போர் தீவிரம்: கீவ் நகரில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் முயற்சியில் இந்திய தூதரகம்

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என இந்தியத் தூதரகம் நேற்று கேட்டுக்கொண்டது. அந்நகரில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் முயற்சியும் தீவிரமாக நடக்கிறது. ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 24-ம் தேதி முதல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக உக்ரைன் சென்றுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள் போர் சூழலில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தலைநகர் கீவ் நகரில் மட்டும் சுமார் 2000 … Read more

உக்ரைனில் இருந்து 60 சதவீத இந்தியர்கள் வெளியேறி விட்டதாக தகவல் <!– உக்ரைனில் இருந்து 60 சதவீத இந்தியர்கள் வெளியேறி விட்டதாக … –>

உக்ரைனில் இருந்து 60 சதவீத இந்தியர்கள் வெளியேறி விட்டதாக வெளியுறவுச் செயலர் சிருங்காலா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கீவ் நகரில் இருந்து இந்தியர்கள் யாவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்டார். மொத்தம் 20 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் பல பகுதிகளில் இருந்த நிலையில், 12 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். எஞ்சிய நாற்பது சதவீதம் பேரில் பாதிப்பேர் எல்லைகளை அடைந்துவிட்டனர் என்றும், 20 சதவீத இந்தியர்கள் போர்ஆபத்து சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ளதாகவும் சிருங்காலா தெரிவித்தார். … Read more

ஷீரடி சாய்பாபா கோவிலில் அதிகாலை, இரவு நேர பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி

மும்பை : மராட்டியத்தில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோவிலில் அதிகாலை மற்றும் இரவு பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தநிலையில் தற்போது மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது. எனவே ஷீரடி சாய்பாபா கோவில் நிர்வாகம் பக்தர்கள் அதிகாலை, இரவு பூஜையில் கலந்து கொள்ளலாம் என அறிவித்து உள்ளது. இது குறித்து கோவில் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி பாக்யஸ்ரீ … Read more

சட்டப்பேரவையை கூட்டும் நேரத்தை மாற்றாமல் மேற்கு வங்க ஆளுநர் தொடர்ந்து முரண்டு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் ஜெகதீப் தங்காருக்கும் எல்லா விவகாரங்களிலும் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையை வரும் 7ம் தேதி கூட்டும்படி தங்காருக்கு அரசு பரிந்துரை செய்தது. அது, விதிமுறைப்படி இல்லை என்று ஆளுநர் திருப்பி அனுப்பினார். பின்னர், புதிதாக அனுப்பப்பட்ட பரிந்துரையில். மார்ச் 7ம் தேதி அதிகாலை 2 மணிக்கு பேரவையைக் கூட்டும்படி தெரிவிக்கப்பட்டது. இதை அப்படியே ஏற்ற தங்கார், அதிகாலை 2 மணிக்கு பேரவையை கூட்டும்படி உத்தரவிட்டார். இது, … Read more

மேகேதாட்டு யாத்திரையை தொடங்கியது காங்கிரஸ்: முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சனம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டும்திட்டத்தை கர்நாடக அரசு உடனடியாக தொடங்க வலியுறுத்தி கடந்த ஜனவரி 9-ம் தேதி, காங்கிரஸ் பாத யாத்திரை தொடங்கியது. 4 நாட்களில் 139 கி.மீ. தூரத்தை கடந்த போது கரோனா 3-வது அலை வேகமாக பரவியது. இதனால் பாத யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் மேகேதாட்டு பாத யாத்திரையை ராம்நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினர். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் … Read more

நூறு நாள் வேலை திட்டத்துக்கு நிதி கட் – மத்திய அரசு அதிரடி!

நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் குறைந்தபட்ச வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இதில் இணையும் பணியாளா்களின் எண்ணிக்கை அடிப்படையில் அந்தத் திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்பட்டு அதற்கான ஊதியம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் விதிகளின்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குறை தீர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் குறை தீர்ப்பாளர் நியமிக்கப்படவில்லை என தெரிய … Read more

மாணவர்களை அழைத்து வர இந்திய விமானப்படை விமானம் ருமேனியா பயணம்

ஹிண்டன்: ரஷிய போர் காரணமாக உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்கள் மீட்பு நடவடிக்கையில் விமானப்படை விமானங்கள் இணைய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.  இது தொடர்பாக குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்தை நேற்று நேரில் சந்தித்த பிரதமர், மீட்பு பணி குறித்து விளக்கம் அளித்தார். இதையடுத்து ஆபரேஷன் கங்கா திட்டத்தில் இந்திய விமானப்படையின் போக்குவரத்து விமானம் இணைக்கப்பட்டுள்ளது. விமானப்படையின் சி-17 போக்குவரத்து ரக முதல் விமானம் இன்று அதிகாலை  ஹிண்டன் விமானப்படை தளத்தில் … Read more

படம் பார்த்து மனம் மாறினார் எதிரி நடிகையை பாராட்டிய கங்கனா

மும்பை: படம் பார்த்துவிட்டு மனம் மாறிய கங்கனா ரனவத், தனது எதிரி நடிகையை பாராட்டியுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்தபோது, பாலிவுட்டில் நெப்போடிசம் அதிகரித்து விட்டதாக குரல் எழுந்தது. இதனாலேயே சுஷாந்த் சிங் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்ததாக பலரும் குற்றம்சாட்டினர். அதில் கங்கனா ரனவத்தும் ஒருவர். குறிப்பாக நடிகை அலியா பட்டை தாக்கி அப்போது கடும் விமர்சனங்கள் செய்திருந்தார் கங்கனா. இயக்குனர் மகேஷ் பட்டின் மகள், நடிகை பூஜா பட்டின் தங்கை என்பதாலேயே அலியாவுக்கு … Read more

வாகனங்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்போர் குடும்பத்துக்கு இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்வு: வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாகன விபத்தில் சிக்கு வோருக்கு இழப்பீடு வழங்கு வதற்காக கடந்த 1989-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 25-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, வாகன விபத்தில் உயிரிழப் போரின் குடும்பத்தினருக்கான இழப் பீடு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப் படுகிறது. இதுபோல காயமடைந் தோருக்கான நிவாரணத் தொகை ரூ.12,500-லிருந்து ரூ.50 … Read more

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி!

ஒடிசா மாநிலத்தில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 850 மாவட்ட ஊராட்சி பதவிக்களுக்காக, ஐந்து கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற்றது. மொத்தம 79 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அனேகமாக அனைத்து இடங்களுக்குமான முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், ஆளும் பிஜு ஜனதா தளம் அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 851 இடங்களில் 786 இடங்களை கைப்பற்றி அக்கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. தேசிய … Read more