மஹா சிவராத்திரி கொண்டாட்டம்.! <!– மஹா சிவராத்திரி கொண்டாட்டம்.! –>

நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா சிவபக்தர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் பெருங்கூட்டமாக பக்தர்கள் சிவாலயங்களில் திரண்டு வழிபாடு செய்தனர். உலகம் முழுவதுமுள்ள இந்துக்களால் மஹா சிவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மஹாராஷ்டிர மாநிலம் திரிம்பாக் நகரிலுள்ள திரிம்பகேஸ்வரர் கோயில் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மஹா சிவராத்திரிக்காக பக்தர்கள் திரண்டு வந்து சிவனை வழிபட்டனர். ஒடிஷா – புவனேஷ்வரில் உள்ள லிங்கராஜர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஹா சிவராத்திரி … Read more

உக்ரைன் சூழ்நிலையை மதிப்பிடுவதில் மத்திய அரசு தோற்றுவிட்டது: காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையில் மோதல் உருவாகும் நிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. கடந்த மாதம் முதல் வாரத்தில் இருந்தே எந்த நேரத்திலும் ரஷியா உக்ரைன் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளது என அமெரிக்கா எச்சரித்து வந்தது. இதனால் சில நாடுகள் தங்களுடைய நாட்டு மக்களை உக்ரைனில் இருந்து வெறியேற உத்தரவிட்டது, தூதர்களும் அழைக்கப்பட்டனர். கடந்த மாதம் 23-ந்தேதி அமெரிக்க- ரஷிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்த நிலையில்தான் 24-ந்தேதி … Read more

ஜே.இ.இ. முதன்மை தேர்வு : ஏப்ரல் 16, 17 ஆகிய தேதிகளில் முதற்கட்டமாக நடைபெறும்

டெல்லி: ஜே.இ.இ. முதன்மை தேர்வு ஏப்ரல் 16, 17 ஆகிய தேதிகளில் முதற்கட்டமாக நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.  2ஆம் கட்ட தேர்வு மே 24 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறியுள்ளது.

பிப்ரவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1,33,026 கோடியாக உயர்வு

நாட்டின் ஜிஎஸ்டி வசூல் சென்ற பிப்ரவரி மாதத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 26 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 18 சதவிகிதம் அதிகமாகும். அதேநேரம், சென்ற ஜனவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வசூலான ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 986 கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வசூலில் … Read more

நிலைக்குழுக் கூட்ட அழைப்பில் வேண்டுமென்றே தாமதமா? – அப்துல்லா எம்.பி. புகார் மீது மக்களவை சபாநாயகர் விசாரணைக்கு உத்தரவு

புதுடெல்லி: “நிலைக்குழுக் கூட்டத்திற்கான அழைப்பு குறித்த நேரத்தில் அனுப்பவில்லை” என திமுக எம்.பி. அப்துல்லா அளித்த புகார் மீது மக்களவை சபாநாயகர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற எம்.பி.க்களின் நிலைக்குழுவின் ஒரு கூட்டத்திற்கு குறித்த நேரத்தில் அழைப்பு அனுப்பப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. மாநிலங்களவையின் திமுக எம்.பி.யான எம்.முகம்மது அப்துல்லாவின் புகார் மீதான விசாரணைக்கு மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மொத்தம் 24 உள்ளன. இதில், 16 மக்களவையின் நிர்வாகத்திலும், மீதம் உள்ள எட்டு நிலைக்குழுக்கள் … Read more

சிலிண்டர் விலை உயர்வு – பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிப்பு?

சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக, மத்திய அரசுக்கு, ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெயில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல் நாள் போரையடுத்து, கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் கூடுதலாக உயர்ந்தது. எனினும், தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் வர்த்தக உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை இன்று முதல் 105 ரூபாய் … Read more

நியமனம் செய்யப்பட்ட 2 வாரத்தில் பதவியை நிராகரித்த ஏர் இந்தியா சிஇஓ

ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இலகர் அய்சி என்பவரை டாடா குழுமம் நியமனம் செய்தது. துருக்கியைச் சேர்ந்த இவர் அந்நாட்டின் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும், துருக்கி அதிபர் ஏர்டோகானின் முன்னாள் ஆலோசகரும் ஆவார். டாடா குழுமம் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இலகர் அய்சியை நியமனம் செய்து அறிவித்தது. இவர் ஏப்ரல் 1-ம் தேதி முதல் சிஇஓ பொறுப்பு ஏற்க இருந்தார். ஆனால் வெளிநாட்டைச் … Read more

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் பேச்சு

டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் பேசினார். உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழந்தது தொடர்பாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் இரங்கல் தெரிவித்தார். அதேபோல் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினார்.

”நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள்தான் வெளிநாடுகளில் படிக்கிறார்கள்” – மத்திய அமைச்சர்

இந்தியாவில் நடத்தப்படும் தகுதித் தேர்வான நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் தான் வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்க செல்கிறார்கள் என மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார் இது தொடர்பாக பேசிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ” வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்க செல்லக்கூடிய மாணவர்கள் 90 சதவிகிதம் பேர் இந்தியாவில் நடத்தப்படும் தகுதித் தேர்வான நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் தான். மாணவர்கள் ஏன் மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் என்று விவாதிக்க இது … Read more

ஆபரேஷன் கங்கா | 3 விமானங்களில் 43 தமிழக மாணவர்கள் உட்பட 550 இந்தியர்கள் நாடு திரும்பினர்

புதுடெல்லி: உக்ரைனில் சிக்கிய சுமார் 550 இந்தியர்களுடன் இன்று மூன்று விமானங்கள் நண்பகலில் மும்பை மற்றும் டெல்லிக்கு வந்தடைந்தன. இதில் வந்த 43 தமிழக மாணவர்களை டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழ்நாடு அரசு இல்லத்தின் முதன்மை உள்ளுரை ஆணையர் அதுல்ய மிஸ்ரா காத்திருந்து வரவேற்றனர். ரஷ்யாவால் நிகழ்ந்த போர் காரணமாக உக்ரைனில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. இதனால், அவர்கள் அனைவரையும் இந்தியாவிற்கு பத்திரமாக அழைத்து வருவதற்காக ‘ஆபரேஷன் கங்கா’ மீட்பு நடவடிக்கை அமலாகி உள்ளது. இந்த … Read more