்நுட்பம், வளர்ச்சிக்கு வழிவகுப்பதுடன் ஏராளமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்தாண்டு 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் … Read more

பெட்ரோல்- டீசல் விலை அடுத்தவாரம் உயர்வு?- ஆய்வறிக்கை தகவல்

புதுடெல்லி: கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 110 டாலராக உயர்ந்துள்ள நிலையில் இதன் எதிரொலியாக பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு அடுத்தவாரம் முதல் விலையேற்றம் இருக்கலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா மீது கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை … Read more

பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி ஆதரவு!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் கல்வி, வேலைவாய்பு காரணமாக அங்கு சென்ற ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். சுமார் 20,000 இந்தியர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஆப்பரேஷன் கங்கா என்ற பெயரில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து, ஏர் இந்தியா, ஸ்பைஸ் … Read more

மகா சிவராத்திரியை முன்னிட்டு 11.71 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நிகழ்ச்சி! <!– மகா சிவராத்திரியை முன்னிட்டு 11.71 லட்சம் அகல் விளக்குகள்… –>

மகா சிவராத்திரியை முன்னிட்டு மத்திய பிரதேச மாநிலம்  உஜ்ஜயின் மகா காளேஸ்வரர் கோயிலில் 11 லட்சத்து 71 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. சிவ ஜோதி அர்ப்பணம் மகோத்சவம் என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் 11 அகல் விளக்குகள் ஏற்றி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் அகல் விளக்குகளை ஏற்றினர். 5 பேர் அடங்கிய கின்னஸ் குழுவினர் நிகழ்ச்சியை நேரில் பார்வையிட்டு அங்கீகரித்து … Read more

பாலக்காடு திப்பு கோட்டையில் கட்டுமானப் பணியின் போது 47 பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் திப்பு கோட்டை உள்ளது. இக்கோட்டை பல நூற்றாண்டுகள் பழமையானது ஆகும். இந்தக் கோட்டை ஹைதர் அலி, ஜாமோரின், ஆங்கிலேயர்கள் போன்ற பல்வேறு ஆட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது என்பது வரலாறு. இந்நிலையில் இக்கோட்டையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை திருச்சூரில் இருந்து வந்த தொல்லியல் துறை குழுவினர் செய்து வருகின்றனர்.சீரமைக்கும் பணியின் ஒரு பகுதியாக குழாய் அமைக்க தோண்டிய போது 47 பீரங்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. உடனே குண்டுகளை பாதுகாக்கப்பட்ட இடத்திற்கு மாற்றினர். … Read more

புனே அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி 4 பேர் பலி

மகாராஷ்டிரா: புனே அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் குடியிருப்பில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 4 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியாகினர்.

ஆபரேஷன் கங்கா | 2 விமானங்களில் 28 தமிழக மாணவர்கள் உட்பட 350+ இந்தியர்கள் நாடு திரும்பினர்

புதுடெல்லி: உக்ரைனில் சிக்கிய இந்தியர்கள் இன்று மட்டும் எட்டு விமானங்களில் டெல்லி வந்து சேருகின்றனர். காலையில் வந்த இரண்டு விமானங்களில் 28 தமிழக மாணவர்கள் உள்பட சுமார் 350 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பினர். ரஷ்யாவின் படையெடுப்பின் தீவிரத்தால் உக்ரைன் நிலைமை உக்கிரமைடைந்து வருகிறது. ரஷ்யாவின் மிக அருகில் அமைந்த உக்ரைனின் கிழக்குப் பகுதியிலுள்ள கீவ் தலைநகர் உள்ளது. இதனுள், இன்று ரஷ்யா தனது ராணுவத்தால் முழுமையாக ஆக்கிரமிக்கும் சூழல் உருவாகிவிட்டது. இதனால், உக்ரைனில் பயிலும் இந்தியர்கள் … Read more

அரசு ஊழியர்கள் செம ஷாக் – முதல்வர் இப்படியொரு அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என, மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் நடப்பு நிதி ஆண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அம்மாநில அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் … Read more